Monday, October 10, 2011

இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை:


இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை:


ராஜபக்சேயின் ஆலோசகர் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை
கொழும்பு, அக். 9- இலங்கையில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்த லில், அதிபர் ராஜபக் சேயின் ஆலோசகர் உள் பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் எம்.பி. ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இலங்கை முழுவதும் இருந்து 420 உறுப்பினர் களை 4 ஆண்டுகளுக்கு தேர்ந்து எடுக்கும் உள் ளாட்சி தேர்தல், கடந்த மார்ச் மாதம் தொடங் கியது. இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சேயின் அய்க்கிய மக்கள் சுந்திரா கட்சி, கூட்டணி அமைத்து போட்டியிடு கிறது.
நேற்று வடக்கு கொழும்பு அருகே உள்ள கோதிகா வத்தா என்ற இடத்தில் உள் ளாட்சி தேர்தலின் வாக் குப்பதிவு நடைபெற்றது.
இதை யொட்டி அதிபர் ராஜபக்சேயின் ஆலோச கரும், அவரது கட்சியின் முன்னாள் வழக்குரைஞ ருமான பரதா லக்ஷ்மன் பிரேம சந்திரா அங்கு சென்றார். அப்போது அதிபர் கட்சி தொண் டர்களுக்கும், எதிர்க் கட்சி தொண்டர்களுக் கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து எதிர் கட்சி தொண்டர் கள் துப்பாக்கியால் சுட் டனர். இதில் குண்டு பாய்ந்து ராஜபக்சேயின் ஆலோசகர் இறந்தார். அவரது மெய்காப்பா ளர், மற்றும் 2 தொண் டர்களும் உயிர் இழந் தனர்.
மேலும் நாடாளு மன்ற உறுப்பினர் டுமிந்தா சில்வாவின் தலையில் குண்டு பாய்ந்தது. இத னால் அவர் ஆபத்தான நிலையில், கொழும்பு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார். இவரைத்தவிர மேலும் 9 பேர் காயம் அடைந் தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதி யில் ஊரடங்கு உத் தரவை காவல்துறை யினர் அமல்படுத்தி னார்கள். அங்கு பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப் பட்டு இருக்கிறது. நேற்று நடந்த ஊராட்சி தேர்தலில், இன்று ஓட் டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது.
கடந்த ஆண்டு இலங் கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிபர் ராஜபக்சேயின் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. இந்த தேர்தலுக்கு பின் ஒரு ஆண்டு கழித்து உள் ளாட்சி தேர்தல் நடந்து இருக்கிறது.
இந்த ஒரு ஆண்டு காலத்தில் அதிபர் ராஜ பக்சேயின் செல்வாக்கு உயர்ந்ததா? சரிந்ததா? என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...