Thursday, November 17, 2011

அமெரிக்காவுக்கு யார் பெயர் வைக்கப்பட்டது?


இத்தாலிய நாட்டு வியாபாரியும்,  தேசப் படங்கள் வரைபவருமான அமெரிக்கோ வெஸ் புகியின் பெயர் அமெரிக்காவுக்கு வைக்கப்பட வில்லை. வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பணக் கார வியாபாரியான ரிச்சர்ட் அமெரிக் என்பவரின் பெயர்தான் அமெரிக்காவுக்கு வைக்கப்பட்டது.
கனடா நாட்டின் மீது ஆங்கிலேயர் உரிமை கொண்டாட வழி வகுக்க - 1497, 1498 ஆம் ஆண்டுகளில் அடித்தளம் அமைத்த கியோவான்னி கபாட்டோ என்ற இத்தாலியரின் ஆங்கிலப் பெயரான ஜான் கேபாட் என்பவர் மேற்கொண்ட இரண்டாவது அட்லாண்டிக் பெருங்கடல் பயணத்திற்கு பெரும் முதலீடு செய்தவர் இந்த அமெரிக்கே ஆவார். 1484 இல் ஜெனோவாயில் இருந்து லண்டனுக்கு வந்த இவருக்கு, மேற்கே உள்ள இதுவரை கண்டுபிடிக்கப் படாத நிலங்களுக்குப் பயணங்கள் ஏற்பாடு செய்து அனுப்பித் தேடுவதற்கு 7 ஆம் ஹென்றி மன்னர் அதிகாரம் அளித்தார்.
மாத்யூ என்ற தனது சிறிய கப்பலில் கேபாட் 1497 மே மாதத்தில் லேப்ரேடரை அடைந்தார். இதன் மூலம் அமெரிக்க மண்ணில் முதன் முதலாகக் கால் வைத்த அய்ரோப்பியர் என்ற புகழை அவர் பெற்றார்.  இது  வெஸ்புகி பயணத்திற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியாகும்.
வடஅமெரிக்காவில் நோவா ஸ்கோடியா முதல் நியூபவுண்ட்லேண்ட் வரை கேபால் வரைபடம் தயாரித்தார். இந்தப் பயணத்திற்கு முக்கியமாக முதலீடு செய்த ரிச்சர்ட் அமெரிகோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டுக்குத் தனது பெயரை வைக்கவேண்டும் என்று எதிர்பார்த்து இருந்திருக்கலாம்.  அந்த ஆண்டின் பிரிஸ்டால் நாள்காட்டியில், புனித ஜான் பாப்டிஸ்ட் தினம் (24 ஜூன்),  மாத்யூ என்று அழைக்கப்பட்ட பிரிஸ்டோ கப்பலில் பயணம் செய்த வியாபாரிகளால் அமெரிக்கா என்னும் நிலம் கண்டுபிடிக்கப்ட்டது என்ற பதிவு ஒன்று உள்ளது. என்ன நடந்தது என்பதை இது தெளிவாகத் தெரிவிக்கிறது. இந்த நாள்காட்டியின் அசல் இப்போது இல்லை என்றாலும், மற்ற சமகால ஆவணங்கள் பலவற்றில் அது பற்றி செய்யப்பட்டுள்ள குறிப்புகள் உள்ளன. இந்தப் புதிய நிலத்தை, கண்டத்தைக் குறிப்பிட அமெரிக்கா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
இந்தப் பெயரைப் பயன்படுத்தி வரையப்பட்ட   இன்று வரை உள்ள பழமையான படம் 1507 இல் மார்டின் வால்ட்சீமுல்லர் என்பவரால் வரையப்பட்ட உலகப் படமேயாகும். ஆனால் அது தென் அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும்.  1500 லிருந்து 1502 வரை தென் அமெரிக்க கடற்கரைப் பகுதிகளைக் கண்டுபிடித்து வரைபடம் தீட்டியவர் வெஸ்புகி ஆவார் என்பதால் அமெரிக்கோ வெஸ்புகியின் லத்தீன் மொழிப் பெயரில் இருந்து இது தோற்றம் பெற்றிருக்கலாம் என்று ஊகித்து தனது குறிப்புகளில் மார்டின் வால்ட்சீமுல்லர் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து அவர் இதனைப் பற்றி சரியாக அறிந்து இருக்கவில்லை என்பதும், மற்ற வரைபடங்களில் தான் கண்டவற்றில் இருந்து ஒரு பெயரைக் குறிப்பிட அவர் முயன்றதால் கேபாட்டின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம் என்பதும் தெரியவருகிறது. அமெரிக்கா என்ற பெயரை அறிந்திருந்து பயன்படுத்திய ஒரே இடம் பிரிஸ்டால்தானே தவிர, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வால்ட்சீமுல்லர் சென்றிருக்கக்கூடிய இடங்களில் காணப்பட்டதல்ல.  1513 இல் தான் வரைந்த உலகப் படத்தில் அமெரிக்கா என்ற பெயருக்கு பதிலாக அறியாத நிலம்  (கூநசசய ஐஉடிபவைய)  என்ற சொல்லைப் அவர் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெஸ்புகி வடஅமெரிக்காவுக்கு எப்போதுமே சென்றதில்லை. வடஅமெரிக்காவுடன் மேற்கொள்ளப் பட்ட அனைத்து வியாபாரமும், ஆரம்ப கால வரைபடங்களும் ஆங்கிலேயர்களுடையதாகவே இருந்தன. தான் கண்டு பிடித்த நிலத்துக்கு  அமெரிக்கா என்ற பெயரை வெஸ்புகி எப்போதுமே பயன்படுத்தவில்லை. இதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. புதிய நாடுகள், அல்லது கண்டங்கள் எவரது முதற்பெயரைக் கொண்டு பெயரிடப்படுவதில்லை. இரண்டாம் பெயரைக் கொண்டுதான் குக் தீவுகள் என்பது போல் பெயரிடப்படுவது வழக்கம். இத்தாலிய நாட்டு வெஸ்புகி தான் கண்டுபிடித்த நாட்டுக்குத் தனது பெயரை அளித்திருந்தால், அது வெஸ்புகி நிலம் என்றோ வெஸ்புகிசியா என்றோ இருந்திருக்க வேண்டும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General  Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...