வான்கோழிகள் வடஅமெரிக்காவுக்குச் சொந்தமானவை என்றாலும், வீட்டில் வளர்க் கப்பட்ட வான்கோழிகள் இங்கிலாந்தில் இருந்து தான் வந்தன.
முதலில் 1520இல் அய்ரோப்பாவை வந்தடைந்த வான்கோழி அதன் சொந்த நாடான மெக்சிகோவில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அய்ரோப்பா முழுவதிலும் அது விற்பனை செய்யப்பட்டது. பணக்காரர்களுக்கு மிகவும் விருப்பமான உணவாக அது விரைவில் ஆகிவிட்டது. கிறிஸ்துமஸ் விழாவில் வான்கோழியைப் பயன்படுத்தும் வழக்கம் இங்கிலாந்தில் 1585 இல் தொடங்கியது. முரட்டுத்தனமான இந்த வான்கோழியை அதிக இறைச்சி கொண்டதாகவும், மென்மையான குணம் கொண்டவையாகவும் ஆக்கும் முயற்சி நோர்போர்க் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டது. நோர்போக் கருப்பு மற்றும் ஹாலந்து வெள்ளை இன வான்கோழி இனங்கள் இரண்டுமே அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலாந்து பறவைகளாகும். இன்று அமெரிக்காவில் உண்ணப்படும் வான்கோழிகளில் பெரும்பாலானவை இந்த இனங்களைச் சேர்ந்தவையே ஆகும்.
16 ஆம் நூற்றாண்டில் இறுதியில் இருந்து இங்கிலாந்து நாட்டு வான்கோழிகள் ஒவ்வொரு ஆண்டும் நோர்போர்க்கில் இருந்து லீடன்ஹால் மார்க்கெட் வரை 160 கி.மீ. (100 மைல்) தொலைவு நடந்தே வந்தன. இந்தப் பயணத்திற்கு மூன்று மாத காலம் பிடிக்கும். பறவைகளில் கால்களைப் பாதுகாக்க அவற்றுக்கு விசேட காலுறைகள் அணிவிக்கப்படும்.
1000 வான்கோழிகள் கொண்ட ஒரு மந்தையை ஓட்டி வருவதற்கு இரண்டு ஆட்கள் போதுமானது. நுனிகளில் சிவப்புத் துணியைக் கட்டிய நீண்ட கம்புகளை அவற்றை ஓட்டி வருவதற்குப் பயன்படுத்துவார்கள். கிறிஸ்துமசுக்கு முந்தைய வாரங்களில் நோர்போர்க் மற்றும் சப்போல்க்கில் இருந்து லண்டனுக்கு வான்கோழிப் பறவைக் கூட்டம் அதிக அளவில் வருவதால் போக்குவரத்து நெரிசலும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் டர்க்கி (Turkey) என்று அழைக்கப்படும் வான்கோழிக்கும் துருக்கி நாட்டுக்கும் (Turkey) எந்த சம்பந்தமும் இல்லை. துருக்கி நாட்டு வியாபாரிகள் இவற்றை லண்டனில் விற்றதால் இவை துருக்கி கோழிகள் என்றழைக்கப்பட்டன. மெக்சியில் இருந்து வந்த மெய்சி என்ற தானியமும் கூட அதேகாரணத்துக்காக துருக்கி சோளம் என்று அழைக்கப்பட்டது.
துருக்கி உள்ளிட்ட மற்ற நாடுகளில் அவற்றிற்கு இந்தியாவின் பெயர் அளிக்கப்பட்டிருந்தது. ஸ்பானிஷ் மக்கள் இண்டீசில் (Indies) இருந்து (அமெரிக்காவை அவர்கள் அவ்வாறுதான் அழைத்தனர்) அதைக் கொண்டு வந்ததால் இந்தியாவின் பெயர் அதற்கு அளிக்கப்பட்டிருக்கலாம்.
போர்த்துகீசியர்கள் மட்டும்தான் உண்மைக்கு மிக நெருக்கமான பெயரை அதற்கு அளித்து அதனை பெரு (peru) என்று அழைத்தார்கள். வான்கோழிக்கான அமெரிக்க சொல் பர்கி (furkee) என்பதாகும். ஆனால் இச்சொல் எந்த மொழியில் இருந்து வந்தது என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. இப்பறவை எழுப்பும் ஒலியை அடிப்படையாக வைத்து சோக்டா மொழியில் இதனை பக்கிட் (fakit)என்று அழைக்கின்றனர். இப்பறவையை எப்படி அழைப்பது என்பதில் அறிவியலுக்கும் கூட சந்தேகம் இருப்பதாகவே தோன்றுகிறது. இது லத்தீன் மொழிச் சொல்லான ஆநடநயபசளை பயடடடியீயஎடி என்பதற்கு கினியா கோழி (guineafowl ) அல்லது கோழி மயில் (chicken-peacock) என்று பொருள் படும் பெயரால் குறிப்பிடப் படுகிறது.
ஆண் வான்கோழி ஆண் மான் என்றும், ஒலி எழுப்புவது அல்லது டாம் என்றும் அழைக்கப்படும். பெண்வான்கோழி பெட்டைக் கோழி என்றே எப்போதும் அழைக்கப்படும். பாலுறவு இன்றி இனப்பெருக்கம் செய்ய இயன்றவை வான்கோழிகள். இவ்வாறு பாலுறவு இன்றி பிறக்கும் கோழிகள் அனைத்தும் மலட்டுத்தன்மை கொண்ட ஆண்களாகவே இருக்கும். வான்கோழி கூவுவது அனைத்து பெரும்பாலான மொழிகளிலும் க்ளு, க்ளு (glu glu) என்றும் க்ரக், க்ரக் (kruk, kruk) என்றும் எழுதப்படும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
No comments:
Post a Comment