Thursday, October 6, 2011

மூட நம்பிக்கையால் சிறுமி உயிர் பறிபோனது


மூட நம்பிக்கையால் சிறுமி உயிர் பறிபோனது சாலையில் உடைத்த திருஷ்டிப் பூசணிக்காய் மீது ஏறி விழுந்த பைக்- சிறுமி சாவு

சேலம், செப். 6- ஆயுத பூஜையையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காய் மீது ஏறிய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 12 வயது சிறுமி டிராக்டரில் சிக்கி உயிரிழந்தார்.

நேற்று ஆயுத பூஜை என்ற மூட நம்பிக்கையால் தமிழ்நாடு முழுவதும் பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளின் முடிவில் சாலையில், தெரு நடுவில் திருஷ்டிப் பூசணிக்காயை போட்டு உடைத்தனர்.

நடுத் தெருவல், சாலையில் பூசணிக்காய் உடைக்கக் கூடாது, அதனால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படும், விபத்து ஏற்படும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் அதையும் மீறி பூசணிக்காய் உடைப்பு களை கட்டியிருந்தது.

இந்த பூசணிக்காய்க்கு இன்று ஒரு சிறுமி  உயிரிழந்துள்ளார். சேலம் களரப்பேட்டை சாலையில் நேற்று காலை தனது தந்தையுடன் 12 வயது சிறுமி மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியுள்ளது. இதனால் வழுக்கிக் கொண்டு போன மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் தந்தையும், மகளும் கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்த டிராக்டர் சிறுமி மீதி ஏறி விட்டது. சக்ககரத்துக்குள் சிக்கி அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பக்தி வந்தால் புத்தி போச்சு என்ற தந்தை பெரியாரின் பொன்மொழியைத்தான் இங்கே நினைவு கூரவேண்டும்.

1 comment:

SURYAJEEVA said...

நீங்க வாய் கிழிய கத்தினாலும் விதி என்ற ஒரு வார்த்தைய வச்சுகிட்டு தப்பிச்சுடுவாங்க **************

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...