Monday, September 26, 2011

திராவிடர் கழகக் கூட்டத்தில் கலகம் விளைவிப்பதா? கலைஞர் கண்டனம்


திராவிடர் கழகக் கூட்டத்தில் கலகம் விளைவிப்பதா? கலைஞர் கண்டனம்


சென்னை, செப்.26- தந்தை பெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை விருகம்பாக்கத்தில் திராவிடர் கழகம் மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் 24.9.2011 அன்று நடைபெற்றபோது - தமிழர் தலைவர் வீரமணி பேசும்போதும் - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேசும்போதும் - ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் இடைமறித்து எதிர்க்குரல் எழுப்பியதோடு - கற்களைக் கொண்டு தாக்க முயன்றிருப்பதும், அதற்கு இந்த அரசின் காவல்துறை ஒத்துழைப்பு தந்திருப்பதும், இனமான உணர்வை எழுப்பும் கருத்துக்களை எதிர்க்க சக்தியற்றவர்கள் நடத்திய வன்முறைச் செயல்கள்; கலவரமாக ஆகியிருப் பதும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.


இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு நல்க வேண்டுமேயல்லாமல் கலகம் விளைவிப்போருக்கு துணை போயிருக்கக் கூடாது என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கூறுகிறேன் என்று திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...