Monday, October 10, 2011

தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:


தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:


அய்க்கிய அமெரிக்க நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

சரியாகச் சொல்லவேண்டுமா னால் அமெரிக்க அய்க்கிய நாட்டில் 46 மாநிலங்கள் உள்ளன.

ஆனால் வர்ஜீனியா, கென்டகி, பென்சில்வேனியா மற்றும் மாசாசூ செட்ஸ் ஆகியவை அதிகாரபூர்வமாக காமன்வெல்த் நாடுகளாகும். ஆனால் இதன் காரணமாக, அவற்றிற்கு எந்த விதமான சிறப்பான அரசமைப்புச் சட்ட அதிகாரங்களும் அளிக்கப் பட்டிருக்க வில்லை.

விடுதலைக்காக மேற் கொள்ளப்பட்ட போர் முடிவுற்ற நிலையில், தங்களைப் பற்றி விவரித்துக் கூற அவை இந்தச் சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. இனி, மன்னருக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள பேரரசரின் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த காலனி நாடுகள் தாங்கள் அல்ல என்றும், பொதுமக்களின்  ஒப்புதலுடன் ஆட்சி நடத்தப்படும் நாடுகளே என்றும் அவை தெளிவாக அறிவித்துவிட்டன.

கன்னி (வர்ஜின்)அரசி எலிசபெத் I- இன் பெயர் சூட்டப்பட்ட வர்ஜினியா மாநிலம் முதன் முதலாக அமெரிக்க அய்க்கிய நாடுகளில் சேர்ந்த 13 மாநிலங்களில் ஒன்றாகும். (அமெரிக்க தேசியக் கொடியில் இதனால்தான் 13 வின்மீன்கள் இருக்கும்). அதே போல 1776 இல் தன்னை ஒரு காமன்வெல்த் நாடு என்று அறிவித்துக் கொண்ட முதல் மாநிலமும் இதுதான்.

வர்ஜீனியாவைத் தொடர்ந்து பென்சில்வேனியா, மற்றும் மாசாசூசெட்ஸ் மாநிலங்களும், வர்ஜீனியா மாநிலத்தின்  ஒரு பகுதியாக முன்பு இருந்த கென்டகி மாநிலமும் 1792 இல் தங்களை காமன்வெல்த் நாடுகள் என்று அறிவித்துக் கொண்டன. கடலைக்கடந்தும் இரண்டு அமெரிக்க காமன்வெல்த் நாடுகள் உள்ளன.

1952 ஜூலை மாதத்தில், கரீபியன் தீவான போர்டோ ரிகோ தனது சொந்த அரசமைப்புச் சட்டத்தை வரைந்து கொண்டு, தன்னை அமெரிக்க அய்க்கிய நாடுகளின் காமன்வெல்த் நாடு என்று அறிவித்துக் கொண்டது. 1975 ஆம் ஆண்டில் பசிபிக் பெருங்கடலில் உள்ள வட மரியானா தீவுகளும் இவ்வாறே செய்தன. இவை இரண்டும் அமெரிக்க அய்க்கிய நாடுகளின் மாநிலங்கள் அல்ல.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்
‘The Book  of General Ignorance’  பொதுவான அறியாமைகள்
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...