பிரபல படத் தயாரிப்பாளரும், நடிகையுமான நந்திதா தாஸின் வினா
வதோதரா, பிப் 13- ஹிட்லர் கூடத்தான் நலத்திட்டங்களைச் செய்தார். அதற்காக அவரை சிறந்தவர் என்று ஏற்க முடியுமா? அது போலத்தான் குஜராத் முதல் அமைச்சர் நரேந் திரமோடி என்றார் . ஹாலிவுட் பிரபல நடி கையும், படத் தயாரிப் பாளருமான நந்திதாதாஸ்.
வதோதரா, பிப் 13- ஹிட்லர் கூடத்தான் நலத்திட்டங்களைச் செய்தார். அதற்காக அவரை சிறந்தவர் என்று ஏற்க முடியுமா? அது போலத்தான் குஜராத் முதல் அமைச்சர் நரேந் திரமோடி என்றார் . ஹாலிவுட் பிரபல நடி கையும், படத் தயாரிப் பாளருமான நந்திதாதாஸ்.
இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநில மாக கொண்டாடப் படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், ஜெர்மன் அதிபர் ஹிட் லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர் நந்திதா தாஸ், இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட் டால் உள்ளிட்ட சினி மாக்களில் நடித்துள் ளார். இவர் 2002 -இல் குஜராத்தில் நடந்த முஸ் லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து பிராக் எனும் படம் எடுத்துள்ளார். வதோதராவில் நடை பெற்ற ஒரு கருந் தரங் குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜ ராத்திற்கும் 2012இன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர் மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப் பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனை களும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட் லர் ஒரு இசைப் பிரிய ராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந் தார். அக்காரணங்களுக் காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்ப தில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படு கிறார் என்று பத்திரிகை யாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.
மேலும் பத்து வரு டங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அகமதாபாத் தையும் வதோதராவை யும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியையும் எடை போடக் கூடாது என் றும் பின் தங்கிய சவு ராஷ்டிரா பகுதிகளை யும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என் றும் கூறினார்.
கலவரத்தை மறக்க முடியுமா?
2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம் மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்த மாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்ற னர். அப்படியிருக்கும் போது தங்கள் உடை மையையும் உறவு களையும் இழந்து நிற் கும் ஒரு சமூகத்தை, இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல் வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார்.
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் ரூ.24 லட்சம் கோடி சி.பி.அய். இயக்குநர் தகவல்
- சட்டசபையில் ஆபாச படம் பார்த்த விவகாரம்: முன்னாள் அமைச்சர்களிடம் காவல்துறை விசாரணை
- பிரதமர் சொன்னால் மன்னிப்பு சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்
- நாடு முழுவதும் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
- வேலைக்குத் திரும்புங்கள்'' பயிற்சி மருத்துவர்களுக்கு ஆந்திர முதல் அமைச்சர் வேண்டுகோள்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கூர்க்காலாந்து பிரச்சினையில் இழுத்தடிக்கும் மத்திய அரசு
- ஊழல் வழக்குகளை விசாரிக்கும் ம.பி. மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- வரதட்சணை கொடுமை பெட்ரோல் ஊற்றி கர்ப்பிணி எரித்துக்கொலை
- மும்பையில் கார் குண்டுகள் வெடித்து 52 பேர் பலி கணவன் - மனைவி உள்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை
- மாவோஸ்டுகள் கண்ணி வெடி தாக்குதல் பாதுகாப்பு படை அதிகாரிகள் 4 பேர் சாவு
No comments:
Post a Comment