Friday, February 10, 2012

எவ்வளவு வேகத்தில் ஒளி பயணம் செய்கிறது?

எவ்வளவு வேகத்தில் ஒளி பயணம் செய்கிறது?
ஒளியின் வேகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அடிக்கடி கூறப்படுவதுண்டு. ஆனால் அது உண்மையல்ல. வெற்றிடத்தில் மட்டும்தான் ஒளி விநாடிக்கு 300,000 கி.மீ. (186,282 மைல்) வேகத்தில் பயணம் செய்யும். வேறு எந்த ஊடகத்திலும் பயணம் செய்யும்போது, அந்தந்த ஊடகத்திற்கு தகுந்த மாதிரி ஒளியின் பயண வேகம் வேறுபடும். பெரும்பாலும் அந்த வேகம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கும் வேகத்தை விடக் குறைவாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக வைரத்தினூடே பயணம் செய்யும்போது ஒளியின் வேகம் வினாடிக்கு 130,000 கி.மீ. (80,000 மைல்) அளவில்தான் இருக்கும்.
அண்மைக் காலம் வரை ஒளி மிகக் குறைந்த வேகத்தில் பயணம் செய்வது - 272 டிஊ வெப்பநிலையில் உள்ள சோடியத்தினூடே பயணம் செய்யும்போது அதன் வேகம் மணிக்கு 60 கி.மீ. (38 மைல்) என்று பதிவாகியிருந்தது.
2000 இல் அதே ஹார்வார்டு பல்கலைக் கழகக் குழு, ருபீடியம் (Rubidium)  என்ற தனிமத்தின் மீது பாய்ச்சி ஒளியை அங்குமிங்கும் நகர முடியாதபடி ஒரே இடத்தில் நிறுத்திக் காட்டியது.
இந்த ருபீடியத்தை ராபர்ட் பன்சன் (1811-99) என்பவர் கண்டுபிடித்தார். ஆனால் அவரது பெயரிடப்பட்டுள்ள பன்சன் ப்ர்னரை அவர் கண்டுபிடிக்கவில்லை.
இதில் உள்ள விந்தையான செய்தி என்னவென்றால், ஒளி கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாகும். ஒளியை உங்களால் பார்க்க முடியாது. ஆனால், ஒளி எந்தப் பொருளின் மீது படுகிறதோ அதை மட்டும் உங்களால் பார்க்க முடியும். சரியான நேர்கோணங்களில் ஒரு வெற்றிடத்தில் பாய்ச்சப்படும் ஒளிக்கற்றையை நம்மால் பார்க்க முடியாது.
ஒளி கண்ணுக்குத் தெரிவதாக இருந்தால், அது நமது கண்களுக்கும், நாம் பார்க்கும் பொருள்களுக்கும் இடையே ஒரு திரையைப் போன்று பனிமூட்டம் போன்றே இருக்கும். இருட்டும் இது போல் வியப்பைத் தருவதே ஆகும். இருட்டு என்று எதுவும் இல்லை. ஆனால் அதனூடே நம்மால் எதையும் பார்க்க முடியாது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...