Wednesday, February 15, 2012

காப்பி அல்லது தேநீர் எதில் அதிக அளவு காஃபின் உள்ளது?


காப்பி செடி                  டீ (தேயிலை) செடி
காப்பியில் அதிக அளவு காஃபின் உள்ளது. உலர்ந்த தேயிலையில் காஃபிக் கொட்டையில் இருப்பதை விட அதிக அளவு காஃபின் உள்ளது. ஆனால் சராசரியான ஒரு கோப்பை காப்பியில் அதே அளவுள்ள தேநீரில் இருப்பதைப் போன்று மூன்று மடங்கு காஃபின் உள்ளது. இதன் காரணம் காப்பி தயாரிக்க அதிக அளவு காப்பிக் கொட்டை தேவை என்பதுதான்.
காப்பி  மற்றும் தேநீரில் உள்ள காஃபினின் அளவு வேறு சில உண்மைகளையும் சார்ந்திருப்பதாகும்.  கொதிக்க வைக்கும் தண்ணீர் அதிக வெப்ப நிலையை அடையும்போது காப்பிக் கொட்டை அல்லது தேயிலையிலிருந்து அதிக காஃபின் பெறப்படுகிறது. ஆவியில் தயாரிக்கப்படும் எக்ஸ்பிரசோ காப்பியில், காய்ச்சும் காப்பியை விட அதிக அளவு காஃபின் உள்ளது. கொதிக்கும் தண்ணீர் எவ்வளவு நேரம் காப்பிக் கொட்டை அல்லது தேயிலையுடன் தொடர்பு கொண்டிருக் கிறதோ அது அதில் உள்ள காஃபின் அளவை பாதிக்கும். அதிக அளவு தொடர்பினால் அதிக அளவு காஃபின் உண்டாகும்.
அத்துடன் காப்பிக் கொட்டை அல்லது தேயிலையின் வகையும் முக்கியமானது. அவை எங்கு வளர்ந்தன,  காப்பிக் கொட்டை எப்படி வறுக்கப்பட்டது, தேயிலை எப்படி பறிக்கப்பட்டது என்பவையும் முக்கியமானவை.
காப்பிக் கொட்டை எவ்வளவு முறுவலாக வறுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு அதில் காஃபின் குறைவாக இருக்கும்.   தேயிலையில் பெரிய இலைகளை விட இலைகளின் நுனிகளில் அதிக அளவு காஃபின் உள்ளது.
30 மில்லி எக்ஸ்பிரசோ காப்பியில் உள்ள அதே அளவு காஃபின் 150 மில்லி தேநீரில்  உள்ளது. வடிகட்டும் காப்பியில் இருக்கும் காஃபினில் பாதி அளவுதான் இன்ஸ்டன்ட் காப்பியில் உள்ளது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)


.
 2

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...