இன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி நடக்கிறதாம். இந்த மூட நம்பிக்கை நிகழ்வு தொடர்பாக சில செய்திகளை வாசக நேயர்கள் தெரிந்துகொள்வதற்காக கீழே தருகிறோம்.
சந்திக்கு வந்த சனி பகவான்
சந்திக்கு வந்த சனி பகவான்
திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலய சனிப்பெயர்ச்சி விழா நாளை 4 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று (திங்கள்) விடியற்காலை 2-18 மணிக்கு சனீஸ்வர பகவான் துலாம் ராசியி லிருந்து விருச்சிக ராசிக்குப் பிர வேசிக்கிறார்.
(தினத்தந்தி 3.11.85)
(தினத்தந்தி 3.11.85)
ஸ்ரீ சனிபகவான் புன்முறுவல் பூத்த வண்ணம் பக்தர்களுக்கு அவர வர்கள் ஜாதகப்படி சனி தெசை, சனி புத்தி, ஏழரையாண்டுச் சனி, அஷ்ட மச் சனி, அர்த்தாஷ்டமச் சனி நடப் பிலுள்ளவர்களுக்கும், சனி பகவா னால் ஏற்படும் தோஷம் உள்ளவர் களுக்கும் கருணை பாலிக்கிறார்.
குரோதன ஆண்டு அய்ப்பசி மாதம் 18ஆம் தேதி (4.11.85) ஞாயிற்றுக் கிழமை இரவு மணி 2.18-க்கு சனி பகவான் துலாராசியிலிருந்து விருச் சிக ராசிக்குப் பெயர்கிறார் (திருவாவடுதுறை ஆதீன விளம்பரம், தினமலர், 1.11.85)
செய்திகள் தெரிவிக்கும் சிந்தனை
நாள்தோறும் தந்தி யடிக்கும் நம்மவர் பத்திரிகை, அன்றாடம் மலரும் அய்யர்பத்திரிகை உள் ளிட்ட அனைத்து நாளேடுகளிலும் இதே வகையான செய்திகள் தான் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட் டுக்கு இரண்டு பத்திரிகைச் செய்தி கள் அவ்வளவுதான்!
என்ன சிந்தனை இந்த செய்திகளி லிருந்து உங்களுக்குத் தோன்றுகின் றது?
சனீஸ்வர பகவானாம்! அவர் தராசு (துலாம்) ராசியிலிருந்து தேள் (விருச்சிக) ராசியில் பிரவேசிக்கிறா ராம்!
யார் இந்த சனிபகவான்? எவன் இந்தச் சனீஸ்வரன்? எதற்காக இந்த பிரவேசம்?
அதுவும் புன்முறுவல் பூத்த வண்ணம்!
அவரால் ஏற்பட இருக்கும் தோஷங்களுக்கு அவரே கருணை பாலிக்கிறாராமே!
-என்றெல்லாம் உங்களுக்கு கேட்கத் தோன்றுகிறதா?
நம்மிடம்தான் இருக்கின்றனவே, ஏராள புராணக்குப்பை மூட்டை கள்! அவற்றுள் சிலவற்றைத் தாரா ளமாக அவிழ்த்துப் பார்த்து விடு வோமே?
சூரிய பகவான் இருக்கிறாரே, அவருடைய தர்ம பத்தினி சம்ஞை என்பவள்.
அவள், தன் கணவன் சூரியனின் வீரியம் மிக்க காமவெறித் தொல்லை பொறுக்க முடியாமல் உடலும் உள்ளமும் புண்ணானாள்.
அவனது மீளமுடியாத விரகதாப மோக வெறியிலிருந்து கொஞ்ச நாளாவது தப்பித்து, தனித்திருக்க எண்ணித் தன் தாய்வீடு செல்ல விரும்பினாள். விட்டால் தானே சூரிய பகவான்! விடுவானா அவன்? சஞ்சலப்பட்ட சம்ஞை சிந்தித் தாள்! சிந்தித்தாள், வெகுவாகச் சிந்தித்தாள்!
விரைவிலே யோசனை பிறந்து விட்டது!
தனது சாயையையே (நிழலையே) பெண்ணுருவாக்கி, வைத்துவிட்டு, தப்பித்தோம்!
பிழைத்தோம்!! என்று தாய்வீடு போய்விட்டான்!
