1976-க்கு முன்னும் 1895-க்கு பிறகும் இந்த 58 கிலோ மீட்டர் தொலைவுள்ள பள்ளத்தாக்கில் பெருவெள்ளம் உயர்ந்து (பள்ளத்தாக்கின் ஆழம் 200 அடிக்கு கீழே) ஓடியதாக புள்ளி விவரங்கள் ஏதும் இல்லை. ஏன் முல்லை பெரியாறு அணை கீழேயுள்ள இடுக்கி பள்ளத்தாக்கு எந்த வகையிலும் பாதிக்கப்பட்டதாகவோ சேதமடைந்ததாகவோ வரலாற்றுத் தகவல்கள் ஏதும் இல்லை என்று வலியுறுத்தி கூறப்படுகிறது. இருந்தாலும் கேரள அரசு 1979 முதற்கொண்டு இதே பொய்ப் பல்லவியை விடாது தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கிறது. கேரள மக் களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி - 3: அணை உடைந்தால் கேரள மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
இது கேரள அரசியல்வாதிகளின் திட்டமிட்ட சதிக்கூற்று இதில் எள்ளளவும் உண்மையில்லை. எந்தச் சேதமும், பாதிப்பும் ஏற்படாது. எப்படி அவ்வளவு உறுதியாகக் கூற முடியும்? இதோ பொறியியல், நிலவியல் புள்ளி விவரங்கள் / நீரியக்கத் தகவல்கள் உண்மைகள்.
முல்லை பெரியாறு அணை கடல் மட்டத்திற்கு மேலே (ஆளுடு) 2864அடி, 136அடி நீர்மட்ட அளவு - கடல் மட்டத்திற்கு மேலே 2845அடி.
50 கி.மீ கீழே உள்ள இடுக்கி அணை கடல்மட்டத்திற்கு மேலே 2403 அடி.
முல்லைப் பெரியாறு அணையின் பின்பக்கப் பள்ளத்தாக்கு... 2713 அடி...
பள்ளத்தாக்கின் ஓடு நீளம் 58 கி.மீ. இடுக்கி அணையருகில் - பள்ள மட்டம் 2000 அடி.
வெள்ளம், முல்லைப் பெரியாற்றி லிருந்து, இடுக்கி அணை சேர ஆகும் நேரம் 4 மணி.
தற்போது முல்லைப் பெரியாற்றில் உள்ள நீர்மட்டம் 136 அடி - நீர் இருப்பு 6 ஐஆஊ.
அணை உடைந்தால் வெள்ளம் உயரும் அதிகமட்டம் 2700 அடி (அருகில் உள்ள நிலமட்டம் 3239 அடி) ஞீ இடுக்கி அணை சேரும் போது நீர் உயரும் மட்டம் 2315 அடி (அருகில் உள்ள நிலமட்டம் 2568 அடி)
இடையில் உள்ள கேரள ஊர்களின் உயரம் (கடல் மட்டத்திற்கு மேலே)
குமுளி அணையின் பின்புறம் (+) 3100 வண்டிப் பெரியாறு (+)2743 பாம்பனார் (+)3401 ஏலப்பாரா (+)3648 வல்லாரம் குன்னு... (+)3422. புல்லுமேடு.. (+)3583
எனவே உயரும் வெள்ள மட்டத்தை விட (2700 அடி / 2315 அடி) எல்லா ஊர்களும் 200 அடி / 300 அடி உயரத் திற்குமேலேயே உள்ளன. மேலும் விவரங்களுக்கு அணை உடை ஆய்வு (னுயஅ க்ஷசநயம ஹயேடலளளை) - இணைப்பைப் பார்த்திடுக).
தண்ணீர் மேலிருந்து பள்ளத்தை நோக்கியே ஓடும், மேட்டை நோக்கி ஏறாது எனவே கேரளாவில் உள்ள எந்த ஊரும் மக்களும் அவர்களின் சொத்துக்களும் ஒரு போதும் பாதிக் கப்படமாட்டா / சேதமும் அடையா.
கேரளா அரசியல்வாதிகளும், ஊடகங் களும் ஒரே பொய்யை திரும்பத் திரும்ப தொடர்ந்து சொல்லி அனைவரையும் தங்களின் சொந்த அரசியல் ஆதாயத் திற்காக - மக்களை முட்டாள்களாக் கப் பார்க்கிறார்கள். பொறியியல் - நிலவியல் - நீரியக்கத் தகவல்கள் அவற்றைப் பொய்யாக்குகின்றன.
