நம் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி அலகாபாத் நகரில் ஜே.கே. இன்ஸ்டியூட் ஆப் அப்ளை யடு பிசிக்ஸ் என்ற அறிவியல் அரங்கத்தை திறந்து வைத்து பேசும் போது கூறினார்:
சோதிடம், ஜாதகம் கணிப் பவர்கள் நாட்டிற்கு மிக ஆபத் தானவர்கள். சோதிடர்கள் நாட்டு முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவார் கள் என்று சிலர் கூறுவார்கள். அப்படி கூறுகிறவர்களும் அப்படி சோதிடத்தை நம்பி அவர்களிடம் போய் சோதிடம் பார்ப்பவர்களும் சோதிடர்களை விட நாட்டுக்கு அதிகக் கேடு விளைவிக்க கூடியவர்கள் என்றார்.
நேரு அவர்கள் 1956இல் கூறி மறைந்து போனார். 52 ஆண்டுகளுக்கு மேலாகியும் சோதிடம், ஜாதகத்தின் மேல் உள்ள நம்பிக்கை நம் நாட்டில் குறையவேயில்லை என்றுதான் இந்த மூடநம்பிக்கைகளை ஒழித்து மக்கள் மனதில் விழிப்புணர்வை உண்டாக்க முடியுமோ?
(7.4.1956இல் இந்து நாளிதழில் வெளிவந்த செய்தித் துண்டு)
கதிரவனைக் கைக்குட்டையால் மறைக்க முடியுமா? அறிவியல் வளர்ச்சியை மூட நம்பிக்கைகளால் தடுக்க முடியுமா? ஒரு பக்கம் அறிவியல் வளர்ந்து உலகமே மனிதனின் ஆதிக்கத்தில் வளர்ந்து கொண்டிருந்தாலும் மூட நம்பிக்கைகளும் பேய் கதைகளைப் போல பெருகிக் கொண்டேயிருப்பதை காண்கிறோம்.
எந்த மதத்தினரையும் மூட நம்பிக்கை என்ற பேய் தாக்காமலிருப்பதில்லை. கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் விடுவதில்லை. நம் நாட்டு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களிடம் மட்டுமல்ல, அரபு நாடுகளின் முஸ்லிம்களிடமும், மேலைநாடு களின் கிறிஸ்தவர்கள் சிலரிடமும் மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நம் நாட்டில் அனைத்து மதத்தினரி டமும் மேல் நாட்டவரை விட மூட நம்பிக்கைகள் அதிகம் இருப் பதைக் காண்கிறோம்.
ஓரிடத்திற்குப் புறப்பட்டு போனால் போகிறேன் என்று சொல்லமாட்டார்கள். போய் வருகிறேன் என்று சொல்லுவார்கள். அல்லது சுருக்கமாக, வருகிறேன் என்றும் கூறுவார்கள். வேறு எந்த மொழிக்காரரும் இப்படிக் கூறுவதாக தெரிய வில்லை. போகிறேன் என்றும் அல்லது புறப்படு கிறேன் என்றும் பிரிகிறேன் என்றும் விடை பெறுகிறேன் என்றுதான் கூறுகிறார்கள்.
இறந்தவர்கள் வீட்டுக்குப் போய் மரணச் சடங்குகளை முடித்து விட்டு துக்கம் விசாரித்து விட்டுத் திரும்புகிறவர்கள் போய் விட்டு வருகிறேன் என்று கூறினால் வீட்டில் வேறு மரணங்கள் ஏற்பட்டு விடுமாம். அதனால் அந்த வீட்டாரிடம் சொல்லாமலே புறப்பட்டு விடுவார்கள். இப்படி மூட நம்பிக்கைகள் நாட்டில் ஏராளம் ஏராளம் புதிதாகத் திருமணமாகி மும்பை, சென்னை, புதுடில்லி போன்ற வெளிமாநிலங் களுக்குப் புதிதாகப் புறப்படுபவர்கள். திங்கட் கிழமை போக் கூடாதென்றும் முந்திய நாளே திருநெல்வேலி வந்து ரயில்வே தங்கும் அறையில் காத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். வசதியுள்ளவர்கள் விடுதியில் தங்குவார்கள். அதனால் திருடர்களிடம் பணத்தை பறி கொடுப்பவர்களும் உண்டு.
மூடநம்பிக்கைகள் பலவிதம் நூலிலிருந்து
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...
- நீர் பொங்குமாம்!
- செவ்வாய்கிரகத்தில் பெண்ணா?
- குருக்கள் தட்சணை கேட்க......
- இந்தியாவில் கடவுள் நம்பிக்கை! மிர்ரர் ஏட்டில் வெளிவந்த கடிதம்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment