சில்லறை வணிகத்தைத் தடுத்தது போல் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களையும் நுழைய விடாமல் எதிர்க்க வேண்டும்!
அனைத்து அமைப்புகளுக்கும் தமிழர் தலைவர் வேண்டுகோள்!
சென்னை, டிச.9- சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு வாணிப நிலையங்களை எதிர்க் கின்ற அமைப்புகள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களையும் உள்ளே நுழையவிடாமல் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும். இந்த பேராபத் தினை விளக்கி திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
சில்லறை வணிகம்
சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நேரடி மூலதனம் (FDI) Foreign Direct Investment என்ற அடிப்படையில், அமெரிக்கப் பன்னாட்டு பெரும் வணிக நிலையங்கள் தங்களது வாணிபத்தை இந்திய மண்ணில் நுழைந்து நடத்திட ஏற்பாடு செய்வதை, நாடே கடுமையாக எதிர்த்தது.
ஆளுங் கூட்டணியின் அங்கமாகிய தி.மு.க., திரிணா முல் காங்கிரஸ் கட்சிகளும் இதனை எதிர்த்த காரணத் தால், முதலில் மத்திய ஆட்சியினர் காட்டிய பிடிவாதம் தளர்ந்தது. மசோதா வெற்றியடைய முடியாது என்பதை யதார்த்தமாக உணர்ந்தது.
எதிர்க்கட்சிகள் பல்வேறு கோணங்களில் இதை எதிர்த்த போதிலும், எதிர்ப்பு பலமானவுடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளே தொடர்ந்து 7 நாள்களுக்கு மேல் முடக்கப்பட்டதன் விளைவு, அரசு தன்னிலையை மாற்றிக் கொண்டது.
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும்!
தற்காலிகமாக அதனை நிறுத்தி வைத்துள்ளோம் என்று கூறியுள்ள போதிலும் - நடைமுறையில் மீண்டும் அது புத்துயிர் பெறுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இதே காரண காரியங்கள் தானே வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு - இதே முறையில் கதவு திறக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கும் சுட்டப்பட வேண்டும்.
1. இந்திய நாட்டில் 1950-இல் உயர்கல்வியால் 2 லட்சம் மாணவர்கள்தான் படித்தனர்.
தற்போது 99 லட்சத்து 53 ஆயிரத்து 506 ஆக இந்த எண்ணிக்கை - அதாவது உயர் கல்வி பயில்வோர் - உயர்ந்துள்ளது.
இதில் 86.97 விழுக்காட்டினர் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்கள்.
13.03 விழுக்காடு மாணவர்கள் டிப்ளமோ பல்கலைக் கழகங்களில் பதிவு செய்துள்ளனராம்.
மொத்தம் 90.25 விழுக்காடு மாணவர்கள் இளங்கலையில் பயிலுபவர்கள்.
65.47 விழுக்காடு மாணவர்கள் முதுகலை படிப்பு படிப்பவர்கள்;
இறுதியாக, 10.9 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே ஆராய்ச்சிப் படிப்பிற்குச் செல்கின்றனர்.
வளரும் நாடுகளின் வரிசையில் நம் நாடும் ஒன்றாக வளர்ந்து வருகிறது.
வளரும் இதர நாடுகளில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 36.5 விழுக்காடாக உள்ளது.!
ஆனால் இந்தியாவிலோ (இந்த 11ஆம் அய்ந்தாண்டு திட்டத்தில் 2007-2012 வரை) உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 15 விழுக்காடாக உயர்த்திட திட்ட மிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. *(தற்போது 12 விழுக்காடுதான்)
1500 பல்கலைக் கழகங்கள் தேவை
அறிவுசார் கமிஷன் (Knowledge Commission) சுமார் 1500 பல்கலைக் கழகங்கள் நம் நாட்டிற்கே தேவை என்று பரிந்துரைத்துள்ளது.
