தொழிற்சாலையின் புத்தாக்கத்துக்கு மத்திய அரசினை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
உதக மண்டலம் ஃபிலிம் தொழிற்சாலையைப் புத்தாக்கம் செய்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் தொடர்பு கொண்டு வலியுறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உதக மண்டலம் ஃபிலிம் தொழிற்சாலையைப் புத்தாக்கம் செய்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் தொடர்பு கொண்டு வலியுறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் தொழிற்சாலையில் பின்தங்கிய மாவட்டம் நீலகிரி மாவட்டம். ஊட்டியின் தட்பவெப்ப நிலையைக் கணக்கில் கொண்டு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட்டது. பின் 1986இல் ஒரு புதிய பகுதியும் தொடங்கப்பட்டு அமெரிக்க நிறுவனத்தின் கூட்டோடு பாலிஸ்டர் கலந்த எக்ஸ்ரே பிலிம் தயாரிக்கப்பட்டது.
80 விழுக்காடு வியாபாரம் நடத்திய நிறுவனம்!
ஊட்டியில் செயல்பட்டு வந்த இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை வியாபாரச் சந்தையில் 80 விழுக்காட்டைப் பிடித்து நல்ல அளவு இலாப நோக்கில் நடைபோட்டு வந்தது. இந்திய அரசின் தாராளமயக் கொள்கையால் லைசென்ஸ் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாலும், இறக்கு மதிக்கு வரிகள் தளர்த்தப்பட்டதாலும் சிறு நிறுவனங்கள் கூட வெளிநாடுகளிலிருந்து பிலிம்களை இறக்குமதி செய்யப்பட்ட காரணத்தாலும் உதகைத் தொழிற்சாலை யின் இலாபகர நிலை பெரும் பாதிப்புக்கு ஆளானது.
பணியாளர்கள் குறைப்பு!
80 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக சந்தை வியாபாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது.
இதன் காரணமாக உற்பத்தியின் அளவும் குறைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
4100 பணியாளர்கள் 1992இல் இருந்தனர் என்றால் படிப்படியாக 2002இல் வெறும் 1370 பேர்தான் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
இந்தியாவிலேயே இது ஒன்றுதான்!
மருத்துவம், அச்சுத்தொழில், கல்வி, ஒலிபரப்பு பாதுகாப்புத் துறைகளுக்கு தேவையான படச்சுருள்களை ஒருங்கிணைந்து தயாரிக்கும் நிறுவனம்இந்தியா விலேயே இது ஒன்றுதான்!
இத்தகைய தொழிற்சாலைகள் உலகில் மொத்தம் ஆறுதான். இத்தகைய நிறுவனம் மிகப் பெரிய அளவில் போற்றி வளர்க்கப்படுவதற்குப் பதிலாக, இதனை இழுத்து மூடுவதிலேயே மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதுபோல் தோன்றுகிறது.
தி.மு.க. ஆட்சியில்...
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பிலிம்கள், இந்நிறுவனத்திலிருந்தே வாங்கப்பட வேண்டும் என்ற ஆணை நடைமுறையில் இருந்து வந்தது. இப்பொழுது அந்த நிலை மாற்றப்பட்ட தாகத் தெரிகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு ஆ. இராசா அவர்கள் சிறையில் இருந்தாலும், தனது தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கவலை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலுக்குக் கடிதம் எழுதி, ஊட்டித் தொழிற்சாலையின் புணரமைப் புக்கு நிதி உட்பட எல்லா வகையிலும் உதவிட வேண்டும் என்று எழுதியுள்ளது பாராட்டத்தக்கதாகும்.
66 சதவிகித பணியாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களே!
நீலகிரி மாவட்டம், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதியாகும். இந்த நிறுவனத்தில் தோடர், குரும்பர், இருளர், பணியர், காட்டு நாயக்கர் போன்ற பழங்குடி மக்களே பெரும்பாலும் வாழுகின்றனர்.
ஊட்டி தொழிற்சாலையில் பணியாற்றுவோரில் 66 சதவிகிதத்திலும் இத்தகைய பழங்குடி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே.
இந்தத் தொழிற்சாலையை மூட நினைத்தாலோ, பலகீனப்படுத்த நினைத்தாலோ, அதன் விளைவு இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கச் செய்வதாகும்.
