Monday, December 5, 2011

வேலை?


கல்வி, வேலை வாய்ப்பு இரண்டும் சமூகத்தின் இரு கண்கள்! இவ்விரண்டிலும் முன்னேறிய சமுதாயம்தான் வளர்ச்சி அடைந்ததாகக் கருதப்படும். தனி மனித வளர்ச்சி சமூக முன்னேற் றம் எல்லாம் இதில் அடங்கி யுள்ளன.

திராவிடர் கழகம் வேலையில்லாதாருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்திய துண்டு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை  2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வேலை வாய்ப்பு அலுவல கங்களில் பதிவு செய்துள் ளோர் விவரம் வருமாறு:
ஆதி திராவிடர் 16,140,45 அருந்ததியர் 1,27,178
பழங்குடியினர் 25,606
பிற்படுத்தப்பட்டோர் - 30,58,148
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 15,41,201
பிற்படுத்தப்பட்டோர் - முசுலிம்கள் - 2,09,155
இதர வகுப்பினர் - 6,09,153
கூடுதல்-71,84,486 ஆகும்.
இதில் ஆண்கள் - 38,60,377 பெண்கள் - 33,84,109
கல்வி அடிப்படை உரிமை என்பது போல, வேலை வாய்ப்பையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்ற குரலை திராவிடர் கழகம் கொடுத்து வந்துள்ளது; பல மாநாடுகளில் தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாள் ஆக ஆக வேலை வாய்ப்பற்றோர் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் போகும்.
நாட்டில் வன்முறைகள் வலுப்பதற்கு வேலை வாய்ப் பின்மையே முக்கிய கார ணம் என்று பல துறையின ரும் அவ்வப்போது சொல் லிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்கள் நடை பெறுவதைத் தவிர்க்க வேலை வாய்ப்புக்கான திட்டங்களை எல்லாம் நீதிபதி மோகன் குழு அளித் துள்ளது என்பதெல்லாம் உண்மைதான்.
அவை எல்லாம் ஏட்டளவில் படுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கின்றனவே தவிர, உயிர் கொடுத்து செயலாக்கம் செய்யப்படவில்லை.
இப்பொழுதெல்லாம் அரசுத் துறைகளும், பொதுத்துறைகளும் அருகி, தனியார்த்துறைகளும், பன்னாட்டு நிறுவ னங்களும் படையெடுத்து விட்டன - மேலும் தலை களை நீட்டிக் கொண்டும் இருக்கின்றன.
அரசுத் துறைகளில் மிகப் பெரிய பதவிகளில் இருந்தவர்கள், இந்தத் தனியார் துறை முதலாளி கள் விரிக்கும் அதிக சம்பளம் என்ற புல்வெளி யில் மேயக் கிளம்புகின் றனர். பெரும்பாலும் பார்ப் பனர்கள், கேந்திரமான இடங்களில் அமர்ந்து கொண்டு, வேலை நிய மனங்களில் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர், கூடுமான வரை உள்ளே நுழையாமல் சர்வ விழிப் பாகப் பார்த்துக் கொண் டிருக்கின்றனர்.
தனியார்த்துறைகளிலும் இடஒதுக்கீடு என்கிற பூகம்பம் வெடித்தாலொழிய இதற்கு விடிவு இல்லை. இளைஞர்களே தயாராவீர்!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...