Tuesday, December 13, 2011

குடியரசுத் தலைவரைக் கேலி செய்யும் தினமலர்


இந்தியாவின் குடியரசு தலைவராக முதன்முதலாக ஒரு பெண் வந்துள்ளார். போர் விமானத்தில் இவர் பயணம் செய்தது, இராணுவக் கவச வாகனத்தில் பயணம் செய்தது. விரைவில் கடற்படை கப்பலில் பயணம் செய்ய உள்ளது. பற்றியெல்லாம் சேதி வெளியிட்டு முப்படை களிலும், சாகசப் பயணம் செய்து ஹாட்ரிக் அடித்த உலகின் முதல் பெண்மணி என்ற பெருமை இவருக்குக் கிடைக்கப் போகிறது எனப் பொடி வைத்துப் பேசுகின்றனர்.  ராணுவ அதிகாரிகள் என்று பொடி வைத்து எழுதியுள்ளது. தினமலர் (12.12.2011) .

பீரங்கி தாங்கிய கவச வாகனத்தில் குடியரசுத் தலைவர் அமர்வதற்கு பல வசதிகள் செய்யப்பட்டன. பீரங்கியின்மீது அமர்ந்து ஜம் என போஸ் கொடுத்தார் பிரதீபா என்றும் இவர்கள் வீட்டு எடுபிடி என்பதுபோல தினமலர் எழுதியுள்ளது.

பொடி வைத்து இராணுவ அதிகாரிகள் பேசினார்களாம்; பக்கத்தில் நின்று கேட்டதா தினமலர் கூட்டம்? அல்லது இராணுவ அதிகாரிகள் இவர்களைக் கூப்பிட்டுக் காது கடித்தார்களா?

ஒரு பெண் குடியரசுத் தலைவர் என்றால் தினமலர் துக்ளக் கூட்டத்துக்கு ஏளனம் - நையாண்டி! காரணம் என்ன தெரியுமா? அவாளின் மனுதர்மம் பெண்களை ஒரு ஜீவன் என்று ஒப்புக் கொள்வதில்லையே!

குடியரசுத் தலைவரை இப்படியெல்லாம் நையாண்டி செய்வது சரியானதுதானா? பார்ப்பான் பண்ணயம் கேட்பாரில்லையா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...