புத்தம் புது மலராம் சாயாதேவி யிடம் சூரியன் நித்தநித்தம் சரச சல் லாப சம்போகம் செய்து வந்தான்! சலிப்பே இல்லா சம்போத்தின் பலன்? சனி, மகனாக ஜனித்துவிட்டாள்?
ஆண்டுகள் பல தாண்டின அன்னை இல்லம் சென்றிருந்த சம்ஞை கணவனை நாடிக் கடுகி வந்தாள்!
சக்களத்தி சாயாதேவி பெற் றெடுத்த சனி, சம்ஞையைச் சரிவரக் கவனிப்பதில்லை; மதிப்பளிக்க வில்லை; மரியாதை காட்டவில்லை!
நல்லவண்ணம் பெரியம்மாவிடம் நடந்து கொள்ளவில்லை! இதனைக் கண்ட சம்ஞை பெற்றெடுத்த மகன் எமன் தண்டத்தால் சனியைத் தாக்கி னான்.
தாக்கியதன் விளைவு?
சனியின் ஒரு கால் ஒடிந்து, முறிந்து முடமானான்! முடமான காலோடு தான் இராசிவிட்டு இராசிப் பயணம் செய்கிறான்!
எப்படி இருப்பான் இந்தச் சனி?
இவன் கருநிற மேனியன்; கருநீலஆடையன்; இவனுக்கு உகந்தவை; இரும்பு, எள், கருநீலவண்ண ஆடை, நீலக்கல்.
மனிதரின் ஆயுளுக்குப் பொறுப் பான ஆயுள் காரகன். இவன் பார்வை, பட்ட இடம் பாழாகும்! தொட்ட இடம் தோடியாகும்! துலங்காது! கெட்ட குணத்துக்குச் சொந்தக் காரன்! பாவியிலும் பாவி படுபாவி!
என்றெல்லாம் நவக்ரக ஆரா தனை, விஷ்ணுதர் மோத்தரம், மற்றும் ஜோதிட நூல்கள் கூறு கின்றன.
இவன் முழுப்பாபக்கிரகம் ஆவான். ஓர் இராசியில் இரண்டரை வருடன் இருப்பான். பின் மறு ராசியில் பிரவேசிப்பான்.
இவன் ஏறிவரும் தேர் இரும்புத் தேர்! கருநீல நிற ஆடை புனைந்த 8 குதிரைகள் இவனது தேரை இழுத்து வரும்! (8 கருங்கழுகுகள் இழுக்கின் றன என்று சில நூல்கள் கூறும்)
இவன் வாகனம் காக்கை - இவ்வாறு அபிதான சிந்தாமணி எடுத்துரைக்கிறது!
முளைக்கிறது முரண்பாடு
பின்வரும் செய்தியினைப் படித்து பாருங்கள்!
துலாராசியிலிருந்தும் சனி விருச் சிக ராசியில் பிரவேசிப்பது திருக் கணித பஞ்சாங்கப்படி ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது.
வாக்கிய பஞ்சாங்கப்படி நவம்பர் 3 ஆம் நாள் இரவில் நிகழ இருப்பது. (சனியின் நிலையை வாக்கிய முறை யிலும், திருக்கணித முறையிலும் கணிக்கும் போது, சுமார் பாகை 1 டிகிரி வித்தியாசமிருப்பதால் சனிப் பெயர்ச்சி நாள் ஒரு மாதம் வித்தி யாசப்படுகிறது. - (குத்தாலம் பாலு, 31.10.85, தினமணி)
படித்தீர்களா, நித்தம் மணி அடிக்கும் கணக்கன் பத்திரிகைச் செய்தியினை?
ஏற்கெனவே சனிபகவான் திருக் கணித பஞ்சாங்கப்படி (அவன் கூட கையில் திருக்கணித பஞ்சாங்கம் வைத்திருப்பான் போலிருக்கிறது!) துலாத்திலிருந்து விருச்சிகத்தில் பிரவேசித்து விட்டாராம்!
ஆனால், வாக்கிய பஞ்சாங்கப்படி (அவருக்கு இந்தப் பஞ்சாங்கம் இப் பொழுதுதான் கிடைத்தது போலி ருக்கிறது!) நவம்பர் 4இல் பிரவேசிக் கிறாராம்!
என்ன விநோதம் பாருங்கள்!
