Sunday, November 27, 2011

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (4) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்


தொகுப்பாளர்: திராவிடர் இயக்க ஆய்வாளர்
அருணாஅரசுகோ பாவேந்தன்

3. சிற்றாறுகளிலுள்ள மதகுகள் போன்ற அநேக சில்லறைக் கட்ட டங்கள் கவனமில்லாமல் பாழாகிக் கொண்டு வருகின்றன.

4. அநேக சிற்றாறுகளில் ஜலவாட் டம் ஸரியாக இல்லை.

5.அநேக இடங்களில், வெகுவாய் கடல்கரை தாலுகாக்களில், வடிகால் வஸதிகள் ரொம்பவும் கேவல ஸ்திதியில் இருக்கின்றன.

கடல்கரை தாலுகாக்களில் ஸரியான ஜலமில்லை என்ற ஒரு கஷ்டம் மட்டு மல்ல, உதாரணமாய் கடற்கரை தாலுகாவாகிய சீயாழி தாலுகாவை எடுத்துக் கொள்வோம். முதலில், அதற்கு காவேரியிலிருந்து நேரே ஜலம் அநேகமாய் பாசனத்துக்கு வருவதில்லை என்னலாம்.  வடிகால் ஜலம் பாயும் பழவாற்றிலிருந்து கிடைக்கும் ஜலந்தான் அந்தத் தாலுகாவுக்கு காவேரியிலிருந்து  வரும் பாசன ஜலமாகிறது. காவேரியிலிருந்து அந்தத் தாலுகாவுக்குப் போதுமான ஜலம் வருவதில்லையென்பது வெகு காலத்துக்கு முன்னயே தெரிந்த விஷயம். 1866 ஆம் வருஷத்தில் கர்னல் ஓக்ஸ் என்பவர் எழுதிய ரிபோர்ட்டில் தெரிவித்திருக்கிறார். காவேரி அணைமேல் 5 அடி ஜலம் ஓடினால் காவேரியை அனுஸரித்த சிற்றாறுகளில் போதுமானதும் பூர்த்தியானவுமான ஜலம் போகவேண்டும். ஆனால் காவேரி ஸரிவரயில்லாததால் காவேரி அணை மேல் 7 அடி ஜலம் ஓடினால், அல்லது, ஜில்லாவுக்கு வேண்டிய அளவுக்கு இரண்டு மடங்காக ஜலம் பாய்ந்தால் தான் மாயவரம் தாலுகாவில் போது மான ஜலம் கிடைக்கிறது. அப்பொ ழுதும், சீயாழி தாலுகாவில் ஒரு பாகத்தில் ஜலம் மிகவும் குறைவாக இருந்தது.

வேண்டும் காலத்தில் பாசனத்துக்குப் போதுமான ஜலமில்லாத கஷ்டம் மட்டுமல்ல. ஜூலை மாஸத்தில் ஜலம் கிடைக்காவிட்டால் விவஸாயம் ஆரம்பிக்காமல் வட கிழக்கு மழைக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டி யிருக்கிறது. அது வந்ததும் அதோடு பழவாற்றிலும் வேண்டாத அகாலத்தில் வடிகால் ஜலம் வந்துவிடுகிறது. வடகிழக்குப் பருவ மழையாலும், தாம ஸித்து வரும் பழவாற்று ஜலத்தாலும் சீயாழிக்கு வேண்டாத காலத்தில் அதிக ஜலம் வந்து ஒரே வெள்ளமாகி விடுகிறது. கடற்கரை ஓரமாய் பூமி அதிக வாட்டமா யிராததினால் ஸரியான வடிகால் ஏற்பட இடமில்லாமல் இருக்கிறது. அநேக கெடுதல்களால் சீயாழியில் ஸரியான பாசனமில்லாமல் ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள்.

