சென்னை விடுதலை சந்தா வழங்கும் நிகழ்வில் தமிழர் தலைவர் எழுச்சி முழக்கம்!
சென்னை, ஜன.1- பல மொழிகளில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் பெரியார் கருத்துகள் பரப்பப்படும் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி உரையாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் 24.12.2011 அன்று இரவு விடுதலை சந்தாக்கள் வழங்கிய நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வரு மாறு:
உலகம் முழுவதும் பெரியார் கருத்துகள்
உலகம் முழுவதும் இருக்கின்ற பல மொழிகளிலே பல்கலைக் கழகத்தைப் பயன்படுத்தி அருமையான ஆற்றல் வாய்ந்த நண்பர்களைப் பயன்படுத்தி அகில இந்திய அளவிலே இந்தி மற்ற மொழிகளிலே பெரியாருடைய கருத்து களைப் பரப்புவது வடபுலத்திற்கு எவ்வளவு தேவையோ அதே போல உலக அளவிலே பெரியாருடைய கருத்துகளைப் பரப்புவதற்கு மிகப் பெரிய ஒரு வாய்ப்பாக ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் என்ற மூன்று மொழிகளிலேபரப்பக்கூடிய வாய்ப்பை முன்னெடுத்துச் செல்வோம்.
மதங்களே கல்விக்கூடங்கள் வாயிலாகத்தான்
இன்னொன்று மதங்கள் எல்லாம் கூட கல்விக்கூடங்கள் வாயிலாகத் தான் பல நாடுகளுக்குள்ளே படை எடுத்திருக்கின்றன.
அந்த வகையிலே நமது கல்வி அகங்கள் மூலமாக உலகளாவிய நிலையில் பல நாடுகளுக்கு உள்ளே போவதற்கு ஒரு நுழைவுவாயிலாக இதைப் பயன்படுத்தி பல்கலைக் கழகங்களில் பெரியாருடைய சிந்த னைகளை உருவாக்குவதற்கு நல்ல முயற்சிகளை எடுத்தோம்.
நானும், துணைவேந்தர் அவர்களும் பீஜிங் சென்றிருந்த பொழுது பீஜிங் பல்கலைக் கழகத்திலே மாவோ பணியாற்றிய நூலகத்திலே பெரியா ருடைய நூல்களைக் கொடுத்தோம். அதே போல் தைவானில் லிங்வா என்ற பல்கலைக் கழகத்திலே அந்த வாய்ப்பு ஏற்பட்ட பொழுது றுநடஉடிஅந ஞநசலையச ஆயலையஅஅய ருஎநசளவைல வெல்கம், வெல்கம் என்று எல்லா இடங்களிலும் எழுதியிருந்தார்கள்.
பெரியாருடைய பெயர் தைவானுக்குள்
பெரியாருடைய பெயர் தைவா னுக்குள் போகிறது என்றால் திராவிடர் கழக பிரச்சாரத்தின் மூலமாகப் போகாது. அங்கே என்ன ஆயுதம் தேவையோ அதைப் பயன்படுத்த வேண்டும். அது போல ஒரு வாய்ப் பைப் பெற்றோம். சிங்கப்பூர் இர்ஷாத் முகமது என்ற மாணவர் அவரைக் கூட இங்கே பேச வைக்க நினைத்தோம். நேரம் கிடைக்கவில்லை. இர்ஷாத் சிங்கப்பூர் மாணவர் கட்டுரை எழுதி யிருந்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் என்பது மிகப்பெரிய பல்கலைக் கழகம். இருபதாயிரம், முப்பதாயிரம் மாணவர்கள் படிக்கக்கூடிய பல் கலைக் கழகம். பல துறைகளிலே இருப்பார்கள். அங்கே நமக்குப் பேச மிகப்பெரியதொரு வாய்ப்பாக அமைந்தது.
