ஆனந்த விகடனிலிருந்து துக்ளக்குக்கு வாலி கிளை தாவியுள்ளது. ஆம். கவிஞர் வாலியைத்தான் சொல்லுகிறோம். வாலி என்றால் தாவத்தானே செய்யும்? தாவிய இடமும் அவா ளின்கிளைதானே. கிளை என்றால் உறவு என்பது கவிஞர் வாலிக்குத் தெரியாதா என்ன?
வித்வான்சார்! (இலட்சுமணன்) மந்திரி பிறந்த நாளையே மகத் தான நாளாகக் கொண்டாடுகிற இந்த மண்ணுல, கண்ணன் பிறந்த அஷ்ட மியையும், ராமன் பிறந்த நவமியையும் நல்ல நாள் கள் இல்லேன்னு ஒதுக் கிறது அபத்தமாயிருக்கே! என்று வாலி கேட்ட வுடன். . .
இருங்கோ வெத் தலெ துப்பிட்டு வந்து சொல்றேன் என்று வெளியே வித்வான் போக . . .
(துக்ளக் 1-2-2012 பக்கம் 15)
இருங்கோ வெத் தலெ துப்பிட்டு வந்து சொல்றேன் என்று வெளியே வித்வான் போக . . .
(துக்ளக் 1-2-2012 பக்கம் 15)
வாலி சார் தொக்கி நிக்கிறதே . . . பதிலைக் காணோமே!
வெத்தலெ துப்பப் போன திருவாளர் வித்து வான் இலட்சுமணன் திரும்பியே வரலியா?
அப்படியே தொக்கி நிற்கிறதே - கட்டுரையின் கடைசி வரையிலும் பதி லைக் காணோமே!
என்ன விசேஷம்? என்று கேட்கத் தோன்று கிறதா?
என்ன விசேஷம்? என்று கேட்கத் தோன்று கிறதா?
இந்த ரெண்டு கடவுள் களும் செத்துப் போய் விடுகின்றனவே. அதற் காகத்தான் அப்படி என்று சொல்லப் போறேளா?
அப்படியென்றால் செத்துப் போவது எப்படி கடவுள் ஆகும் என்ற கேள்வியைக் கேட்டுத் தொலைப்பாளே? (மென்னு முழங்குகிறார் வாலி)
அகராதியைப் பார்த்து விட்டு சொன்னாலும் சரி, சங்கராச்சாரியாரைக் கேட்டுட்டு வந்தாலும் சரி . . .
வாலி சார், நீங்கள் கேட்ட கேள்வி சரியான கேள்வி - மென்னிப்பிடி கேள்வி.
நீங்கள் கேட்ட கேள் வியை 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சுதந்திரம் வாங்கச்சே உங்களை விட சாஸ்தி ரத்தைக் கரைத்துக் குடித்த உங்களவாள் அப்ஜக்சன் பண்ணினா!
அஷ்டமி, நவமி இடிக் கிறதே என்றனர். நேரு பகுத்தறிவுவாதிதான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலே. ஆனாலும் அவராலேயே திமிர முடியல . . .
அஷ்டமி, நவமி இடிக் கிறதே என்றனர். நேரு பகுத்தறிவுவாதிதான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலே. ஆனாலும் அவராலேயே திமிர முடியல . . .
கடைசிக் கடைசியா ஒரு சமாதானம். நம்ம பஞ்சாங்கப்படி காலை 5 மணிக்கு தானே நாளே பொறக்குது. ஆகஸ்டு 15இல் இரவு 12 மணிக்குச் சுதந்திரம் வாங்குறதாலே நம்பக் கணக்கில் முதல் நாள் ஆகிவிடுகிறது - அதனாலே தோஷ மில்லை என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம் . . . நம்மளவா சமத்தோ இல்லியோ!
- மயிலாடன்
No comments:
Post a Comment