சீயாழி தாலுகாவில் மூன்று பாசன ஆதாரங்களான ஆறுகளில், கொள்ளிடத்திலிருந்து பிரியும் ராஜன் வாய்க்கால் 14,000 ஏகராவுக்குப் பாய்கிறது. பழவாறு 38,000 ஏகராவுக்குப் பாய்கிறது.  காவேரி 6000 ஏகராவுக்குப் பாய்கிறது. கொள்ளிடத்திலிருந்து ராஜன் வாய்க்கால் வழியாக வரும் ஜலம் விவஸாயத்துக்கு போதுமானது. ஆனால் ஜலம் ரொம்பவும் வீணாகப் போய்விடுகிறதென்று குறைப்பாடா யிருக்கிறது. காவிரியிலிருந்தும், பழவாற்றிலிருந்தும் வரும் ஜலம் பயிரிடும் காலத்தில் மிகக் குறைவாகவும், வடகிழக்கு மழை காலத்தில் வருவதில் கெடுதலுண்டாக்குவதாயு மிருக்கிறது. சீயாழி தாலுக்காவுக்கு ஸரியான வடிகால் ஏற்படுத்துவதைப் பற்றியும், தெற்கு ராஜன் வாய்க்காலையும், குமுக்கு மண்ணியாற்றையும் சீர்திருத்தி அவைகளின் வழியாக அதிக ஜலம் கொண்டு வந்து பழவாற்றிலும் புது மண்ணியாற்றிலும் விட்டு பாசனத்தை வ்ருத்தி செய்வதைப் பற்றியும் ப்ரே ரணைகள் செய்யப்பட்டன. கொள்ளி டத்திலிருந்து கீழ் அணைக்கட்டுக்கு மேல், பழவாற்றுக்கு அதிக ஜலம் விடுவதைப் பற்றியும் ஆலோசனை செய்தார்கள். என்ன யோசனை செய் தென்ன, என்ன ஆராய்ச்சிகள் செய்து பார்த்து மென்ன, நாளது வரையில், விவஸாயகாலத்தில் போதுமான ஜலம் இன்னும் வந்தபாடில்லை.; காலா காலத்தில் விவஸாயம் செய்யாத பட்சத்தில் தகுந்த வேலையாட்கள் கிடைப்பதில்லை. விவஸாய வேலைகள் முடியும் வரையில் போதுமான ஜலம் கிடைப்பதும் கஷ்டமாகிவிடுகிறது. ஜூலை மாஸத்தில் போதுமான ஜலம் முதல் போக ஸாகுபடிக்குக் கிடைக் குமானால், சீயாழி மிராசுதார்கள் இரண்டாவது போகம் ஸாகுபடி செய்யக் கூட ஆசைப்படமாட்டார்கள். இப்படி காலா காலத்தில் ஸாகுபடி செய்ய முடியாமலும், வெள்ளம் பாழாய் போய் மாஸூல் கிட்டாததாலும் கடற் கரை தாலுகாக்களிலுள்ள ஜனங்கள் பயமடைந்து அதனால் அநேகர் அந்தத் தாலுகாக்களிலிருந்து பிற விடங்களுக் குக் குடியேறிச் செல்கின்றார்கள்.

பட்டுக்கோட்டையிலுள்ளவர்களுக்கு இவைகளை யெல்லாம் பற்றி அவ்வளவு கவலை இல்லாமலிருக்கலாம். காவே ரியிலோ அமராவதியிலோ அல்லது பவானியிலோ அல்லது வேறு எங்கேயோ அதிக ஜலம் தேக்கி வைத்து, பட்டுக்கோட்டை முதலிய இடங்களுக்கு ஜலம் வரும்படி ஏற்பாடு செய்ய உத்தேசித்திருக்கும் காவேரி ப்ராஜெக்ட்டைப் பற்றித்தான் அவர்கள் அதிகம் கவனிப்பார்கள். இப் பொழுது இருக்கும் பாசன வடிகால் ஏற்பாடுகளை திருத்தம் செய்து கொண்டால் காவேரி ப்ராஜெக்ட் கைகூடினாலும் அதிக பலனடையலா மல்லவா? மேலும், காவேரி பாசன விஷயமாய் மைஸூர் கவர்ன்மெண் டார் மதராஸ் கவர்ன்மெண்டை விட முன்னாலே விழித்துக் கொண்டு விட்டார்கள். மைஸூர் பாசன ஸ்கீம் வந்துவிட்டால் பட்டுக்கோட்டைக்கு வரும் காவேரி ஜலம் குறைவடைந்து விடுமாதலால், இப்பொழுது வரும் ஜலத்தை, சீர்திருத்திய வாய்க்கால் மூலமாகவும், வடிகால் மூலமாகவும், ஒழுங்குபடுத்தி செட்டாய் பாய்ச்ச வேண்டிவரும் என்பது நன்றாய் விளங்குகிறது.

