சட்டம் - ஒழுங்கு
தமிழ்நாட்டில் அன்றாடம் வெளிவரும் செய்திகள் பெரும் கவலை அளிப்பவையாக உள்ளன. ஒரே நாளில் 10 இடங்களில் சங்கிலிப் பறிப்பு - நகைக் கடைகளில் கொள்ளை, தனியாக இருந்த மூதாட்டி படுகொலை - என்று கொலை, கொள்ளை, பறிப்பு என்கிற செய்திகள் வராத நாளே இல்லை எனலாம்.
நேற்று ஒரு நாள் மட்டும் வந்துள்ள செய்திகள்: 1) வாடிப்பட்டி அருகே அடகுக் கடையை உடைத்து 118 பவுன் நகை கொள்ளை.
2) சென்னையை உலுக்கும் செயின் பறிப்புக் கும்பல் அடுத்தடுத்து பத்து இடங்களில் கை வரிசை.
3) கொடுங்கையூரில் முத்தமிழ் நகரில் ஒரு நிகழ்வு. குடும்பத்தோடு மாலை நான்கு மணிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்று மாலை ஆறரை மணியளவில் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது; உள்ளே சென்று பார்த்தபோது 30 சவரன் நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது.
4) திருவான்மியூர் ஜெயந்தி திரையரங்கம் பின்பக்கம் உள்ள கைப்பேசி கடையில் புகுந்த கொள்ளையர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைப்பேசிகளைத் திருடிச் சென்றனர்.
5) பல்லாவரத்தில் புது பாளையத்தம்மன் கோயில் அம்மன் சிலை கழுத்தில் இருந்த 10 சவரன் நகை மாயம்.
6) சென்னை வண்ணாரப்பேட்டையில் சொத்துத் தகராறில் 78 வயது முதியவர் கழுத்தறுத்துப் படுகொலை.
7) பூவிருந்தவல்லியில் நகை திருடிய ஜோதிடர் கைது.
8) படப்பையில் மொட்டை மாடியில் பொறியாளர் கொலை.
இவையெல்லாம் ஒரே நாளில் சென்னை மற்றும் பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள குற்றங்கள்; சாமியிலிருந்து, ஆசாமிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஏடுகள் ஒரு செய்தியை உலவ விட்டன. சங்கிலித் திருடர்கள், பிக்பாக்கெட்காரர்கள் எல்லாம் வெளி மாநிலங்களுக்கு ஓடி விட்டனர் சென்று செய்தி பரப்பப்பட்டது.
ஆனால், உண்மை நடப்புகளோ வேறு மாதிரியாக இருக்கின்றன. அன்றாடம் கொலை, கொள்ளை, திருட்டு, பறிப்பு என்பது சர்வ சாதாரணமாகவே ஆகிவிட்டன.
இவற்றை ஓர் அரசியல் பார்வையில் பார்க்காமல் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இல்லையே என்ற கவலையோடு கவனிக்க வேண்டிய பிரச்சினை.
ஒவ்வொரு ஆட்சியும் மாறும்போது காவல்துறை அதிகாரிகள் மாறுதலுக்கு ஆளாவது இயல்பான ஒன்றுதான். அஇஅதிமுக ஆட்சியிலும் அது நடை பெற்று வருகிறது இன்று வரை.
இந்த மாற்றங்களால் ஏற்பட்ட பயன் என்ன என்பதுதான் முக்கியம். காவல்துறையில் பணி யாளர்கள், அதிகாரிகள் எண்ணிக்கை குறைவு என்றால் அதனை உடனே சரி செய்ய வேண்டும்.
மக்கள் மத்தியிலும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். பெண்கள் நகைகளை பூட்டிக் கொண்டு செல்வதைக் கூட மட்டுப்படுத்திக் கொண்டால் நல்லது.
சங்கிலிப் பறிப்பு என்பது பெண்களிடத்தில்தான் நடக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வழிமுறைகளை காவல்துறை அறிமுகப்படுத்தினால் கூட நல்லதுதான்.
இரண்டொரு இடங்களில் சங்கிலிப் பறிப்பாளர் களைப் பெண்கள் எதிர் கொண்டால் எதிர் தாக்குதல் தொடுத்தால் அந்தச் செய்தி பரவினாலேகூட கொஞ்சம் கொட்டம் ஒடுங்கும்.
காவல்துறையினர் ரோந்து வருவது மிகவும் முக்கியம். குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும்.
காவல்துறையும், பொது மக்களும் ஒருவருக் கொருவர் நண்பர்களாக இருந்தால் இந்தக் குற்றங்களை நாளடைவில் ஒழித்துக் கட்டி விடலாம்.
காவல்துறையின் எச்சரிக்கைகளும், வழிகாட்டுதல் களும் தொலைக்காட்சிகள்மூலம் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
முதல் அமைச்சர் பொறுப்பில்தான் காவல்துறை இருக்கிறது. நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன சொல்லும்? இப்பொழுது அதிமுக ஆட்சியில் குற்றங்கள் பெருகி வருவதால், எதிர்க்கட்சி நிலையில் தன்னை வைத்து சிந்தித்து அவசர கதியில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

No comments:
Post a Comment