(சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கலை மற்றும் சமூக அறிவியல் துறையின் தெற்காசிய ஆய்வுத் திட்டம் ஏற்பாடு செய்து 17.11.2011 அன்று நடத்திய கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது)
வணக்கம். அனைவருக்கும் எனது மாலை வணக்கம்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய சமூக சீர்திருத்த இயக்கத் தைப் பற்றி விளக்கிப் பேசுவதற்கான ஒரு வாய்ப்பை எனக்கு அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையிலேயே, மக்களைப் பற்றி, குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளும் கருத்தாக்கமும், செயலாக் கமும் கொண்ட ஒரு புதிய இயக்கம் இது. உலக அளவில் இல்லாவிட்டாலும், இந் திய அளவிலான வரலாற்றில் இதுவரை நாம் பார்த்திருப்பவற்றிலேயே மிகப்பெரிய மனிதநேய இயக்கம் இதுதான். இந்த சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் அவர்களால் 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அந்தந்தக் காலத் தேவைகளுக்கு ஏற்பவே எந்த ஓர் இயக்கமும் தோன்று கிறது. பெரியார் அவர்களின் பெரும் அனுபவங்களும், அவரது வாழ்வில் அன்றாடம் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும், இந்த இயக்கம் தோன்றுவதற்கான கருவி களாக அமைந்தன. ஈரோட்டில் ஒரு பணக்காரராக வாழ்ந்த அவர் கடவுள் நம்பிக்கை நிறைந்த ஒரு பழைமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். முறையான பள்ளிக் கல்வி பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அதுவே, தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே எதையும் ஏன், எதனால், எது, எப்படி என்ற கேள்விகளைக் கேட்கும் ஒரு சுய சிந்தனையாளராக மாற உதவியது ஒரு நற்பேறாக அமைந்தது. இத்தகைய சிந் தனை ஆயுதங்களே அவரது படைவீட்டில் இருந்தவையாகும். மதிப்பு மிகுந்த, மறுக்க இயலாத அவரது கேள்விகளில் இருந்தும், சமூகத்தைப் பற்றிய அவரது கவலைகள் மற்றும் அக்கறையிலிருந்தும் பிறந்தது இந்த சுயமரியாதை இயக்கம். இந்த இயக்கத்தை உருவாக்க அவர் எந்த நூலகத்திற்கும் செல்லவில்லை; சன்னி யாசியைப் போன்று எந்த தியானத்தையும் செய்யவில்லை. அவரது குழந்தைப் பருவம் முதல் அவர் பெற்றிருந்த அவரது சொந்த அனுபவங்களே இந்திய வரலாற்றிலேயே மிகப் புதுமை வாய்ந்த ஓர் இயக்கத்தைத் தோற்றுவிக்கத் தூண்டுகோலாக அமைந்தன. அயல்நாட்டு மக்களினால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு தனித் தன்மை மிகுந்த ஒரு சமூகமாக விளங் குவது இந்திய சமூகம். இந்த இயக்கத் தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் இந்திய சமூகக் கட்டமைப்பைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். முதலில் கிழக்கு இந்தியாவில் வங்காளத்தில் பிரம்ம சமாஜம் என்ற பெயரிலும், மேற்கு இந்தியாவில் பஞ்சாபில் ஆர்ய சமாஜ் என்ற பெயரிலும் தோன்றிய சமூக சீர்திருத்த இயக்கங்கள் மதங்களைச் சீர்திருத்தத் தோன்றியவை. ஆனால் சுயமரியாதை இயக்கமோ, ஒட்டு மொத்த சமூகத்தையும் இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட மாபெரும் மனிதநேய சீர்திருத்த இயக்கங்களில் ஒன்றாக விளங்குவதாகும்.