பல வழிகளில் பெரியார் கருத்துகள்
எனவே ஒரு பக்கம் கல்விக் கூடங்கள் மூலம் இன்னொரு பக்கம் பன்மொழிகள் மூலம் இன்னொரு பக்கம் பல்வேறு கருத்துகளை பரப்பக்கூடிய பணிகள் இன்னொரு புறம் ஆய்வுப் புலம் மூலமாக மறுக்க வேண்டிய கருத்துக்களையும் திருத்தப் பட வேண்டியவர்களையும்-திருத்தக் கூடிய நிலை. இவை அத்தனையும் பணிகளாக-பல்முனைப்பணிகளாக நாம் நடத்துவதற்கு உங்களுடைய அன்பான ஒத்துழைப்பு நிச்சயமாக எங்களை உயர்த்தும்.
அந்த வகையிலே விடுதலையி னுடைய பணி என்பது இன்னும் நிறைய அளவுக்குத் தொடங்கி ஒவ் வொரு பகுதிகளிலும் இருக்க வேண்டும். அதற்கு திராவிடர் கழக முற்போக்கு சிந்தனையுள்ள பகுத்தறி வாளர் கழகத்தினுடைய அமைப்புகள் இப்படி எல்லோரையும் ஒருங்கி ணைக்க வேண்டும்.
திராவிடர் எழுச்சி எழுத்தாளர் பேராயம்
இன்றைக்கு இடதுசாரி சிந்தனை கள் என்ற பெயராலே மற்ற அமைப் புகள் இருப்பதைப் போலவே எப்படி பெரியார் ஆய்வுப்புலம் என்பதை உருவாக்க இருக்கின்றோமோ அதே போல விரைவிலே திராவிடர் எழுச்சி எழுத்தாளர் பேராயம் என்ற ஒன்று உருவாகும். (கைதட்டல்).
சு.அறிவுக்கரசு - தலைவர்
அதற்கு அறிவுக்கரசு போன்ற வர்கள் தலைவராக இருப்பார்கள் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லு கின்றோம். ஏனென்றால் இவர்கள் எல்லாம் நிறைய எழுதுகிறவர்கள். அதே போல துரை.சந்திரசேகரன் போன்றவர்கள். மற்றவர்கள் ஆய்வு செய்யக்கூடியவர்கள். மாணவர்களாக வும், இருக்கிறார்கள்.
அவர்கள் டாக்டர் பட்டம் வாங்கு கிறார்கள் என்றால் மற்றவர்கள் எழுதிக்கொடுத்து வாங்குவது அல்ல. ஆகவே இவர்களுடைய பெருமை களை எல்லாம் நாம் குறைக்காமல் சொல்ல வேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்ன தந்தை பெரியார் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் மக்களுக்கே கொடுத்தார்கள்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரம்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அறக்கட்டளை எப்படி எல்லாம் சங்கடங்களை சந் தித்தது - பிறகு அதிலேயிருந்து மீண்டு எப்படி நம்முடைய ஆடிட்டர்கள், நமக்கு மதிஉரைஞர்கள், அய்யா ராஜரத்தினம் போன்றவர்களுடைய வழிகாட்டுதல்கள் இவைகளால் வளர்ந்து இன்றைக்குச் சிறப்பான வகையிலே அடி எடுத்து வைத்துக் கொண்டு இன்னமும் எதிர்ப்புகளை எல்லாம் தாண்டிக்கொண்டு வருகிறது என்று சொன்னாலும்,அந்த பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் திற்கு வருகின்ற செப்.23ஆம் தேதி அய்யா அவர்களது 134ஆவது பிறந்த நாள் செப்.17 வருகிறது என்று சொன் னால் இந்த விழா செப்.23 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவுவிழா நடக்கிறது.
சுயமரியாதைப் பிரச்சார நிறுவன 60ஆம் ஆண்டு விழா
எனவே 60ஆண்டுகள் நிறைவு விழா எப்படி விடுதலைக்கு மார்ச்சிலே சிறப்பான ஒரு விழா தஞ்சையிலே நடக்கிறதோ, அதே போல பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா திருச் சியில் மாபெரும் விழாவாக நடை பெறும் என்பதை தெரிவித்துக் கொள் ளுகிறோம்.
எனவே உலக அளவிலே நிகழ்ச்சி கள் அனைத்திந்திய அளவிலே நிகழ்ச் சிகள், மாநில அளவிலே நிகழ்ச்சிகள் விடுதலை நிகழ்ச்சிகள் டிரஸ்டி னுடைய நிகழ்ச்சிகள் இவை அத்த னையும் நடைபெறும்.
