தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப் பட்ட தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்தநாள் டிசம்பர் 2 (1933).
சிவகங்கையிலே திராவிடர் கழகப் பொதுக் கூட்டம், வழக்குரைஞர் இரா. சண்முகநாதன் தலைமையில் தந்தை பெரியார் உரையாற்றினர் (10.4.1965). கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் கூறிய கருத்துக்குப் பதில் அளிக்கும் முறையில் தந்தை பெரியார் சொன்ன கருத்து மிகவும் முக்கிய மானது - அழுத்தமான கோடிட்டுக் காட்டத் தகுந்ததே!
தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழி காட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்தத் தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல. உணர்ச்சியும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால் அவன் அடுத்து தலைமையேற்க வருவான். அதுவரை யார் என்றால் இந்தப் புத்தகங்கள்தான். வேறு யாரும் வரக் கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவன் இருந்தால் அவன் வருவான். முகம்மது நபியைப் பார்த்து உங்களுக்குப்பின் யார் என்று கேட்டதற்கு அவர், எனக்குப்பின் வேறு யாருமில்லை என்று கூறி விட்டார் - நான் அப்படிக் கூறவில்லை.
அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம் என்று குறிப்பிட்டார் தொலை நோக்காளர் தந்தை பெரியார் (விடுதலை 23.4.1965 பக்கம் 3).
இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் நூற்றுக்கு நூறு சரியாக, துல்லியமாகத் தகுதிப்பாடும், பொருத்தமும் உள்ளவர் நமது தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் என்பதில் எள் மூக்கு அளவும் அய்யமேது?
பத்து வயதில் இயக்கத்தில் அடி எடுத்து வைத்து 79 வயதுவரை இலட்சியப் பார்வையில் கோணல் இல்லாது, ஏற்றுக் கொண்ட தலைவரின் எதிர்பார்ப்புக்குச் சிறிதும் பங்கமில்லாது, தோளில் சுமந்த கொடியை நழுவ விடாது, பெயருக்கேற்ற வீரமணியாய் வீறு நடைபோடும் தலைவராக - இயக்கமும், நாடும், எந்தமிழரும் ஏற்றுக் கொண்டுள்ள நாணயமிக்கத் தலைவராக நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டு இருக்கிறாரா - இல்லையா?
எதிரிகள் இவர்மீது வைத்த குறிகள் சாதாரண மானவையா? பழனியில் பார்ப்பனர்கள் மாநாடுகூட்டி பாடை கட்டித் தூக்கிச் சென்றதன் பொருள் என்ன?
ஓ, சூத்திரத் தமிழர்களே! இவர்தான் உங்கள் தலைவர் - தமிழர் தலைவர்! என்று மறைமுகமாக பறையடித்துச் சொல்லிவிட்டார்கள் நம் இனப் பகைவரான பார்ப்பனர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பெரியாரைப் புரிந்து கொள்ளாதவர் என்று பொருள். காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு எதிராகப் பொலிவுறும் தந்தை பெரியார் சிலையைப் பாருங்கள். சிறீரங்கம் ரெங்கநாதன் கோவிலின் முன் முறுவலிக்கும் பகுத்தறிவுப் பகலவனின் சிலையைக் கவனியுங்கள்.
எந்தக் காலத்தில் யார் முயற்சியால் இவை உருவாக்கப்பட்டன? இதற்குள் புதைந்திருக்கும் தத்துவம் என்ன? சீலம் என்ன? பலம் என்ன? சாதனை என்ன? என்பதை புரிந்துகொள்ள முடியாவிட்டால் எதிரிகளைக் கேளுங்கள் மிகச் சரியாகவே சொல்லி விடுவார்கள்.
ஒன்றை நினைவில் வையுங்கள். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் செயலை அவர் முறியடிக்கா விட்டால் இந்தியா முழுமையும் இந்நேரம் இடஒதுக்கீட்டின் அளவுகோலில் பொருளாதாரமும் புகுந்திருக்கும்.
பிச்சை எடுப்பது தானே பார்ப்பான் தொழில் (யாசகம் புருஷ லட்சணம்!) தன் வறுமையைக் காட்டி தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் கீழே தள்ளி அவர்களின் முதுகுமேல் ஏறி அனைத்துத் துறை களிலும் அட்டாணிக் கால் போட்டு உட்கார்ந்திருப்பான்.
திராவிடர் கழகத்தில் தலைமை ஏற்று களப்பணிகள், பிரச்சாரப் பணிகள், அவர் ஆற்றத் தவறியிருந்தால் ஆர்.எஸ்.எஸ். கள்ளி தமிழ் மண்ணில் மண்டியிருக் காதா? பி.ஜே.பி.யின் தாமரைக் கொடி மனுதர்ம வேரோடு பட்டொளி வீசிப் பறந்திருக்காதா?
கருநாடகம் வரை கால் பதித்த கூட்டம் தமிழ் மண்ணிலும் வலம் வர எத்தனை நாள் பிடித்திருக்கும்?
திராவிட இயக்கத்தின் போலிகளை அடையாளம் காட்டும் அக்மார்க் முத்திரையும் இவர் கையில்தானே இருக்கிறது? திராவிட இயக்கப் போர்வையில் நுழைந்த அம்மையாரையும் பயன்படுத்தி, 69 சதவிகிதத்துக்குக் காப்பு கட்டிய காரியத்தையும் செய்ய மானமிகு வீரமணியால் முடிந்தது என்றால் இதன் பொருள் என்ன?
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளைக்கூட எரிக்கும் அந்தத் துணிவு யாருக்கு இருந்தது?
ஆட்சிமன்றம் செல்லாத ஒருவர் எழுதிக் கொடுத்த சட்டம்தானே சட்டமாக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் சொன்னாரே அறிவும், துணிவும், உணர்ச்சியும் கொண்ட ஒருவன் தலைமை ஏற்க வருவான் என்பது மானமிகு வீரமணி அவர்களின் தலைமையில் மெய்ப்பிக்கப்படவில்லையா?
அவர் பணி மேலும் தேவைப்படுகிறது; அவர் ஆயுள் நீள வேண்டியது அவசியமாகும். கழகத் தோழர்களே, 50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் கவனம்! கவனம்!! அவர் ஆயுளை நீள வைக்கும் அந்த சஞ்சீவிப் பர்வதத்தின் மூலிகையைக் கொண்டு வந்து கொடுப்பீர்! கொடுப்பீர்! வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அவர் தொண்டர் நமது தலைவர் மானமிகு வீரமணி!

No comments:
Post a Comment