இந்திய சமூகம் அடிப்படையில் ஜாதி கள் மலிந்த ஒரு சமூகமாகும். ஜாதி என்ற அமைப்பு என்பது என்ன? ஒருவரின் தகுதியும், வாய்ப்புகளும் அவரது பிறப் பால் முடிவு செய்யப்படுகின்றன. ஒருவர் தான் விரும்பினாலும், தான் பிறந்த குடும்பத்தின் ஜாதியை மாற்ற முடியாது. ஒருவர் தான் பின்பற்றும் மதத்தை மாற்றிக் கொள்ளலாம்; தான் ஆதரிக்கும் அரசியல் கட்சியை மாற்றிக் கொள்ள லாம்; ஆனால் தன் ஜாதியை மட்டும் எவராலும் மாற்றிக் கொள்ள முடியாது. சாஸ்திரங்கள், வேதங்கள் மற்றும் இதர மத நூல்களில் மட்டுமன்றி, இந்திய உச்சநீதிமன்றத்தினால் அண்மைக் காலத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளிலும் இந்த ஜாதி அமைப்பு அங்கீகரிக்கப்பட் டுள்ளது. இந்தியாவில் இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும், அயல்நாட்டு மதங்களுக்கு மாறி பின்பற்றி வரும் இந்தியர்களும்கூட, இந்த ஜாதி அமைப் பின் கீழே வருபவர்களேயாவர். இதற்கு எடுத்துக்காட்டாக கிறித்துவ, சீக்கிய மதங்களைக் குறிப்பிடலாம். ஒருவர் ஒரு ஜாதியில் பிறந்தால், அதே ஜாதியில் வாழ்ந்து அதே ஜாதியில் இறக்கிறார். அவரது உடல் புதைக்கப்படுவதிலும் அல்லது எரிக்கப்படுவதிலும்கூட அவர் ஜாதி அவரை விட்டுப் போகவே போகாது. அத்தகைய கொடுமையான அமைப்பு தான் இந்த ஜாதி அமைப்பு. அச்சுறுத்தும் இந்த ஜாதிஅமைப்பு என்னும் பெருங்கேட்டை ஒழிக்கவேண் டும் என்ற அடிப்படையிலேயே பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் இந்த இயக் கத்தைத் தொடங்கினார். மனிதர்கள் ஏன் தங்களது பிறப்பினால் வித்தியாசப்படுத் தப்பட வேண்டும்? உலகில் வேறு எந்தப் பகுதியிலும் மனிதர்கள் இத்தகைய இழிவை சந்தித்ததே இல்லை. ஜாதி வர்ண நடைமுறையில் சமூகத்தில் கீழான வர்களுக்கும் கீழாக பெண்கள் வைக்கப் பட்டிருந்ததால், பெண்களுக்கு எதிராக வும் இத்தகைய பாகுபாடு காட்டப்பட்டது. சதுர் வர்ண (நான்கு பிரிவு) நடைமுறை யில், டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய படி, சமத்துவமின்மை நிலவியது மட்டு மன்றி, பல்வேறு ஜாதிகளிடையே ஒன்றின் கீழ் ஒன்றாக ஏணிப்படி போன்ற படிப்படியான ஏற்றத் தாழ்வுகளும் நில வியது. நான்காவது பிரிவான சூத்திரர் களுக்குப் பிறகு அய்ந்தாவது பிரிவாக தீண்டத்தகாதவர்கள் அல்லது பார்க்கப் படாதவர்கள் பஞ்சமர் என்ற பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கும் கீழே சமூக ஏணியில் பெண்கள் வைக்கப்பட் டிருந்தனர்.
காரண, காரிய பாதிப்பு பற்றிய பகுத் தாயும் கோட்பாடு என்பதுதான் சுயமரி யாதை இயக்கத்தின் தத்துவமாகும். இத் தகைய பாகுபாடு ஏன் என்று பெரியார் கேள்வி எழுப்பினார். ஜாதிய நடைமுறை யைப் பாதுகாத்து, அதன் மூலம் தாங்கள் ஆதாயம் பெற வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சுயநலவாதிகள் இந்த ஜாதி நடைமுறை மனிதர் உருவாக்கியதல்ல, கடவுளே உண்டாக்கியது என்று பெரியாரின் கேள்விக்கு பதில் அளித் தனர். தங்களுக்கு நேரும் அனைத்து நன்மை, தீமைகளுக்கும் விதியே காரணம் என்ற நம்பிக்கை இந்த ஜாதிய நடைமுறையை மேலும் உறுதியானதாக ஆக்கியது. ஆனால் பெரியார் இது போன்ற கட்டுக்கதைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜாதி அமைப்பை மட்டுமன்றி, இந்த ஜாதிய அமைப்பை ஆதரிக்கும் அனைத்து வேர்களையும், மூல அமைப்புகளையும், அது கடவுளா கட்டும், மதமாகட்டும், சடங்குகள், சாத்திரங்கள் எவையானாலும் அவை அனைத்தையும் வேரோடு அழிக்க வேண்டுமென்று பெரியார் விரும்பினார்.
