1960களின் பிற்பகுதி வரை கேதோட் கதிர் டியூப் தொலைக்காட்சிப் பெட்டி கள் மிகுந்த குறைந்த அளவிலான அல்ட்ரா வயலட் கதிர்வீச்சை வெளிப்படுத்தியதால், தொலைக்காட்சியைப் பார்ப்பவர்கள் அப்பெட்டி யில் இருந்து ஆறு அடி தொலைவுக்குள் உட்கார வேண்டாம் என்று அறி வுறுத்தப்பட்டனர்.
குழந்தைகளின் நிலைதான் மிகவும் மோசமாக ஆனது. தொலைவில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளும் அளவில் அவர்களது கண்பார்வை சிறப்பாக இருப்பதாகும். அதனால் பெரியவர்களை விட சிறிய குழந்தைகள் தொலைக்காட்சிப் பெட்டிக்கு மிக அருகில் உட்கார்ந்து பார்க்க முடிந்தது.
தங்களது கேதோட் கதிர் டியூப்களில் ஈயம் பூசப்பட்ட கண்ணாடியைப் பயன்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தயாரிப்பாளர்களையும் நாற்பது ஆண்டு களுக்கு முன்பு, கதிர்வீச்சுக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு சட்டம் வலியுறுத்தியது. இதன் மூலம் தொலைக்காட்சிப் பெட்டிகள் முற்றிலுமாக பாதுகாப்பு நிறைந்தவையாக ஆகிவிட்டன.
என்றாலும் உண்மையான கேடு அதைப் பார்ப்பவர்களை அது சோம்பேறிகளாக மாற்றிவிடுவதுன். கடந்த இருபது ஆண்டுகளில் இங்கிலாந்து நாட்டின் குழந்தைகளிடையே உடல் பெருக்கும் நோய் (Obesity) மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது.
இதற்குக் காரணமே தொலைக்காட்சிதான் என்று கூறப்படுகிறது. மூன்று முதல் ஒன்பது வயது வரையிலான சராசரி குழந்தை வாரத்தில் தொலைக் காட்சி பார்ப்பதில் 14 மணி நேரம் செலவிடுகிறது; ஆனால் விளையாட்டுக்கும் மற்ற செயல்பாடுகளுக்கும் ஒரே ஒரு மணி நேரம்தான் செலவிடுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு கவனக் குறைபாடு நோய் (Attention Deficit Disorder) வருவதற்கு 30 விழுக்காடு கூடுதல் வாய்ப்பு உள்ளதென, 2004 ஆம் ஆண்டில் Pediatrics என்ற பத்திரிகையில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு சராசரி அமெரிக்கக் குடும்பத்தில் எட்டு மணி நேரம் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதாக நிக்கல்சன் நிறுவனம் 2005 இல் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இது 12.5 விழுக்காடு கூடுதலானதாகும். அதிக அளவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களைப் பற்றி முதன் முதலாக 1950 இல் கணக்கிடப்பட்டது.
அமெரிக்கர்கள் 70 வயதாகும் போது, அதுவரை மொத்தமாக எட்டு ஆண்டுகள் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே கழித்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
1 comment:
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
Post a Comment