Saturday, October 1, 2011

இந்தியாவின் பூர்விக குடிமக்கள் யார்?


பொறியாளர் பி. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.,

இந்திய நாகரிகம் உலகத்திலேயே மிகவும் தொன்மையானது. இதை உலகம் அறிந்த அறிஞர் மார்க்ட் வொய்ன் கீழ்வருமாறு சொல்லியிருக் கிறார். இந்தியா வரலாற்றுக்குத் தாய் போன்றது; பாரம்பரியத்திற்கு பாட்டி போன்றது; புராணங்களுக்கு முப்பாட்டி போன்றது

இத்தகைய நாட்டிற்கு சொந்தக் காரர்கள் யார்? ஆரியர்கள்தான் இந்தியாவில் சிறந்த நாகரிகத்தினை ஏற்படுத்தினார்கள் என்று பலர் கருதும்படி ஒரு மாயத்தோற்றத்தை திட்டமிட்டே ஆரியர்கள் பரப்பி வந்தனர். இந்த எண்ணங்களை தகர்த்து அழிக்கும் வகையில் பல வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளவற்றை தற்போது உலகம் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவைகளில் சில கீழே தரப்பட்டுள்ளன.

ஆரியர்கள் வருகைக்கு முந்திய நாகரிகம்

1922-_இல் ஜான் மார்ஷல் என்ற அகழ்வாராய்ச்சியாளர், ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியர்கள் (நாவலந்தீவினர்) சிறந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தனர் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினார். அவர் சிந்து வெளியில்  கண்டெடுத்த நாகரிகம் பல வகையில் வேதகால நாகரிகத்தை விட சிறந்த நாகரிகம் என்று வெளிப் படுத்தினார்.

2. முதல் மனிதன் தோன்றிய இட மாக சொல்லப்படுகின்ற எத்தியோப் பியாவில் அபிசினியாவில் இருந்து இந்தியாவரை, ஆரியர்கள் வருகைக்கு முன் ஒரே நாகரிகமும் ஒரே இனமுமாக வாழ்ந்தார்கள் என்ற செய்தியை ஒரு ஆராய்ச்சியாளர் தருகிறார் அவை:

“Recent Linguistic Discorvery tends to show the Cashhite or Ethiopians (Abissinian) race did, in the earliest times, extent itself from the Indus, along the sea coast, along the sea shores of the southern ocean. The whole Peninsula to India, peopled by a race of this character, before the afflex of Arians, it extended from the Indus along the sea coast through the modern Baluchistan and Kerman”

3. எத்தியோப்பியா முதல் பலுசிஸ்தான் வழியாக சிந்து சமவெளி வரை ஆரியர் வருகைக்கு முன் ஒரே இனந்தான் வாழ்ந்தது என்பதினை உறுதிப்படுத்தும் வகையில் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த பிராகுயி என்ற மொழி இன்னும் பலுசிஸ் தானத்தில் பேச்சு வழக்கில் உள்ளது என்ற செய்தி சான்றாக அமைகின்றது.

4. Adam Ilart Davis என்பவர் தனது History என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது கீழே தரப்படுகின்றது. 45000 ஆண்டு களுக்கு முன் ஆஸ்திரேலியர்கள் மணல் திட்டுகள் ((Adambirdge போன்ற Land Bridge   மூலம் நடந்து இந்தியா துணைக் கண்டத்தினைச் சுற்றியுள்ள தீவுகளுக்கு சென்றுவந்தார்கள்

இவ்வாறாக ஆரியர்கள் வருகைக்கு முன், இந்தியர்கள்/திராவிடர்கள் எத்தியோப்பியா முதல் ஆஸ்திரேலியா வரை பரவியிருந்தார்கள்; சிறந்த நாகரிகம் கொண்டிருந்தார்கள் என்பது அறியலாம்.

ஜான்மார்ஷல் (கி.பி.1922) முதல் ஜான் மெக்கன்சி (கி.பி. 2005) வரை)

மிகவும் தொன்மையான இந்தியா வின் பூர்வீக குடிமக்கள் திராவிடர்கள் என்று கூறுகிறார் பேராசிரியர் ஜான் மெக்கன்சி, இவர் உலகில் உள்ள பல்வேறு இனங்களின் வரலாறு, பண்பாடு, மற்றும் இதர சிறப்புகளை தொகுத்து அகர முதலியாக “Peoples, Nations and Cultures”  என்று பெயரிட்டு ஒரு சிறந்த நூலாக வெளியிட்டுள்ளார் அதில் தெரிவிக்கப்படும் செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன.