இரிகேஷன் கமிஷன் ரிப்போர்ட் டின்படி காவேரி நீராரம்ப பாசன வேலைகளுக்குப் போட்ட மூலதனத் துக்கு நல்ல லாபம் வருகிறது. 1900-_01 ஆம் வருஷம் முடியும் அய்ந்து வருஷங் களில் ஸராஸரி ஒவ்வொரு வருஷத் துக்கும் காவேரியின் பாசன நிலங்களில் வந்த ரிவின்யூ ரூபா 42,31,000. ஆனால் இதில் 32,91,000 ரூபா பழைய பாசனத் தினால் வரும் வரும்படி போக பாக்கி யுள்ளது ஸர்க்காரால் செய்யப்பட்ட பாசன வேலைகளின் பயனாகும். இந்த பாக்கியானது ஜலத்தை ஸரிவரப் பிரித்துக் கொடுப்பதற்கு போட்ட ஸ்வல்ப முதலுக்கு நூற்றுக்கு முப்பத்தேழு விகிதம் வட்டி கட்டுகிறது. கீழ்க்கொள்ளிட பாசனத்தால் வந்த வரும்படி ரூ 4,26,000. இதில் 1,50,000 ரூபா பழைய பாசனத்தால் வந்த ரிவின் யூவாகும். புது ரிவின்யூ போட்ட முதலுக்கு 100-க்கு 25 வீதம் வட்டி கட்டி வருகிறது. இப்படி நூற்றுக்கு 37_ம், 25_ம், வட்டி கட்டும் துறைகளில் பணம் போடுவது மிகவும் இன்பகரமானதே.

 ஆனால் கவர்ன்மெண்டார் இப்பொ ழுது வியாபாரம் செய்யும் கம்பெனி யாயில்லை. அப்படியே கம்பெனியாயி ருந்தாலும், வியாபார முறையில் இப்பொழுது நல்ல வரும்படி வரும் வேலைகளை இன்னும் நல்ல ஸ்திதியில் வைத்திருப்பது இன்னும் அந்த வ்யாபாரத்துக்கு ஒத்ததாகவே யிருக்கும். இந்த ராஜதானியில் உள்ள பாசன ஏற்பாடுகளின் நிர்வாகச் செலவுகளில் காவேரிப் பாசன நிர்வாகச் செலவுதான் மிகவும் குறைவானது என்று தெரிய வருகிறது. கணக்குகள் பின் வருமாறு:

பாசன ஏற்பாடுகள்:- பத்து வருஷத் துக்கு ஸராஸரி பாசன நிலத்தில் ஒரு ஏகர் 
நிர்வகிக்கச் செலவு

கோதாவரி நீராரம்பம்    5.37 அணா

கிருஷ்ணா நீராரம்பம்    6.51 அணா

பெண்ணையாற்றுப் பாய்ச்சல்        5.58 அணா

பெரியாறு        9.84 அணா
ஸ்ரீவைகுண்டம்        5.00 அணா

காவேரி நீராரம்பம்    1.80 அணா

ராஜதானியில் உள்ள மற்ற பாசன ஏற்பாடுகளை உத்தேசித்து காவேரி நீராரம்பத்தை ஸரியாக வைத்துக் கொள்ளப் பணம் ஸ்வல்பமாகச் செலவழிக்கப்படுகிறது. அதோடு கூட ஜலத்தைப் பங்கிடுவதற்கும் மேம் பார்வை யிடுவதற்கும், தக்க ஸிப்பந்தி களும் ஏற்படுத்தப் படவில்லை. பட்டுக்கோட்டையில் நீராரம்பமில்லாத இடங்களில் பாசன ஏரிகள் நல்ல ஸ்திதியிலில்லை என்பது தெரிந்த    விஷயமே. ஏரிகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும். நீராரம்ப பாசனவேலைகள் தக்க மேம்பார்வை யுடனிருக்க வேண்டும். அவைகள் விஷயத்தில் இன்னும் அதிகப் பணம் செலவழிக்க வேண்டும்.
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...