ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சரஸ்வதி கோரா நூற்றாண்டு விழா:
நாத்திகர்கள் அனைவரும் மனித நேயர்களே! மனிதநேயர்கள் அனைவரும் நாத்திகர்கள் அல்லர்!
தமிழர் தலைவர் விழா தொடக்கவுரை
தமிழர் தலைவர் விழா தொடக்கவுரை
நமது சிறப்புச் செய்தியாளர்
விஜயவாடா, செப். 29-நாத்திகர்கள் அனைவரும் மனிதநேயர்களே, மனித நேயர்கள் அனைவரும் நாத்திகர்கள் அல்லர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
ஆந்திர மாநிலம்-விஜயவாடாவில் நாத்திக வீராங்கனையும், நாத்திகர் கோராவின் இணையருமான சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் செப்.28 மற்றும் 29 ஆகிய இருநாள்களில் நடைபெற்று வரு கின்றன.
முதல்நாளில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்து தமிழர் தலைவர் கி.வீரமணி பேரு ரையாற்றினார். சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் விஜயவாடாவில் சித்தார்த்தா கல்லூரி வளாக அரங்கத்தில் நாத்திக அமைப் பினர், பகுத்தறிவாளர், சமூக ஆர்வ லர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ளும் விதமாக மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் அவைத் தலைவர் ஜே.மைத்ரி வரவேற் றுப் பேசினார். மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் விஜயம் நூற் றாண்டு விழா முக்கியத்துவத்தைப் பற்றி விவரித்துக் கூறினார்.
தமிழர் தலைவர் ஆற்றிய நூற்றாண்டு விழா தொடக்க உரை
கோராவின் வாழ்விணையராக வாழ்ந்திட்ட சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழா மாநாட்டினை தொடங்கி வைத்து, நாத்திகர் இயக் கத்திற்கு சரஸ்வதி கோராவின் பங் களிப்பு, அவரது பன்முகப் போராட் டப் பண்புநலன்கள் குறித்து கருத்து மிக்க உரையினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார். நாத்திகப் போராளி சரஸ்வதி கோராவின் பொதுவாழ்வு பன்முகத் தன்மை கொண்டது.
சமூக சீர்திருத்த வாதி, விடுதலை வீராங்கனை, ஜாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்பாளர்; மதசார்பற்ற சமூக சேவையாளர் என பல்வேறு தளங்களில் தனது பங்களிப் பினை சமுதாயத்திற்கு வழங்கி வாழ்ந் துள்ளார். 94 ஆண்டுகள் வாழ்ந்து இறுதிவரை கொள்கைப் பற்று, செயல்பாடுடன் போராடிக் கொண்டி ருந்தார்.
அவரது குடும்பம் என்பது அவரது துணைவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே உள்ள இரத்த சம்பந்தக் குடும்பம் மட்டு மல்ல; அதற்கு அப்பால்அவர்கள் பல்வேறு நாத்திகர், பகுத்தறிவாளர் இயக்க தொடர்புகளை ஏற்படுத் திக்கொண்டு, அவர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் அவரது குடும்பம், பலரை உள்ளடக்கிய கொள்கை சார்ந்த குடும்பம் (ideologically extended family) ஆகும்.
தந்தை பெரியாருக்கு இணையராக, இயக்க தலைமை வழித்தோன்றலாக அன்னை மணியம்மை யார் வாழ்ந்தது போல கோராவிற்கு இணையராக அமைந்தவர் சரஸ்வதி கோரா ஆவார். கோராவின் வாழ்விணையராக விளங்கிய சரஸ்வதி கோரா, கோரா நிறுவிய நாத்திக மய்யத்தின் இணை நிறுவனராகவும் விளங்கியவர். கோராவின் மறைவிற்குப் பின் அவரது லட்சியங்களுக்காகப் பாடுபட்டவர்.
பெண் விடுதலை வீராங்கனை-சரஸ்வதி கோரா
சரஸ்வதி கோராவின் பங்களிப்பினை எடுத்துக் கூறும் பொழுது நாட்டின் அரசியல் விடுதலைக் காகப் போராடியவர் என்று குறிப்பிட்டனர். அவரை விடுதலை வீராங்கனை எனக் குறிப்பிடும் பொழுது அந்த விடுதலை, வெறும் அரசியல் விடுதலையை மட்டும் சார்ந்தது அல்ல. ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் பெண் உரிமைக்காக, பெண்ணடிமை யினை வலியுறுத்தும் சமூக மூடநம்பிக்கை பழக்க வழக்கங்களை எதிர்த்துப் போராடி, ஆக்க ரீதியாக பெண் சமத்து வத்திற்குப் பாடுபட்டவர் அவர்.
தேவதாசி முறை ஒழிப்பு, ஜாதி மறுப்பு திருமணம் ஆகியவற்றைப் பற்றிப் பிரச்சாரம் செய்து, நடைமுறைப்படுத்தப் பாடுபட்டவர். அதற்காக பல்வேறு எதிர்ப்புகளை நேர்கொண்டு போராடினார். அப்படிச் சமூக சீர்திருத்த ஆற்றல் பெற்ற சரஸ்வதி கோராவை வெறும் அரசியல் விடுதலை வீராங்கனை எனக் குறிப்பிடுவது அவரது சமுதாயப் பங்களிப்பினை குறைத்துக் கூறும் செயலாகும்.
விடுதலை வீராங் கனை சரஸ்வதி கோராவின் விடுதலை உணர்வு, செயல்பாடு பல்வேறு சமூகத் தளங்களில் ஆக்க ரீதியான பாதிப்பினை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை நிலையாகும். அதனை தற்போதைய, எதிர்கால சமுதாயத்தினர்க்கு எடுத்துக் கூறிப் பிரச்சாரம்செய்வதுதான் நமது நன்றி கலந்த கடமையாகும்.
