Friday, February 17, 2012

இவர்கள் மீது ஜூவி கூட் டத்துக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது?


கேள்வி: திகார் சிறை யில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆ.ராசா ஹிந் துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ் தொழிற் சாலையைப் புனரமைக்க வேண்டும் என்று மத்திய கனரகத் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பிரஃபுல் படேலுக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறாரே!
பதில்: இதுக்கு பேரு தான் ஃபிலிம் காட்டுறதா?
- ஜூனியர் விகடன் 19.2.2012
சிறையில் இருக்கும் ஒருவர் தன் தொகுதி சம் பந்தப்பட்ட பிரச்சினையின் மீது அக்கறை கொள்கிறார் என்பது இந்தப் பார்ப் பனர்களின் பார்வையில் ஃபிலிம் காட்டுவதாகத் தெரிகிறது. இவாளின் லோக குரு சங்கராச்சாரி யார் மாதிரி சிறையில் இருக்கும்போது கூட  மலஜலம் கழிக்கக்கூட வாழையிலை கேட்கும் வெட்டி சம்பிரதாயத்தைப் பற்றி ஒருவரி எழுதிய துண்டா?
பிணையில் வெளி வந்து சாட்சிகளை கலைப் பது குறித்து கால்வரி எழுதியதுண்டா?
ஆ.ராசாவுக்குப் பதில் பார்ப்பனர் இது மாதிரி முயற்சியில் ஈடுபட்டு இருந்தால் அடேயப்பா எப்படியெல்லாம் தங்கள் பேனா முனைகளைச் சது ராடச் செய்திருப்பார்கள்?
சிறையில் இருந்த போதும் என்னே கடமை உணர்வு!  மக்கள்மீது எந்த அளவு அக்கறை? தொழி லாளர்களின் தோழன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! எத் தனை ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் மீது கவனம் செலுத்துகிறார் என்று ஒரு தனிப் புராணமே எழுதித் தள்ளி இருக்க மாட் டார்களா?
உதகை ஃபிலிம் தொழிற்சாலையில் பணி யாற்றுவோரில் பெரும் பாலோர் அப்பகுதி ஒடுக் கப்பட்ட மக்கள் தானே! தோடர்களும், குரும்பர் களும், இருளர்களும் பழங் குடி  மக்களும் (66 விழுக் காடு அளவுக்கு) தானே! தொழிற்சாலையை இழுத்து மூடினால் இந்தப் பஞ்ச மர்களும், சூத்திரர்களும் தானே பாதிக்கப் பட்டு நடுத் தெருவில் நிற்பார்கள்? இவர்கள் மீது ஜூவி கூட் டத்துக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது? இதில் முக்கியமாகக் கவனிக்கத் தக்கது என்ன தெரியுமா? இராசா அவர்கள் சிறையிலிருந்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியது ஒன்றும் வீண் போய்விடவில்லை. கைமேல் பலனும் கிடைத்திருக்கிறது.
அந்தத் தொழிற்சாலை யின் புத்தாக்கத்துக்காக ரூ.272 கோடி வழங்கிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனைப் பாராட்ட மனம் வருமா பார்ப்பன வட்டாரத்துக்கு? ஆம். ஆ.ராசா தாழ்த்தப்பட்ட குடி மகன்தானே! அவர் என்ன செய்தாலும், இவாளுக்குப் ஃபிலிம் காட்டுவதாகத் தானே இருக்கும்?
பார்ப்பனர் என்ன எழுதினாலும் அதற்கொரு இனப் பார்வை, வருணப் பார்வை இருக்கும் என்ப தற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டே!
- மயிலாடன்


.
 6

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...