ஏற்கனவே, ஒரு வீட்டில் நுழைந்தவர் மீண்டும் திரும்பி வந்து மறுபடியும் அந்த வீட்டில் நுழைகிறாராம்!
எவ்வளவு ஜோக்கு பாருங்கள்!!
1.டிகிரி வித்தியாசமாம் கணக்கில்! கணக்கில் வித்தியாசம் எப்படி வர லாம்? வரலாமா? கணக்கு என்றால் கணக்குத்தானே?
கேட்டால், திருக்கணிதமாம், வாக் கியமாம்! இரண்டில் ஒன்றுதானே சரியாக இருக்க முடியும்?
இரண்டில் எது சரியான கணக்கு?
கணக்காகக் காதுல பூ சுற்றும் வேலையல்லவா இது?
இன்னொரு வேடிக்கைச் செய்தி யினைக் கேட்டிருக்கிறீர்களா? சனி பகவானுக்குரிய சனிக்கிழமையில் ஒருவன் செத்தால், அந்த வீட்டில் தவ றாமல் வேறொரு வரும் சாவான்(ள்)! நிச்சயம் இது நிகழ்ந்ததே, தீருமாம்! சனிப்பிணம் தனிப் போகாது! என்ற பழமொழி வேறு வழங்குகிறதாம்!
இந்தச் சனி பகவான் ஒருவனைத் தனியாகக் கூட சாக விடமாட்டான் போலியிருக்கிறது! கூட்டு சேர்த்துத் தான் சு(இ)டு காட்டுக்குக் கொண்டு போக விடுவான் போலிருக்கிறதே!
கூட்டணி அமைப்பதில் இந்தச் சனி பகவான்தான் முன்னோடியாக இருப்பானோ?
இந்தச் சனி பகவானால் வரும் தோஷங்கள்(?) எல்லாம் தொலைந் தோட திருநள்ளாறு தர்ப்பாரண் யேஸ்வரர் கோவில் சனிபகவான் சந்நிதியில் நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்துகொண்டு அவனைத் தரிசனம் செய்து, அர்ச்சனை செய்து, அங்குள்ள நள தீர்த்ததில் எண்ணெய் நீராடி சந்நிதியில் எள் தீபம் ஏற்ற வேண்டுமாம்!
இவ்வாறு பறைசாற்றுகிறது- திருக் கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன விளம்பரம்! தினசரி ஏடு களிலே! இப்படியெல்லாம் அறிவினுக்கு ஒவ்வாத புராணப் புளுகுகளை அவிழ்த்துவிட்டு மூடநம்பிக்கைச் சகதியிலே மக்களை மூழ்கடித்து வரும் மதவாதப் பிரச்சாரங்களுக்கு இடையே விஞ்ஞான ரீதியில் இந்தச் சனிக்கோள் பற்றி நாம் விளங்கிக் கொள்வது- தெளிவு பெறுவது- இன்றியமையாததல்லவா?
சனிக்கோள் பற்றிய அறிவியல் ஆய்வுச் செய்திகளை இப்பொழுது தெரிந்து கொள்வோமே!
இந்தச் சனிக் கோள்?
நம்மால் பார்க்க முடிந்த சூரிய குடும்ப (மண்டில)க் கோள்களுள் இதுதான் வெகு தொலைவில் உள்ளது.
வானவெளியில் இது சூரியனி டமிருந்து சராசரி 88 கோடியே 63 லட்சம் கல் (mile) தொலைவில் உள்ளது. அதாவது,
சனி, சூரியனிடமிருந்து பூமியின் தொலைவினைப்போல ஏறக்குறைய 10 மடங்கு தொலைவில் இருக்கிறது. இன்னொருவகையில் சொன்னால்,
பூமியிலிருந்து கிட்டத்தட்ட 80 கோடி தொலைக் கற்களுக்கு அப்பால் இருக்கிறது இந்தச் சனி.
வியாழக்கோளுக்கு (Jupiter) அடுத்த நிலையில் இது இருக்கிறது.
பூமிக்கு வெகு அண்மையில் வரும் போது பூமிக்கும், சனிக்கும் இடை யில் உள்ள தொலைக்கல் 74 கோடியே 50 லட்சம் ஆகும்.
இந்தச் சனிக்கோள் வியாழனைப் போன்று பேரொளி மிக்கதன்று.