டாக்டர் மணிசுந்தரம், டாக்டர் வா.செ. குழந்தைசாமி போன்ற கல்வி அறிஞர்கள் இந்த எண்ணிக்கை மேலும் கூடுதலாக சுமார் 2000 அளவுக்குப் பெருக வேண்டும் என்று கூறும் நிலையில், இங்குள்ள சிலர் இருக்கின்ற பல்கலைக் கழகங்களை மூடிட கனவு காண்பதும், திட்டமிடுதலும் போதிய தரமின்மை என்ற ஒரு போலி காரணம் காட்டி மூட முயலுவதன் நோக்கமே, வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறந்து, இங்கே மீண்டும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி சுரண்டல் வியாபாரம் செழித்தோங்க உதவுவதே தவிர, வேறு நோக்கம் கிடையாது!
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள்
இல்லை வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வருவதன் மூலம் கற்போரின் கல்வித் தரம் (Quality of Higher Education) உயரும் என்று ஒரு போலித்தனமான, உண்மைக்கு மாறான வாதத்தைக் கொண்டு வர முயலுவோர் கூற்றை ஆராய்க.
இப்படி இங்கே வர விரும்பும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் என்ன கல்வியில் முத்திரை பதித்த, புகழ் வாய்ந்த ஹார்வர்டு, ஆக்ஸ்போர்ட், ஸ்பன்போர்ட், கேம் பிரிட்ஜ் MIT என்ற மாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் போன்ற பல்கலைக் கழகங்களோ, கல்வி நிறுவனங்களோ அல்ல.
அங்கேயே மாணவர்களை ஈர்க்க முடியாத, அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் - சிக்கலினால் மூடப்படும் நிலையில் உள்ள மிகச் சாதாரண பல்கலைக் கழகங்கள் தான் வெளிநாட்டில் மார்க்கெட் தேடும் வாணிப நிலையங்கள்போல் வரவிருக்கின்றன.
இவர்கள் ஈட்டும் பொருள் அவரவர் நாட்டுக்கே செல்லப் போகிறது என்கிறபோது, நாம் சுதந்தரநாடு, சுதந்தரம் பெற்றோம் என்று கூறுவதற்கே நாம் தயங்க வேண்டாமா?
கழுத்தை நெறித்துக் கொல்ல நினைக்கும் செயல்
நம் நாட்டில் எந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப் பட்டாலும் அதன் வளர்ச்சிப் பருவம் (Quality of Higher Education) என்பதற்குரிய கால அவகாசம் தந்து, அவற்றை ஊக்கப் படுத்தி, மேலும் மேலும் தகுதி, ஆற்றலைப் பெருக்க வேண்டுமே தவிர, உலக மயம், தாராளமயம், தனியார் மயம் என்பதற்காக இப்படி வெளிநாட்டுப் பல்கலைக் கழகங் களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து, இங்கு வளர்ந்து வருபவைகளை கழுத்தை நெறித்துக் கொல்ல முயலுவது, மிகப் பெரிய சமூகஅநீதி அல்லவா?
முழு மூச்சாக எதிர்க்க வேண்டும்
அமெரிக்காவில் உயர் கல்விக்குச் செலவிடும் நிதி 17 விழுக்காடு.
மக்கள் சீனத்தில் 10 விழுக்காடு,
ஆனால் இங்கு...? 4 விழுக்காடு! உயர் கல்விக்கு ஒதுக்கீடு என்பது சமூக முதலீடு அல்லவா?
எனவே வெளிநாட்டு வாணிப நிலையங்களை எதிர்க்கும் நிறுவனங்கள், அமைப்புகள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை உள்ளே நுழைய விடுவதையும் அதே மூர்த்தண்யத்தோடு முழு மூச்சாக எதிர்க்க வேண்டும்.
ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்தால் என்ன கதியோ!
ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்தால் என்ன கதியோ, அதேகதிதான் பிறகு,
சுதேசியம் பேசும் சுதந்தர வீரர்கள் ஏன் தங்கள் வாய்களை இறுக்கி மூடிக் கொண்டுள்ளனர்.
ஊடகங்கள் வாய் திறக்க முடியாத ஊமைகளாக இருக்கலாமா?

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மூலம் தான் அறிவு, தரம் கிடைக்கும் என்றால் அவற்றுடன் இங்குள்ள பல்கலைக் கழகங்களுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு செயல்பட்டு, அறிவு கொடை, திறமைக் கூட்டு பெறலாமே! எனவே உடனே வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை எதிர்க்க முன் வாருங்கள் - மாணவர்களும், கல்வியாளர்களும் முன்வர வேண்டும்.
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
தலைவர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment