கடலில் அதிக ஒலி எழுப்புவது கூனிறால் வகை மீனாகும். கடலிலோ நிலத்திலோ அதிக ஒலியை எழுப்பும் உயிரினம் நீலத் திமிங்கிலம்தான். என்றாலும் இயற்கையான ஒலியை மிக அதிக அளவில் கூனிறால்கள் எழுப்பு கின்றன.
நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து, ஒலியினால் நீரில் உள்ள பொருள்களைக் கண்டறிவதற்கான கருவியை காதில் பொருத்தியிருப்பவர்களை, கூனிறால் படுகையின் ஒலி செவிடாக்கி செயலாற்ற முடியாதவர்களாக்கி விடும்.
அப்படுகைக்கு அடியில் இருந்து அதற்கு மேலே எழும் ஒலியையோ, மேலே இருந்து கீழே எழும் ஒலியையோ கேட்க இயலாது. கீழே எழும் ஒலியை, படுகையின் ஊடே ஒரு பெரிய பாய்மரத்தை ஏற்றுவதன் மூலம் மட்டுமே, மேலே கேட்க இயலும்.
ஒரு கூனிறால் கூட்டத்தின் சத்தம் காதைப் பிளக்கும் அளவுக்கு 246 டெசிபில் அளவைக் கொண்டது. ஒலி நீரில் அய்ந்து மடங்கு வேகமாகச் பயணிக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அது காற்றில் 146 டெசிபில் அளவுக்குச் சமமானதாகும். ஒரு ஜெட் விமானம் புறப்படும்போது எழும் ஒலியான 140 டெசிபல் ஒலியை விட இது அதிகமானதாகும். உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் பன்றி இறைச்சியை வறுக்கும்போது எழும் ஒலிக்கு இதனை சில நோக்குநர்கள் ஒப்பிடுகின்றனர்.
தங்களின் அளவுக்கு மீறிய தாடைகளை சத்தத்துடன் பலகோடிக்கணக்கான கூனிறால்கள் ஒரே நேரத்தில் மூடுவதால் ஏற்படும் ஒலி இது. வெப்பமண்டலத்திலும், துணை வெப்ப மண்டலத்திலும் உள்ள அதிக ஆழமற்ற நீரில் காணப்படும் இந்த கூனிறால்கள் பல்வேறுபட்ட Alpheus and Synalpheus இனங்களைச் சேர்ந்தவையாகும்.
ஆனால் இதைவிட ஆர்வம் அளிக்கும் செய்திகளும் உள்ளன. ஒரு வினாடிக்கு 40,000 படங்கள் என்ற விகிதத்தில் எடுக்கப்பட்ட வீடியோ படங்களில் இருந்து, இக் கூனிறால்கள் தங்கள் தாடைகளை மூடி 700 மைக்ரோ வினாடிகள் கழிந்த பின்னரே இந்த ஒலி எழுகிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஒலி நீர்க்குமிழிகள் உடைவதால் ஏற்படுகிறது. குழிவை ஏற்படுத்தும் (cavitation) பாதிப்பு என்று அறியப்படும் தாடைகளை மூடுவதால் மட்டுமே ஏற்படுவதல்ல.
இந்த ஒலியெழுப்பப்படும் செயல் இது போல நிகழ்கிறது. தாடையின் ஒரு பக்கத்தில் ஏற்படும் ஒரு சிறு வீக்கம் மற்றொரு பக்கத்தில் உள்ள குழிவில் சரியாகப் பொருந்துகிறது. தாடையை அது வேகமாக மூடும்போது, 100 கி.மீ. (62 மைல்) வேகத்தில் தண்ணீர் வெளியே பீச்சி யடிக்கப்படுகிறது. அது பெருமளவு நீராவிக் குமிழ்களை உருவாக்குகிறது.
தண்ணீரின் வேகம் குறைந்து, சாதாரணமான அழுத்தம் திரும்புப்போது இந்தக் குமிழ்கள் வெடித்து, 20,000o C வரையிலான வெப்பத்தை உடனே உருவாக்குகின்றன. ஒளியுடன் கூடிய மிகுதியான ஒலி ஒன்று அப்போது எழுகிறது. இது ஓர் அரிய sonoluminescence எனப்படும் நிகழ்வாகும்; இங்கு ஒலி ஒளியை உண்டாக்குகிறது.
தங்கள் இரையைத் தேடவும், தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும், இணைகளைத் தேடிக் காணவும் கூனிறால்கள் இந்த ஒலியைப் பயன்படுத்திக் கொள்கின்றன. நீர்மூழ்கிக் கப்பல்களில் சோனார் செயல்பாட்டை பாழாக்குவதுடன், கூர்மையாக, அதிகப்படியாக உருவாகும் வெப்பம் கப்பல்களின் துடுப்புகளையும் வளைத்து விடுகின்றது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
No comments:
Post a Comment