திராவிடர்கள்: இவர்கள் தென்னிந் தியர்கள், இது தவிர திராவிடர்கள் சுமத்ரா, மடாகாஸ்கர், மலேசியா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். இன்றைய இரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகள் அடங்கிய முற்கால பலூ சிஸ்தானிலும் திராவிட மொழிகள் பேசுபவர்கள் வசிக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களின் நாகரிகம் என்று கருதலாம்.

திராவிடர் களின் மதக் கொள்கைகளின்படி நாகம், காளி போன்ற தெய்வங்களை ஆதியில் வணங்கினார்கள். திராவிட பேசிய மொழிகள் எண்ணிக்கை 22 இதில் Chingu, Ghatts, Gond, Orons, Toda முதலியனஅடங்கும் தற்போதுள்ள திராவிடர்கள். கலப்பு வகையினர் கலப்பு இன திராவிடர்கள். ஆரியர்கள், கிரேக்கர் குஷானர், மங்கோல், ஆங்கி லேயர் போன்ற இனத்தவர்களுடன் உறவால் தோன்றியவர்கள். இந்தியா தேசியத்தில் கலந்து இந்திய நாடு உருவான பின்பும், தங்களின் தனித் தன்மையை இழக்க திராவிடர்களான தமிழர்கள் விரும்பவில்லை. உதாரணம் இந்தி எதிர்ப்புப் போர் விடுதலைக் குப்பின் தமிழ் இசை, தமிழ் இலக்கியம் தமிழ் பண்பாடு ஆகியவற்றிற்கு முன் னுரிமை தரப்படுகின்றது. சில திராவிட மொழிகள் பேசுபவர்கள் இன்றுகூட தங்களை இந்தியன் என்று கருதாமல் திராவிடர்கள் என்றே கருதுகிறார்கள்.

இந்தியாவின் பண்டைய வரலாறு

இந்தியா துணைக் கண்டத்தின் வசித்த முதல் குடிமக்கள் பூர்விக குடிமக்கள் திராவிடர்கள் என்று கூறலாம். இவர்கள் சிந்து சமவெளியில் கிமு 7000 முதல் வேளாண்மையை முக் கிய தொழிலாக கொண்டிருந்தார்கள். இவர்கள் ஹரப்பா என்னும் இடத்தில் உலகிலேயே, முதன் முதலாக, சிறந்த நகர நாகரிகத்தை உருவாக்கினார்கள்.

கிட்டத்தட்ட கிமு 1500 ஏற்பட ஆரி யரின் படையெடுப்பால் இந்த தலை சிறந்த நகர நாகரிகம் வீழ்ச்சி அடைந் தது. ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பேசிய மொழி இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இவர்களின் மதக் கொள்கைகளே பிற்காலத்தில் இந்து மதமாக உருவெடுத்தது. கி.பி. 1000_இல் வந்த முகம்மதியர்கள் தங்கள் நாகரிகத்தை பரப்பினார். 

கி.பி. 1600-_இல் வந்த ஆங்கிலேயர் இந்தியா முழுமையும் 1947 வரை ஆண்டார்கள். அவர்கள் இந்தியத் தொழிலாளர்களை உலகெங்கும் எடுத்துச் சென்று குடி யமர்த்தினார்கள். இந்தோ ஆரியர்கள் பெரும்பாலும் வடஇந்தியாவில் வசித் தார்கள். அவர்கள் பேசிய மொழிகள் இந்தோ இரானிய மொழிக் குடும் பத்தைச் சார்ந்த இந்தி, உருது, இராஜஸ் தானி, வங்காளமொழி ஆகும்.

சிந்து சமவெளி நாகரிகம்

ஹரப்பாவைச் சேர்ந்த மக்கள் சித்திர எழுத்துகளை அறிந்து இருந்தார்கள், கல், பித்தளை, தாமிரம் முதலிய உலோ கங்களால் கருவிகளை உபயோகித் தார்கள். இந்த நாகரிகம் திராவிடர்கள் நாகரிகத்துடன் தொடர்பு உடையது.

முடிவுரை: ஆங்கிலேயர்களால் பாரபட்சமின்றி எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் திராவிடர்களின் சிறப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...