சமூகநீதிக் கண்ணோட்டம்
இதில் பணியாற்றுவோரின் பிள்ளைகள் இப்பொழுது தான் கல்வி வாசனையைப் பெற ஆரம்பித்துள்ளனர். எந்தக் காரணத்தாலோ ஊட்டி பிலிம் தொழிற்சாலை இயங்குவது தடை செய்யப்பட்டால், இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் இருட்டறையில்தான் தள்ளப்படும்.
வெறும் தொழிற்சாலை வியாபாரம் என்பதோடு சமூக நீதிப் பிரச்சினை இதில் உள்ளடக்கமாக உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
வெறும் தொழிற்சாலை வியாபாரம் என்பதோடு சமூக நீதிப் பிரச்சினை இதில் உள்ளடக்கமாக உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து திரு. இராசா எம்.பி., அவர்கள் கடிதத்தில் தெரிவித்திருக்கும் தகவல் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. ஊட்டி பிலிம் தொழிற்சாலையைத் தக்க வைத்துக் கொள்வதிலும், வளர்ச்சித் திசைக்கு அதனை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு அரசியல் கண்ணோட்டமின்றி அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று வற்புறுத்து கிறோம்.
மத்திய அரசில் தி.மு.க. இருக்கிறது என்பதாலோ இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை காட்டுகிறார்கள் என்பதாலோ, ஊட்டி தொழிற்சாலை எக்கேடு கெட்டால் என்ன என்ற மனோபாவம், தமிழ் நாட்டு ஆட்சிக் கண்ணோட்டத்தில் உகந்ததல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் அமைச்சர் செய்ய வேண்டியது
நாளை மறுநாள் (10.2.2012) உதகை ஃபிலிம் தொழிற்சாலையின் (HPF) புனரமைப்புத் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திரு. ஆ. இராசா எம்.பி. அவர்கள் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இத்தொழிற் சாலைக்கான மதிப்பீட்டுத் தொகையில் நிலுவையில் உள்ள ரூ.272 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும், கடந்த 20 ஆண்டு காலமாக தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த ஊதிய உயர்வினையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இடையில் ஒரு நாள் இருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் மத்திய அமைச்ச ருடன் தொடர்பு கொண்டு, ஊட்டி பிலிம் தொழிற் சாலையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் (நிதி உள்பட) செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
கட்சிக் கண்ணோட்டமின்றி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் போதிய அக்கறையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.
திராவிடர் கழகப் போராட்டங்கள்
இதற்கு முன்பு பல தடவைகள் ஊட்டி தொழிற்சாலை மூடப்படும் அபாயம் வந்த போதெல்லாம் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தியுள்ளது என்பதை யும் மறுபடியும் அந்த நிலைக்குத் தள்ள வேண்டாம் என்றும் மத்திய - மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தலைவர்
திராவிடர் கழகம்
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- இந்திய அரசே, இலங்கைக்கு எதிராக செயல்படுக! சென்னையில் மார்ச் 6 ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
- அய்.நா. தீர்மானம் இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது கலைஞரின் கருத்து வரவேற்கத்தக்கது தமிழர் தலைவர் அறிக்கை
- 2014 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மிகப்பெரிய அவலத்தைச் சந்திக்கும் தமிழர் தலைவரின் எச்சரிக்கை - அறிக்கை!
- திராவிடர் சங்கம் தோன்றிய நூற்றாண்டு (1912-2012)
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பகுத்தறிவு, தன்மானம், இனமானம், பண்பாடு, சுயமரியாதையைக் கட்டிக் காப்போம்
- கூடங்குளம் பிரச்சினையில் இந்து முன்னணி மதக்கலவரத்தை உருவாக்கிடத் திட்டம்!
- மீனவர்களுக்கென தனியே பாதுகாப்புப் படை, மத்திய அரசு உருவாக்கிட வேண்டும்
- 13,500 மக்கள் நலப் பணியாளர்கள்: நீதிமன்ற தீர்ப்பின்படி உடனே பணியில் அமர்த்திடுக!
- சல்மான் ருஷ்டியை வரவிடாமல் காங்கிரஸ் ஆட்சி தடுப்பதா?
Comments