அனைத்து மனிதர்களுக்கும் சுதந் திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகி யவை அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது சுயமரியாதை இயக்கம். மக்கள் தொகையில் பாதி அளவினராக இருக்கும் பெண்கள் ஆண்களின் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்று, அதிகாரம் பெற்று மேன்மை யடையவேண்டும் என்பதும் இந்த இயக்கத்தின் மற்றொரு முக்கியமான கொள்கையாகும். இந்த இயக்கம் தோன்றுவதற்கு முன் பெண்கள் கொடு மையாக நடத்தப்பட்டனர். கணவரை இழந்த கைம்பெண்கள் சதி என்ற பெயரால், கணவர் உடலுடன் உயிருடன் எரிக்கப்பட்டனர். ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இன்றும் இந்த சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் நிலவுகிறது. அங்குள்ள சதிதாய் கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தென் இந்தியாவில் இத்தகைய பழக்கங் களை உங்களால் காண முடியாது. குழந் தைகள் திருமணம் முன்னர் சாதாரண மாக இருந்தது. பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் முன்னரே திருமணம் செய்து கொடுக்கப்பட்டுவிடவேண்டும் என்ற வழக்கம் இருந்தது. அவ்வாறு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட மணமகன் இறந்துவிட்டால், அவனது மனைவியான சிறுமி காலம் முழுவதிலும் விதவையாகவே வாழவேண்டும். இத்தகைய குழந்தைகள் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சுயமரி யாதை இயக்கம் வலியுறுத்தி, அதை நடைமுறைப்படுத்தவும் செய்தது.
பெண்களுக்கு மூதாதையரின் சொத் தில் எந்த உரிமையும் இருக்கவில்லை. பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் அண்மையில் தான் நிறைவேற்றப்பட்டது. இது பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் மிகப் பெரிய சாதனையாகும்.
வேலை வாய்ப்புகள்உயர் ஜாதியினரின் ஏகபோக உரிமையாக இருந்து வந்தன. நான்காவது பிரிவினரான சூத்திரர்களுக் கும், கீழ்ஜாதி பஞ்சமர்களுக்கும், பெண் களுக்கும் படிப்பது, எழுதுவது, கணக்கு போடுவது ஆகியவை மறுக்கப்பட்டிருந் தன. அவர்களுக்கு கல்வி மட்டுமே மறுக்கப்படவில்லை. அவர்கள் கல்வி கற்கவோ, வேதங்களைப் படிக்கவோ, அறிவைப் பெறவோ முயன்றால் தண்டிக் கப்பட்டார்கள். பல நூறாண்டு காலமாக நிலவி வந்த நடைமுறை இதுதான். பெரும் பாலான மக்கள் தாங்கள் வாழ்வதற்காக, மண்ணை உழுது விவசாயம் செய்பவர் களாகவும், உடலால் உழைப்பவர்களாகவும், கீழ்நிலை அல்லது இழிவான பணிகளைச் செய்பவர்களாக இருந்தனர். இந்த கொடுமையான நிலையை எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டும் என்று இந்த இயகத்தைத் தவிர வேறு எந்த அமைப்பும் நினைக்கவில்லை. இதன் காரணம் அவர்கள் எல்லாம், ஒருவரது நிலை அவர் முற்பிறவியில் செய்த செயல்களுக்கு ஏற்றபடிதான் அமையும் என்ற விதி என்ற கோட்பாட்டின் மயக்கத்தில் இருந்தது தான். தர்மத்தைப் பிறழாமல் கடைப்பிடித்து இப்பிறவியில் நல்ல செயல்களை செய் தால், அடுத்த பிறவியில் அவர்களுக்கு மாற்றம் அல்லது நிவாரணம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர்.
- தொடரும்
No comments:
Post a Comment