எப்படி டாக்டர்கள், மற்றவர்கள் பாராட்டப்பட்டார்களோ அது போல டிரஸ்டுக்காக உழைத்த வழக் குரைஞர்கள் பாராட்டப்படுவார்கள். தோழர்கள் பாராட்டப்படுவார்கள். இயக்குநர்கள் பாராட்டப்படுவார்கள்.
பாராட்டப்படுவார்கள்
மற்றவர்கள் எல்லாம் பாராட்டப் படுவார்கள். அது எவ்வளவு பலமா னது என்பதைமுட்டி மோதிப் பார்த்த வர்களுக்கெல்லாம் இருக்கும். விடுதலை அதனுடைய அங்கம். ஆகவே அந்த அமைப்பினாலே உரு வாக்கப்பட்டது விடுதலை. விடுதலை எந்த மூலத்திலிருந்து கிளம்பியிருக் கிறதோ அதற்கு 60 ஆண்டுகள். ஆனால் விடுதலை என்பதிருக்கிறதே அது 77 ஆண்டுகள். விடுதலை தொடர்ந்து நட்டத்தில் நடந்து வந்த ஏடு. இவ்வளவு சிறப்பாக இருக்காது.
எனவே நீங்கள் சிறப்பான வகையிலே ஒத்துழைத்திருக்கிறீர்கள். நம்முடைய பணி முடிந்துவிடவில்லை. இப்பொழுது தொடங்கியிருக்கிறது.
எனவே நீங்கள் சிறப்பான வகையிலே ஒத்துழைத்திருக்கிறீர்கள். நம்முடைய பணி முடிந்துவிடவில்லை. இப்பொழுது தொடங்கியிருக்கிறது.
80ஆம் ஆண்டு பிறந்தநாள் எனது 80ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று எடிசன் ராஜா சொன்னார்கள். தாராளமாக நீங்கள் 80 கொண்டா டுங்கள். எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் ஒன்று இலட்சம் சந்தாக் களாக அது அமைந்தால் அதிலே எந்தவித மான கருத்தும் இல்லை. இதே மாதிரி உங்கள் முன்னால் நின்று வாங்கிக் கொள்ளத் தயராக இருக்கிறேன்.
ஆனால் அதற்குள் நீங்கள் அவ்வளவு சிரமப்பட வேண்டிய கட்டம் வராது. காரணம் மக்களே முன்னின்று வாங்கக் கூடிய அளவிற்கு விடுதலை வலிவும், பொலிவும் பெறக்கூடிய ஒளியூட்டக்கூடிய அறிவுக் கருத்துகொண்ட கலங்கரை விளக்க மாக இருக்கும் என்று கூறி அனை வருக்கும் நன்றி! நன்றி! என்று கூறி விடைபெறுகிறேன்.
நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன். நேரத்தின் நெருக்கடி எப்பொழுதும் உங்களை சந்தித்துக் கொண்டே இருப்பவன் நான். ஆகவே அந்த சந்திப்பிலே சொல்வோம் என்று கூறி உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். வணக்கம்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு! நன்றி வணக்கம்.
மேலும் தமிழர் தலைவர் உரை:
எதிரிகளுக்கு விட்டுவிடுகிறோம்
இப்படி இருந்த இயக்கம் 50 ஆயிரம் சந்தாக்களை எளிதாகத் திரட்டியது. விடுதலைக்கு வைப்பு நிதி என்று அறிவித்த நேரத்திலேயே அய்ந் தரை லட்ச ரூபாய் மேடையிலே தோழர்கள், தோழியர்கள் தந்திருக் கிறார்கள் என்று சொன்னால் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறதா? அல்லது தளர்ந்திருக்கிறதா என்பதை எதிரி களுக்கே விட்டுவிடுகின்றோம்.
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்றுகேட் டார்களே இருக்கிறதா? இல்லையா? என்பதற்கு இந்தத் துணி ரொம்ப மிக முக்கியம்.
