இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில், கோவில் மற்றும் சமயம் சார்ந்த இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
2011, ஜன. 14: ஆம் தேதி சபரிமலை, புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 104 பேர் பலி; 60 பேர் காயம்.
2010, மார்ச் 4: உத்தரபிரதேசம் மாநிலம் பிரதாப்கார்த் எனும் இடத்தில், கிரிபலு மகாராஜா ஆசிரமத்தில் உணவு வழங்கும்போது நெரிசல் ஏற்பட்டது. இதில் 63 பேர் பலி; 15 பேர் காயம்.
2008, செப். 30: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரி லுள்ள சாமுண்டா தேவி கோவில் விழாவின் போது, குண்டு வைக்கப்பட்டுள்ளது என புரளி கிளப்பப்பட்டது. இத னால் ஏற்பட்ட நெரிசலில், 250 பேர் பலி; 60 பேர் காயம்.
2008, ஆக. 3: இமாச்சல பிரதேசம் நைனா தேவி கோவிலில் வெடிகுண்டு புரளி கிளப்பப்பட்டது. இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 150 பேர் பலி; 230 பேர் காயம்.
2008, ஜூலை: ஒடிசா மாநிலம், பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில், 6 பேர் பலி; 12 பேர் காயம்.
2008, மார்ச் 27: மத்தியபிரதேச மாநிலம், கரிலா கிராமத்தில் உள்ள கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 8 பேர் பலி; 10 பேர் காயம்.
2008, ஜனவரி: ஆந்திராவில் உள்ள துர்கா மல்லேஸ் வரா கோவில் விழாவின் போது நெரிசலில் சிக்கி 5 பேர் பலி.
2007, அக்டோபர்: குஜராத் மாநிலம் பவகாத் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலி.
2006, நவம்பர்: பூரி ஜெகன்னாதர் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி.
2005, ஜனவரி: மகாராஷ்டிரா மாநிலம், மந்தர் தேவி கோவில் விழாவின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 340 பேர் பலி.
2003, ஆகஸ்ட்: நாசிக்கில் நடந்த கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி; 125 பேர் காயம்.
1999, ஜன., 14: சபரிமலை பம்பை நதி கேம்ப் அருகில் ஏற்பட்ட நெரிசலில் 50 பேர் பலி.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தனித்தெலங்கானா பற்றி சோனியா முக்கிய முடிவு 2 நாட்களில் அறிவிப்பு வெளியாகும்
- புதுடில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில்
- நீதிபதிகள் பற்றி அவதூறு பேச்சு மார்க்சிஸ்ட் தலைவருக்கு 6 மாதம் சிறை
- பெட்ரோல் டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கருநாடகா பேரவைக்கு விரைவில் தேர்தல்: காங்கிரஸ்
- பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை முதலமைச்சர் சதானந்த கவுடா அறிவிப்பு
- பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறும்படி வற்புறுத்த மாட்டாராம்! மம்தா கட்சி அறிவிப்பு
- பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறும்படி வற்புறுத்த மாட்டோம்: மம்தா கட்சி அறிவிப்பு
- சி.பி.அய். இயக்குநர் மீது ஊழல் புகார் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை
No comments:
Post a Comment