Friday, October 7, 2011

எ(இ)ப்படி இருக்கு


அரசியல்?
இராமநாதபரம் - கமுதி ஒன்றியத்தில் போட்டி யிட்ட இரு திமுக கவுன்சிலர்களின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இல்லையாம்!

இது எப்படி நடந்தது? அந்த இருவரும் வேட்பு மனுவை வாபஸ் வாங்கி விட்டதாக அ.இ.அ.தி.மு.க.வினர் போலி கையொப்பமிட்டு விண்ணப்பித்துள்ளனர் என்று மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுப. தங்கவேலன் மாவட்ட ஆட்சியாளர் அருண்ராயிடம் புகார் கொடுத் துள்ளனராம்.

சபாஷ்!  அரசியல் தேர்தல் என்றால் இப்படி யல்லவா இருக்க வேண்டும்.

நான் கையொப்பமே போடவில்லை என்று சொல் லுவதும், ஒருவர் கையொப்பத்தை இன்னொருவர் போட்டு மோசடி செய்வதும்தான் அண்ணா கற்றுக் கொடுத்த அரசியலா, கண்ணியமா?

குளோனிங் முறையில் வெற்றி பெற்றவன் நானே ஜெயித்தேன் என்று எவராவது வராமல் இருந்தால் சரி?

*****************


மார்க்ஸிஸ்ட் - தே.மு.தி.க.வின் நோக்கம் ஒன்றாக இருப்பதால் இணைந்துள்ளோம்.

- மா. கம்யூ. மாநில செயலாளர் ஜி. ராம கிருஷ்ணன்

மற்ற கட்சிகளோடு கூட்டணி சேரும் போதெல் லாம் இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

கேட்டால் கொள்கை ஒன்றாக இருக்கிறது என்றா சொன்னேன் என்றும் வியாக்யானம் செய்யலாம் அல்லவா!

தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி, அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி இந்தத் தயார் பதிலும், வியாக்யானமும் தயாராகவே இருக்கிறது.

கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை எந்தத் தேர்தல் முடிவையும் மாநில அளவில் எடுப்ப தில்லையே - தேசியக் கட்சி ஆயிற்றே! டில்லிதானே முடிவுகளை முடிவு செய்யும்!

நாடாளுமன்றத்திற்கு ஒரு கூட்டணி, சட்ட மன்றத்திற்கு இன்னொரு கூட்டணி என்பதெல்லாம் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியைப் பொறுத்த வரை அதிசயமான ஒன்றல்லவே!

தி.மு.க.வோடு கூட்டு சேர, அந்த யுக்தியைக் கையாண்டு இருக்கலாமே,

இன்றைக்கு திமுகமீது சிபிஎம் சொல்லும் இதே குற்றச் சாற்றுகளை - இன்னும் சொல்லப் போனால் இவற்றைவிட கூடுதலான - கடுமையான அளவில் குற்றப் பத்திரிகை படித்ததுண்டே! அதிமுகவோடு கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் சிபிஎம் கூட்டு வைத்திருக்காததற்குக் காரணம் கொள்கை மாறுபாடா? சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும் என்ற நிலைப்பாடு தானே?

தேர்தல் - அரசியல் என்று வந்துவிட்டால் கம்யூனிஸ்டுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...