Tuesday, January 3, 2012

வடிகால் - வாய்க்கால் ஆக வேண்டாம்!


ஓர் அரசாங்கத்திலோ, அமைப்பிலோ முக்கியப் பொறுப்பாளராக இருந்து கொண்டுள்ள எவரும் (இது குழு நிருவாகத்திற்கு மட்டுமல்ல; குடும்பத் திற்கும் கூடப் பொருந்தும் உண்மைதான்) முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில், தள்ளிப் போடாது, தட்டிக் கழிக்காது துணிவுடன் முடிவு எடுத்து வழிகாட்டும் கடமையைச் சரியாகச் செய்வது மிகவும் தேவையான ஒன்று.

ஒரு வரலாற்று நிகழ்வினையே உதாரணமாக காட்டலாம்:

அமெரிக்காவில் 1863இல் - ஜெட்டீஸ் பர்க் சண்டை (Battle of Gettys Burg) என்பது ஜூலை மாதம் 3ஆம் தேதி வரை - 3 நாள்கள் நடந்தது. இந்த அடிமை ஒழிப்புக்காக ஆப்ரகாம் லிங்கனின் மத்திய அரசு படைகளை எதிர்த்து, தென் மாநிலங்கள் படை திரட்டி,  அடிமைத்தன ஒழிப்புக்கு எதி ராக நடத்திய சண்டை - (போர்  என்பது பெரியது - சண்டை என்பது சிறியது - என்பதால் இச்சொல்லாக் கத்தைப் பயன்படுத்துகிறோம்) ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர்; சண்டையை எதிர்கொண்டு நடத்திட ஆணையிட்டு, மத்திய அரசு படைகளின் தளபதியாக ஜெனரல் ஜார்ஜ் மீட்  தலைமை தாங்கி நடத்துகிறார்.

தென் மாநிலப் படைகளுக்குத் தலைமை தாங்கி நடத்திடும் இராணுவத் தளபதி ஜெனரல் ராபர்ட் இ. லீ ஆவார்.

போட்டோமேக்  அருகில் ஓர் ஆறும்கூட ஓடிக் கொண் டிருக்கும் முக்கிய பகுதி, அப்பகுதிக்கு முன் வரும் போதே கடும் மழை பெய்யத் துவங்கி விட்டது. அதற்குச் சற்றுமுன் லீ தலைமையில் சண்டையிட்ட படை தோல் வியை எதிர் நோக்கியபடி பின் வாங்கியது.

இதில் மழை மேகங்கள் கவிழ்ந்தன - மழையும் பெய்தது! ஆற்றில் வெள்ளம் கடந்து தென் மாநிலப் பகுதிக்கு பின்வாங்கி ஓட முடியாத நிலை. இந்தப் படைகள்  பின்னாலோ, மத்திய அரசின் படை தளபதி மீட்  தலைமையில் லீ படை மாட்டிக் கொண்ட இக்கட்டான நிலை.

இந்நிலையில் அந்தப் படையை பின் வாங்கும் நிலையில் இருந்தாலும், இவர்கள் சுற்றி வளைத்து, ஆற்றை வெள்ளத்தின் காரணமாக தாங்க முடியாமலும் இருந்த நிலையில் எளிதில் தோற்கடித்து, சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.

லிங்கன் உடனே ஒரு தந்தியையும், விரிவான செய்தியையும் - படையின் சுப்ரீம் கமாண்டர் என்ற பொதுத்தலைவர் என்ற அதிகாரத்திலும் நீங்கள் தாக்குதலை நிறுத்தாதீர்கள்; அதுபற்றி யோசிக்க - சண்டைபற்றிய அறிவுரைக் குழுவை  கூட்டிக் கருத்துக் கேட்காமலேயே தாக்குதலை மேலும் தொடருங்கள் என்ற தனிச் செய்தியாளர் மூலமும் அவசரத் தகவல் களையும் அனுப்பத் தவறவில்லை.

ஆனால் அந்த மத்திய படைத் தளபதி ஜெனரல் மீட் அவர்களோ, அதனைச் செய்யாமல் இருக்க பல் வேறு காரணங்களையும், சமாதானங்களையும் சாக்குப் போக்குகளையும் சொல்லி இந்த யோசனையை ஏற்று தொடர் தாக்குதல் நடத்தவில்லை.

போட்டோமேக் ஆற்றில் வெள்ளம் வடிந்து, ஜெனரல் லீ தலைமையில்  இருந்த அப்படை பின்வாங்கி ஓடி உயிர் பிழைத்துக் கொண்டது!

ஜனாதிபதி லிங்கனுக்கோ பெருங் கோபம்; ஆத்திரத்தில் தன் மகனிடம் கூடச் சீறினார்; அவர் இவரை சாந்தப் படுத்த முடியாமல் தளபதி மீட் அவர் களுக்கு அவர் இவர் சொன்னதை உடனே செய்யாததைக் கண்டித்து கடுமை யான சொற்களைக் கொட்டி ஒரு கடிதத்தை எழுதினார். பொறுமையின் அணிகலனான அவர் எப்படி அன்று அவ்வளவு குமுறி வெடித்த எரிமலை யானார் என்று பலருக்கு ஆச்சரியம்.

ஆனால் பிறகுதான் பலருக்கும் தெரிந்தது. அக்கடிதத்தை அவர் அனுப்ப வில்லை என்பது அவரது மரணத்திற்குப் பின் கிடைத்த ஆவணங்களிலிருந்து தெரிய வந்தது! எழுதிய பிறகு அவர் யோசித்திருக்க வேண்டும்; இதனை அனுப்பி (சண்டை முடிந்து விட்ட பிறகும்) நல்ல உறவை - சமூகப் பணிகளில் ஜெனரல் மீட் அவர் களது ஒத்துழைப்பைப் பெற்று, பல வகையில் பயன்பெற்ற நிலை வந்திருக்க முடியாது அவர் அனுப்பியிருந்தால். அவர் பதிலுக்குப் பதவி விலகிச் சென்று இவரிடம் கருத்து வேறுபாடு உடையவராக ஆகியிருப்பார்!

நல்ல நண்பர் ஒரு விரோதியாக அல்லது ஒத்துழைப்பு பெற முடியாத நண்பராக அல்லவா ஆகியிருக்கக்கூடும்?

இதையெல்லாம் பிறகு கோபம் தணிந்து நிதானித்து சிந்தித்து - மறுபரிசீலனை செய்து அக்கடிதத்தை அனுப்பாமல் நிறுத்திக் கொண்டு நல்ல சாதுர்ய முடிவை எடுத்தார்.

இது ஒரு பாடம் - எல்லோருக்கும் கோபத்தில் கொதித்து கொந்தளிக்கும் எழுதுவதையோ பேசுவதையோ தொடரா திருக்க  ஆற அமைதியாக மறுபடியும் நிதானம், பொறுமையில் சற்று ஊறப் போட் டால் நல்ல விளைவுகள் வரும்; ஏற்பட விருந்த விபத்தும் - நட்டமும் ஏற்படாமல் தடுக்கவும் முடியும்!

எனவே கொப்பளித்த உணர்வுக்கு வடிகால் கொடுத்தாலும்கூட அது வாய்க்காலாகி விடாமல் தடுப்பதே புத்திசாலித்தனமான வாழ்வியல்.

நண்பர்களே உங்கள் வாழ்க்கையில் கோபப்பட்டு முடிவு எடுக்கும்போது இந்த நிகழ்வை நினைவூட்டிக் கொள்ளுங்கள்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...