Sunday, January 29, 2012

அப்படி என்ன திடீர் குபீர் போலீஸ் கெடுபிடி?


கேள்வி: இயல்பாக சுதந்திரமாக நடக்க வேண்டிய துக்ளக் ஆண்டு விழா, சமீப காலமாக போலீஸ்பாதுகாப்பு என்ற பெயரில், பயங்கரக் கெடுபிடிகளோடு நடப்பது ஆரோக்கியமான விஷயமா?
பதில்: எனக்கேகூட இதுபற்றி ஒரு மன நெருடல் ஏற்பட்டிருக்கிறது. இனி இந்தமாதிரி நிலை தோன்று வதைத் தவிர்ப்பது பற்றி யோசிக்கிறேன். - (துக்ளக் 1.2.2012 - பக்கம் 24)
சோ என்ன முதல் அமைச்சரா? அல்லது குறைந்த பட்சம் துணை அமைச்சரா? போலீஸ் கெடுபிடிக்கு என்ன காரணம்? இந்த ஆண்டு மட்டும் ஏனிந்த குபீர் அலட்டல்? திடீர் போலீஸ் குவிப்பு? என்னதான் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, நான் ஒன்றும் ஆலோசகர் இல்லை. நான் சொல்லி யார் கேட்பா... அப்படி கேட்டவர் யார் உருப்பட்டு இருக்கா... இதெல்லாம் சோவின் வழக்கமான பாணிதான். துக்ளக் ஆண்டு விழாவில் முதல் வரிசையில் உட்கார்ந்தவருக்கு பதவி லாட்டரி அடிக்குது என்றால் சாதாரணமா? இவ்வளவு செல்வாக்கு இருக்கும்போது, இது சிவன் கழுத்துப் பாம்பு என்று போலீசுக்குத் தெரியாதா, என்ன?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...