கேள்வி - 4: இது தமிழக மக்களுக்கு - எங்களைப் போன்ற பொறியியல் வல்லுநர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. மத்திய அரசும் - உச்சநீதி மன்றத்தின் அதிகாரம் அளிக்கப்பட்ட வல்லுநர் குழுவும் (அய்வர் குழு) - கேரளாவிடம் மேற்குறிப்பிட்ட தகவல் களையோ / புள்ளி விவரங்களையோ ஏன் கேட்கவில்லை?
1) எந்த ஆய்வு குழுவும் ஏன் எந்த நீதிமன்றமும் யாராவது ஒரு குறையாளர் (Petitioner) ஒரு கோரிக்கையை தெரி வித்தால் அதற்குச் சான்றாக - பக்க பலமாக உரிய தகவல்களையும், சான்றேடுகளையும், நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்க வேண்டும். வெறுமனே கோரிக்கையை வைத்து நீதிமன்றத்தின் நேரத்தையும், அரசின் நிதியையும் வீணடிப்பதும் அரசியல் சட்டத்தின்படி இடமிருப்பதாக நமக்கு தெரியவில்லை. இதைப் போல மாநில அரசிடமோ மத்திய அரசிடமோ ஒரு கோரிக்கை வைக்கப்படு மானால் அதற்குத் தேவையான எல்லா ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இந்த முல்லை பெரியாறு அணை வழக்கில் மேற்குறிப்பிட்ட எந்த தகவல்களும், சான்று ஆவணங்களும் இணைத்துச் சமர்ப்பிக்கவே இல்லை. எல்லாம் வெறும் வாய் வார்த்தைகளாகவே உள்ளன. இதை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் ஏன் கண்டு கொள்ளவே இல்லை என்பது எங்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது. அதுவரை இப் போதைய துரோகமும் தொடரும். தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டிய நேரமிது.
கேள்வி - 5: நாங்கள் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் (Tansea) தொடக்கத்திலிருந்தே முல்லை பெரியாறு அணைச்சிக்கல் - ஓர் அரசியல் பிரச்சினை அல்ல - முழுக்க முழுக்க இது ஒரு பொறியியல் - தொழில் நுட்பம் சாரந்த பிரச்சினை என்று வலி யுறுத்தி - இவை தொடர்பான எல்லாப் புள்ளி விவரங்களையும், தகவல்களையும், முழுமையாகத் தந்து அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். (சிறு நூல், குறுந்தகடு, துண்டறிக்கை கணக்கியல் உருவ ஆய்வு முதலியன) தமிழ்நாட்டு முதலமைச்சரும் இதைப் பற்றியெல்லாம் விளக்க அறிக்கைகள் தந்து வருகிறார். ஆனால் உண்மையிலே ஈடுபாடுகாட்டிச் சிக்கலை, விரைவாகவும் மிகச் சரியாகவும், தீர்க்க வேண்டிய பொறுப்புள்ள மத்திய அரசு (கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் வல்லு நர்களைக் கொண்டு விளக்கம் தந்தது) - முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மட்டும் வெறும் பார்வையாளராக மட்டும் (Mute Spectaror)வேடிக்கை பார்ப்பது ஏன்?
1) மத்திய அரசுக்கோ அதில் பதவி வகிக்கும் தமிழ்நாட்டு அமைச்சர் களுக்கோ தமிழ்நாட்டின் நலன் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழ்நாட்டின் அமைதியான வளர்ச்சி இவற்றில் எப் போதும் அக்கறை இருந்ததாக நடந்த நிகழ்வுகள் தெரிவிக்கவில்லை. (ஈழத் தமிழர் இனப்படுகொலை கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்தது தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற் படையால் தாக்கப்படுதல் போன்ற பலவற்றை இங்கே குறிப்பிடலாம்).
2) தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு எதிர் லாவணி பாடவே நேரம் போதவில்லை.
3) செய்தி இதழ்களும் ஊடகங்களும் தொலைக்காட்சியும் - சினிமா குத்துப் பாட்டு மூடநம்பிக்கையை வளர்க்கும் நெடுந்தொடர்கள் இவைகளை நம்பியே பிழைப்பு நடத்துகின்றன. முல்லை பெரி யாறு பிரச்சினையில் தான் ஏறக்குறைய அனைவரும் (காங்கிரசு தவிர) ஒரே குரலில் தனித்தனியாக பேசி வருகின் றனர். இவர்கள் ஓரணியில் ஒன்று சேர்ந்து வலியுறுத்தினால் மத்திய அரசும் தன் போக்கில் மாறும் / மாற்றமும் ஏற்படும். அதுவரை இப்போதைய துரோகமும் தொடரும். தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டிய நேரமிது.
(தொடரும்)
No comments:
Post a Comment