Monday, December 5, 2011

பெரியார் கொள்கையை ஊரெல்லாம் பரப்பிய கொள்கை வேழம் வீரமணி

பெரியார் கொள்கையை ஊரெல்லாம் பரப்பிய கொள்கை வேழம் வீரமணியாவார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பாராட்டு


சென்னை, டிச.3- சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று (2.12.2011) மாலை நடைபெற்றது.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்த அவையிலே பெரியார் பிஞ்சுகள் இருக்கின்றனர். பெரியார் பெருந்தொண்டர்கள் இருக்கின்றனர். இடையிலே இளைஞர்களும் இருக்கின்றனர். எனவே தலைமுறை இடைவெளி யில்லாத இயக்கமாக திராவிடர் கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

ஆசிரியர் அவர்களை வாழ்த்தி உண்மை இதழில் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். காரிருள் நீக்கு தற்குக் காற்றிலே சொல் விதைத்த பேரறிவாளன் எங்கள் பெரியாரின் அருமைத் தொண்டர்.

ஊரரெலாம் சுற்றி சுற்றிச் உழைப்பினை மக்கட் இந்த சீர்மிகு தந்தை கண்ட சிறிய நற்கொள்கை வேழம்! என்று எழுதியிருக்கின்றேன்.

சோலை அவர்கள் வீரமணி ஓர் விமர்சனம் என்ற நூலில் எழுதியிருக்கின்றார். வீரமணி யார் தெரியுமா?

ஈரோட்டு ராவணனின் இந்திரஜித்

ஈரோட்டு ராவணனின் இந்திரஜித் என்று சொல்லுகின்றார். பெரியார் எதையும் திட்டமிட்டே செய்தவர். பெரியார் யாரையும் அவ்வளவு சுலபமாகத் தேர்ந்தெடுக்கமாட்டார். பெரியார் அவ்வளவு சுலபமாகப் பாராட்ட மாட்டார்.
தந்தை பெரியார் அவர்கள் நமது ஆசிரியர் அவர்களை பொதுத் தொண்டாற்ற முழுநேர ஊழியராய் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

எனது தந்தையார் காரைக்குடி இராம.சுப் பைய்யா அவர்கள் ஒரு செய்தியை சொன்னார்.  பெரியாருடைய பொதுக்கூட்டம் என்றால் பலபேர் துண்டுச்சீட்டு எழுதி கேட்பது வழக்கம்

நான் ஒரு முட்டாள்

அதுபோல ஒரு நண்பர் நான் ஒரு முட்டாள் என்று துண்டுச் சீட்டில் எழுதி மேடையில் இருந்த பெரியாரிடம் கொடுத்தார். பெரியார் நான் ஒரு முட்டாள் என்று ஒலிப் பெருக்கியில் படிப்பார். அது அப்படியே கேட்கும் அது பெரியாரை அவமானப்படுத்த ஒரு வழி என்று அந்த துண்டுச் சீட்டு எழுதியவரின் எண்ணம்.

பெரியார் அந்தத் துண்டு சீட்டைப் பார்த்தார். யாரோ ஒருவர் கேள்வி கேட்காமல் தனது பெயரை சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கின்றார் என்று சொல்லிவிட்டு இதை நீங்கள் படித்து விடுங்கள் எனது தந்தையாரிடம் பெரியார் கொடுத்தார்.

எனது தந்தையார் அந்த துண்டுச் சீட்டைப் படித்துக் காட்டி பெயர் போடாத அந்த நண்பர் என்றும் சொன்னார். நான் ஆசிரியர் அவர்களுடன் 4 நாள்கள் சிங்கப்பூரில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டுத் தான் வந்தேன். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னை கேட்டார். என்ன வீரமணி ஒரு விமர்சனம் என்ற நூல் வெளி யீட்டு விழா. அதில் நீங்கள் கலந்து கொள்கின்றீர் களா? உங்களுக்கும், வீரமணி அவர்களுக்கும் ஏதாவது பிணக்கா? அவரை விமர்சித்துப் பேசப் போகிறீர்களா? என்று கேட்டார்.

எங்களுக்குள் பிணக்கு வராதா?

காரணம் எங்களுக்குள் ஏதாவது பிணக்கு வராதா என்று அவர்களுக்கு ஒரு ஆர்வம். இன்றல்ல என்றைக்கும் எங்களுக்குள் பிணக்கு வராது. திராவிட இயக்கத்து திருஞான சம்பந்தன் என்று அண்ணா நமது ஆசிரியரை 10 வயதிலேயே அழைத்தார். மேடையில் இப்பொழுது ஒரு சிறு குழந்தை தமிழர் தலைவரை வாழ்த்திப் பேசியது.

அன்றைக்கு ஏற்றிய கொள்கை தீபம் இன்றைக் கும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது என்பது இதுதான் உதாரணம். பெரியார் தனது வாரிசாக தேக்கு மரத்தை தேர்ந்தெடுக்கின்றார். அந்த தேக்கு மரம் எதற்கும் வளையாது. அவர்தான் நமது ஆசிரியர் அவர்கள் என்று சோலை அவர்கள் எழுதியிருக்கின்றார்.

சிங்கப்பூரில் 4 நாள்கள்

ஆசிரியர் அவர்களுடன் பல நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் தேசிய நூலகம் சுற்றிப்பார்த்தல், ஆசிரியர் அவர்களுடைய வீட்டில் உணவு உபசரிப்பு என்று 4 நாள்கள் அவருடன் இருந்தபொழுது மகிழ்ச்சியாக இருந்தேன்.

அப்பொழுது ஒரு படத்தைக் காட்டி கேட்டேன். அய்யா பெரியார் அவர்கள் மிகவும் மகிழ்ந்து காணப்படுகின்றார். நீங்கள் அருகில் நிற்கிறீர்களே. பெரியார் கையில் ஏதோ இருக்கிறதே  அது என்ன சம்பவம் என்று கேட்டேன் அதற்கு ஆசிரியர் அவர்கள் சொன்னார், சற்று தயக்கத்துடன் கூறினார். அய்யா அவர்களுடைய பிறந்தநாள் 1973 ஆம் ஆண்டு. அந்த பிறந்த நாளில் பத்தாயிரம் ரூபாய் அய்யா கொடுத்தார். அய்யா அவர் களிடம் இது எதற்கு என்று கேட்டேன்.

உங்களிடம் இருக் கட்டும் வைத்துக் கொள் ளுங்கள் என்று சொன் னார். அதற்குப் பிறகு அய்யா இல்லை. ஏதோ கொடுக்க வேண்டும் என்று அய்யா அவர்களுக் கே தோன்றியிருக்கிறது என்று ஆசிரியர் அவர்கள் சொன்னார்.
இப்படி ஏராளமான செய்திகளை நமது ஆசிரியர் அவர்களைப் பற்றிச் சொல்லலாம்.
- இவ்வாறு சுப.வீரபாண்டியன் பேசினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...