இதன் நடுக்கோட்டைச் சுற்றி இது 75 ஆயிரத்து 21 தொலைக்கல் விட்டமுடையது.
துருவங்களைச் சுற்றி 67 ஆயிரத்து 805 தொலைக்கல் விட்டம் உடையது. சராசரி விட்டம் 71 ஆயிரத்து 500 தொலைக்கல்.வேறுபாடு 7216 தொலைக்கல்.
இந்த விட்டமானது பூமியின் விட்டத்திலிருந்து சிறிது குறைவு.
அளவைப் பொறுத்த வரையில் சனி, கோள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது!
பூமியைவிட இது 700 மடங்கு பெரியது. ஆனால் அதன் எடை?
பூமியின் எடையை விட 95 மடங்கு மட்டுமே மிகுதி. வியாழனைப் போலவே சனியின் மய்யப்பகுதி பெருத்துள்ளது. கோள் களிலேயே இதுதான் தட்டையான வடிவம் கொண்டது.
ஒரு பயில்வான் தனது பெரிய காலின் கீழ் அழுத்தி நசுக்கிய ரப்பர் பந்தைப் போலவே இக்கோள் காணப் படுகிறது.
இக்கோளின் அடர்த்தி எண் 0.69 தான்! அதாவது நீரின் அடர்த்தியை விடக் குறைவு!
ஒரு தொட்டியில் இதனைப் போட்டால் இது நீரில் மிதக்கும், நாம் அவ்வளவு பெரிய தொட்டியினைக் கண்டு பிடித்தால்! உண்டு பண்ணி னால்!
ஒரு தொட்டியில் இதனைப் போட்டால் இது நீரில் மிதக்கும், நாம் அவ்வளவு பெரிய தொட்டியினைக் கண்டு பிடித்தால்! உண்டு பண்ணி னால்!
நொடிக்கு 6 தொலைக்கல் வேகத் தில் தன்னைத் தானே சுழன்று கொண் டிருக்கிறது.
ஒருமுறை தன்னைத் தானே சுற்றி வர இதற்கு 10 மணி 14 நிமிடங்கள் பிடிக்கின்றன.
ஒருமுறை தன்னைத் தானே சுற்றி வர இதற்கு 10 மணி 14 நிமிடங்கள் பிடிக்கின்றன.
சூரியனை ஒரு முறை சுற்றி வர ஏறக்குறைய 29 1/2 ஆண்டுகள் பிடிக் கின்றன.
சூரியக் குடும்பத்தில் இக்கோளிற் குத் தனி அடையாளமுண்டு. ஒரு கோளினைச் சுற்றி ஒரு வளையம் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்! நாம் காண்பது கனவா? கற்பனையா? அல்லது,வானநூல் வல்லுநர்கள் நகைச் சுவையாக நையாண்டி செய்கிறார் களா? என்று உங்களுக்குத் தோன்றும்.
ஆனாலும், இது உண்மையா? என்று அறிய வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண் டியதெல்லாம் 4 அங்குல விட்டமுள்ள தொலை நோக்காடி (Telescope) மூலம் சனியைப் பார்த்து விடுவதே!
ஆமாம்! ஒரு வளையம் ஒன் றென்ன- மூன்று வளையங்கள் (Rings) அக்கோளினைச் சுற்றியமைந்துள்ள தைக் காண்பீர்கள்!
சனியும் அதைச் சுற்றியுள்ள வளை யங்களும் மிகமிக ஆவலூட்டும் வியப் புக்குரிய விந்தையான காட்சிகளை அளிக்கும்.
இயங்கும் கோள்களிலேயே மிக அழகான கோள் இந்தச் சனிதான்!
1610 ஆம் ஆண்டு கலீலியோ தமது செப்பமுறாத சிறு தொலைநோக்கி மூலம் இவ்வளையத்தின் இரு பகுதிகளைக் கண்டு அவை இன்ன எனத் தெரியாமல் மலைத்துப் போனார்!
சனியானது ஒரு கோளும், இயக்க மற்ற இரு சந்திரன்களும் ஒன்றாக இணைந்து வியப்பான இடைபெருத்த ஒரு மொத்தையைப் போலத் தோன்றி யது அவருக்கு!
இம்மூன்று பொருள்களையும் காதுகளை உடைய ஒரு வகைச் சனி என்று விளக்கமளித்தார் கலீலியோ.
No comments:
Post a Comment