Saturday, December 31, 2011

இங்கிலாந்தில் மருத்துவர்கள் அடிக்கடி சிகிச்சை அளிக்கும் உடல்நலக்குறைவு எது?


இங்கிலாந்து நாட்டில் மருத்துவர்களால் பொதுவாக சிகிச்சை அளிக்கப்படும் உடல்நலக் குறைவான மனஅழுத்தம் தான் உலகிலேயே பொது வாகக் காணப்படும் உடல் நலக்குறைவுகளில் நான் காவது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை பினோமேனி யா, அல்லது பிராஞ்சிடிஸ் என்னும் மூச்சுக் குழல் அழற்சி, வயிற்றுப்போக்கு, எச்.அய்.வி (எய்ட்ஸ்) ஆகிய நோய்கள் பிடித்துள்ளன. (உலக சுகாதார நிறுவன அறிக்கை 1999)
உலகம் முழுமையிலும் 10 விழுக்காடு பெண்களும், 3 முதல் 5 விழுக்காடு வரை ஆண்களும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மிகுந்த மனஅழுத்த நோய்க்கு உள்ளாகி இருந்தனர்.
இங்கிலாந்தில் ஏறக்குறைய 32 லட்சம் மக்கள் (7%) மனஅழுத்தம் கொண்டவர்களாக இருந்தது இப்போது மேலும் மோசமான நிலையை அடைந்துள்ளது. 1990 க்கும் 2000 க்கும் இடையே இங்கிலாந்து நாட்டில் மனஅழுத்தத்திற்காக மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது  1 கோடி அளவுக்கு அதிகரித்தது.
பணிநேரத்தில் அனுமதி பெறுவது, சிகிச்சை செலவு, தற்கொலைகள், உற்பத்திக் குறைவு ஆகிய வழிகளில் இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் 800 கோடி பவுண்டுகள் அளவுக்கு இழப்பை இந்த மனஅழுத்தக் கோளாறுகள் ஏற்படுத்துகின்றன. இந்த இழப்பு ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் ஆண்டு ஒன்றுக்கு சராசரி 160 பவுண்டுகளாகும்.
இது இங்கிலாந்து நாட்டுக்கு மட்டுமே உரித்தான தட்பவெப்ப சோகமல்ல. 2.5 கோடி அமெரிக்கர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இத்தகைய மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.  ஆஸ்திரேலியாவில் அய்ந்து வயது உள்ள குழந்தைகளுக்கும் கூட மனஅழுத்தக் குறைபாட்டுக்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பங்களாதேசத்தில் சாதாரணமாக அதிக அளவில் காணப்படும் நோய் வயிற்றுப்போக்கு ஆகும். அதைத் தொடர்ந்து வயிற்றில் பூச்சி இருப்பது இடம் பெறுகிறது. ஆனால் மனஅழுத்தம் என்பது பரவலாக, குறிப்பாக பெண்களிடையே 3ரூ அளவில் காணப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் மனஅழுத்தம் பொதுவாகக் காணப்படும் உடல்நலக் குறைவுகளில் பதினொன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. அங்கு எச்.அய்.வி.யும் மலேரியாவும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளன. பெரும்பாலான வளரும் நாடுகளில், மனநோய் இருக்கலாம் என்று சந்தேகப்படும் வழக்குகளில், நோயைக் கண்டறிவது எளிதல்ல. இதன் காரணம் மேலை நாடுகளை விட இங்கு அதற்கான அடையாளங்கள் உடல் அளவில் வெளிப்படுத்தப் படும் வாய்ப்புகள் அதிகமாக  இருப்பதுதான்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...