இதை அய்யா பாதுகாத்தார். அம்மா பாதுகாத்தார். இப்பொழுது நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். (கைதட்டல்). இதெல்லாம் டிரஸ்ட்டு சொத்து. இப்படி இருந்துதான் இத் தனை சொத்துகள் வளர்ந்திருக் கின்றன என்பதை நீங்கள் நன் றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதை சொல்லுவதற்காகத்தான் கொண்டு வந்தேன். நேரமில்லை. எனக்கு ரயிலுக்குப் போக வேண்டும் என்கிற அவசரம்.
ரயிலை விட்டு விடலாமா?
ஆனால் உங்களைப் பார்க்கும் பொழுது ரயிலை விட்டுவிடலாம் என் நம்பிக்கை வந்தது. தஞ்சை பல்கலைக் கழகத்தில் நாளைக்கு நிகழ்ச்சி இருக்கிறது. என்னுடைய சுபாவம். எனக்கு ஒரு நிகழ்ச்சி முடிந்தவுடனே அடுத்த ஒரு நிகழ்ச்சி. அதைப் பற்றித்தான் சிந்தனை இருக்கும். இடைவெளி, சோர்வு, களைப்பு இதெல்லாம் கிடையாது.
வண்டிக்கு ஓடிப்போய் காய்ந்த இட்லி ஏதாவது இரண்டு கிடைத்தால் சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
தொண்டனுக்கு அடிமை உங்களுடைய அன்பை மீறி வேறு எதுவும் இல்லை என்று சொல்லி, உங்களுடைய தொண்டனுக்கு அடி மையாக இருப்பதிலே மகிழ்ச்சி என்று மீண்டும், மீண்டும் நன்றி என்று சொல்லி விடைபெறுகிறேன். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
தொண்டனுக்கு அடிமை உங்களுடைய அன்பை மீறி வேறு எதுவும் இல்லை என்று சொல்லி, உங்களுடைய தொண்டனுக்கு அடி மையாக இருப்பதிலே மகிழ்ச்சி என்று மீண்டும், மீண்டும் நன்றி என்று சொல்லி விடைபெறுகிறேன். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
பெரியாருக்கு 1001 அணா பை
தோழர்களே ஒரே ஒரு செய்தி. பல செய்திகளை அவசரமாக சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இதில் ஒரே ஒரு செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லுகின்றேன். அவசரத்தில் உள்ளே வைத்துவிட்டேன்.
அய்யா அவர்களிடம் பணம் கொடுத் ததற்கு ஒரு ஆதாரமான பை அந்த காலத்திலே இயக்கம் எப்படி இருந் திருக்கிறது என்பது தெரிய வேண்டும்.
இன்றைக்கு இலட்சக்கணக்கான ரூபாயை போட்டிபோட்டுக்கொண்டு நீங்கள் கொடுக்கின்றீர்கள். இயக்கம் அய்யா காலத்தில் தொடங்கப்பட்ட பொழுது 1940இல் எப்படி இருந்தது?
இது ஒரு பழைய பை-பையில் பணம் போட்டுக் கொடுத்திருக்கின்றார்கள். 28.1.1940இல் மதுரை மாவட்டம் வாடிப் பட்டியில் அய்யா அவர்களுக்கு பணமுடிப்பு கொடுத்திருக்கிறார்கள்.
வாடிப்பட்டி பண முடிப்பு 28.1.1940 எவ்வளவு பணம்? பெரிய தொகை. ஏனென்றால் இவ்வளவு பெரிய பையாக இருக்கிறதல்லவா? (சிரிப்பு-கைதட்டல்).
அதுவும் இதற்குப் பெயர் பெரியார் பண முடிப்பு. எவ்வளவு தெரியுங்களா? ஆயிரத்தி ஒரு அணா. (சிரிப்பு-கைதட்டல்).
மொத்தம் கிட்டத்தட்ட 60, 65 ரூபாய் வரும் அவ்வளவுதான். 16 அணா ஒரு ரூபாய் இல்லையா? ஆகவே 1001 அணா என்பதை இதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். (சென்னை பெரியார் திடலில் 24.12.2011 தமிழர் தலைவர் உரையிலிருந்து...)
No comments:
Post a Comment