இந்து என்றால் திருடன் என்று கலைஞர் சொல்லி விட்டார் என்று சிலர் தாண்டிக் குதித் தனர். அது கலைஞர் தன் கற்பனையில் கூறிய சரக்கு அல்ல; கமலபதி திரிபாதி என்ற உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சர் எழுதிய நூலிலிருந்தே ஆதாரம் காட்டினார்.
பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள ஞான சூரியன் எனும் நூலான பெட்டகத்தில் சுவாமி சிவானந்த சரஸ்வதி கூறி யுள்ளார். பாரசீக மொழி யில் இந்து என்றால் திருடன் என்று குறிப் பிடப்பட்டுள்ளதை எடுத் துக்காட்டியுள்ளார்.
அவ்வளவு தூரம் போவானேன்? திரு மங்கை ஆழ்வார் வைணவ ஆழ்வார்களுள் ஒருவன்; அவன் என்ன செய்தான் தெரியுமா?
நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந் தது. அதனை ஆலிநாடர் (திருமங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச் சமயத்தில் கடவுள் தன் மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் கூறுநர்
ஒருவரும் இலர் - இப்படிக் கூறுவது திராவிடர் கழக வெளி யீடல்ல - திராவிடர் கழ கத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் கூற்றும் அல்ல.
சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவை (பக்கம் 7 - வரிகள் 26-30) பறைசாற்றுகிறது. குரு பரம்பரப்பிரபாவம் என்ற வைணவ நூலும் இதனை வழிமொழிகிறது.
நாகப்பட்டினத்தில் இருந்த பசும்பொன்னா லான புத்தர் சிலையைத் திருமங்கை ஆழ்வார் என்ற ஆழ்வார் திருடி னான் என்று கூறிவிட்டு, அவன் திருடிய நேரத்தில் கடவுள் தன்மை உடைய வனாக இருந்தான் என்பதால் அவனைக் குற்றம் கூற முடியாது என்று அடித்துக் கூறப் படுகிறது.
ஒன்று மட்டும் திட்ட மிட்ட முறையில் தெளிவா கிறது. கடவுள் தன்மை உடையவன் ஒருவன் திருட்டு வேலை செய் திருக்கிறான் என்பதை தஞ்சைவாணன் கோவையே கூறித் திருட்டை நியாயப்படுத் தியுள்ளது.
திருட்டு என்பது திருட்டுதான். அவன் கடவுள் தன்மை உடையவ னாக இருந்தால் என்ன? இல்லாமல் இருந்தால் என்ன?
கடவுள் தன்மை உடையவன் திருடினான் என்றால், திருட்டுக்குத் தெய்வீக அங்கீகாரம் கிடைத்து விட்டதாகப் பொருளாகவில்லையா?
இந்து என்றால் திருடன் என்று சொன் னால் சீறிஎழும் சிரோன் மணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகி றார்கள்?
- மயிலாடன்
No comments:
Post a Comment