சட்டப் பேரவையில் இன்று
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் 10 நாள்கள் இடைநீக்கம் தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.அய், சி.பி.எம். உறுப்பினர்கள் வெளிநடப்பு
சென்னை, பிப். 2- அவை மரபுகளை மீறிய தாக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை சட்டப் பேரவையிலி ருந்து 10 நாள்கள் இடைநீக்கம் செய்வதாக சட்டமன்றத்தில் சட்டப் பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் அறிவித் தார். இதனைக் கண் டித்து தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.அய்., சி.பி.எம். உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டமன்றத்தில் இன்று (2.2.2012) கேள்வி நேரம் முடிந்தவுடன் பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் அவை உரிமைக்குழுவின் தலை வர் தனபால் அறிக்கை அளிப்பார் என தெரி வித்தார். இதையடுத்து பேரவைத் துணைத் தலைவரும், அவை உரிமைக் குழுவின் தலை வருமான தனபால் அவர் கள் அவை உரிமைக் குழுவின் அறிக்கையை அளிக்கிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து பேரவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை விதி 229(ஆ) படி இன்றே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படவேண் டும் என கேட்டுக் கொண்டார். இதை யடுத்து இத்தீர்மா னத்தை அவை முன்னவர் கொண்டு வந்தார். பின் னர் இந்தத் தீர்மானம் பேரவைத் தலைவரால் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அப்பொழுது எதிர்க் கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்தி ரன் இந்தத் தீர்மானத் தின்மீது கருத்து சொல்ல அவை உறுப்பினர் களுக்கு உரிமை உண்டு. இத்தீர்மானம் அவை யின் சொத்து. எனவே கருத்துச் சொல்ல உரிமை உண்டு என்றார். இதையடுத்து அவை உரிமைக் குழுவின் தீர் மானத்தை தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சி.பி.எம்., சி.பி.அய். சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த் தனர்.
இருப்பினும் அத்தீர் மானம் கொண்டு வரப் பட்டு பேரவைத் தலை வர் நிறைவேற்றி பேர வைத் தலைவர் டி.ஜெய குமார் கூறியதாவது:
இன்று பேரவை முன்னவர் அவர்கள் கொண்டு வந்து அவை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி எதிர்க் கட்சித் தலைவர் விஜய காந்த் இந்த சட்ட மன்றக் கூட்டத்திலும், அடுத்த சட்டமன்ற கூட் டத்திலும் இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாள்கள் வரை அவை நடவடிக் கைகளிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்.
இக்காலத்தில் விஜய காந்த் அவர்கள் எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையிலும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறை யிலும் வழங்கப்பட் டுள்ள எந்தவித ஆதாயத் தையும், ஊதியத்தையும், சலுகைகளையும் தகுதி களையும் பெறமுடி யாது. 1.2.2012 அன்று அவைக்கு வந்திருந்து, அவை நடவடிக்கை களுக்கு குந்தகம் விளை வித்த தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை, உரி மையை வரும் காலங் களில் முறை கேடாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் அவர்களை மன்னித்து இனி பேரவையின் கண் ணியத்தையும், கட்டுப் பாட்டையும் காப்ப தற்கு உறுதுணையாக இருந்து இதுபோன்ற சூழ்நிலை திரும்பவும் எழாது பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மேற் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட் டால் கடுமையான தண் டனைக்கு ஆட்பட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கையுடன் அவர்கள் மீதான உரிமை மீறல் பிரச்சினை இத்துடன் விட்டுவிடப் படுகிறது என பேரவைத் தலைவர் டி.ஜெயக் குமார் அறிவித்தார்.
பேரவைத் தலைவர் இதை அறிவித்ததும், இதைக் கண்டித்து தேமுதிக, திமுக, சிபிஎம், சிபிஅய் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
No comments:
Post a Comment