பொது வாழ்க்கைக்கு வரும் மகளிர் பலர், சமூகக் கடமையாற்றிட முனைப் படும் பொழுது, குடும்பக் கடமைகளை முழுமையாகச் செய்திட முடியாத சூழல்களே பொது எதார்த்த நிலையாகும்.
கோராவுடன் குடும்ப வாழ்க்கை-பொதுவாழ்க்கையினை தொடங்கிய சரஸ்வதி கோரா, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் பலரையும் நாத்திகக் கொள்கை வழி வாழ வகைப்படுத்திய தோடு, பொது வாழ்க்கையிலும் முத்திரை பதித்தவர்.
அவரது பிள்ளைகள் ஒன்பது பேரும் பேரப்பிள்ளைகள் அவர்தம் இணையர்கள் என அனைவரையும் நாத்திகக் கொள்கை வழிப்படுத்தியதன் மூலம் இன்று அந்தக் குடும்பம் ஆலமரம் போல தழைத்துப் பெருகி உள்ள நிலை பெருமை கொள்ளத்தக்கதாகும்.
வேர்களின் பெருமை, பண்பு விளக்கும் விதமாக விழுதுகள் வாழ்ந்து வருவது, செயல்பட்டு வருவது கொள்கை சார்ந்த அமைப்பினர் பலருக்கும் எடுத்துக்காட் டாகும்.
நாத்திகப் போராளி-சரஸ்வதி கோரா
சரஸ்வதி கோரா நாத்திகர் என்பதை விட மனிதநேயர் எனக் குறிப்பிடப் படுவது நிலைத்த கொள்கைப் பயணத் திற்கு ஊறுவிளைத்து விடும்.நாத்திக ரெல்லாம் மனிதநேயர்களே, ஆனால் மனித நேயர்களெல்லாம் நாத்திகரல்லர். (All atheists are humanists; all humanists are not atheist) மனிதநேயர் என்பதைவிட நாத்திகர் எனக் குறிப்பிடுவதே சாலச் சிறந்தது; மேன்மை வாய்ந்தது.
மனித நேயர்களின் கடவுள் நம்பிக்கைகள் மனிதாபிமானமற்ற செயல்களுக்கே ஊக்கம் ஊட்டும். உலகில் கடந்த கால வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் கடவுள் நம்பிக்கையாளர் களால்தான் அழிவு வேலைகள் நடை பெற்றுள்ளன.
நாத்திகர்களால் ஆக்க வேலைகள் பலப்பட்டுள்ளன. மசூதிகளா கட்டும், சர்ச்சுகளாகட்டும், கோயில்களா கட்டும், கடவுள் நம்பிக்கையாளர்களால் தான் இடிக்கப்பட்ட வரலாறு உண்டே தவிர, நாத்திகர் அப்படிப்பட்ட செயல் களை செய்ததாக ஊக்கு வித்ததாக யாருமே சொல்ல முடியாது.
எனவே சரஸ்வதி கோராவை, நாத்திகர் என்றுதான் பெரும்பான்மை அடையாள மாக எடுத்துக் கூறப்பட வேண்டும். கடவுள் நம்பிக்கையின் பெயரால் மத நம்பிக்கைகளின் பெயரால், நமது சமூக நலன் நடுச்சந்தியில் (at cross roads) நிற்கிறது. நாங்கள் மனித சகோதரத்துவத் தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர்கள். கடவுள் நம்பிக்கையினால் முடைநாற்றம் வீசும் சமூகத்தை மாற்றி அமைக்கும் அரும்பணியில் ஈடுபடுவதே சரஸ்வதி கோராவிற்கு நாம் செலுத்தும் வீர வணக்கமாகும்.
சமூக மாற்றக் கருவி கல்வியே சமூக மாற்றத்திற்கான அடிப்படைக் கருவி கல்வியாகும். முறையான கல்வியை அளிப்பதன் மூலமே சமூக மாற்றத்தினைக் கொண்டு வர முடியும். முறைப்படி கல்வியினைப் பெறுவதற்கு முன்பு, சின்னஞ்சிறு வயதில் கல்வியைப் புகட் டுவது யார்? குழந்தையின் முதல் ஆசிரியை தாய்தான்.
குடும்பக் கல்விப் பணியிலும் சமூகத்தினை மேம்படுத்தும் மக்கள் கல்விப் பணியிலும் சிறந்து விளங்கிய சரஸ்வதி கோராவின் வாழ்க்கைப் பயணங்கள் நமக்குக் கொள்கைப் பாடங்களாகும்.
அவர்தம் பாடங்களை சரியாக மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவரது லட்சியங்கள் நிறைவேற, கனவுகள் நடைமுறைப்பட நாமெல்லாம் தீவிரமாக ஈடுபடுவதே நூற்றாண்டு விழா எடுக்கும் நிலையில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும். வாழ்க நாத்திகம்! வளர்க சரஸ்வதி கோராவின் புகழ்.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றி நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்தார்.
விழா நிகழ்ச்சிகள்
விழாவிற்கு காந்திஅமைதி அறக் கட்டளையின் அவைத் தலைவர் ராதாபட் தலைமையேற்றார். இங்கிலாந்தி லிருந்து வருகை தந்த மனிதநேயர் முனைவர் ஜிம் ஹெர்ரிக் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். நாகார்ஜுனா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் பாலமோகன்தாஸ், அறிவிய லாளர் சாந்தனா சக்ரவர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பிற்பகல் நிகழ்வில் சமூக மாற்றத் திற்கான கருவி கல்வியே எனும் தலைப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் நல்.இராமச் சந்திரன் ஒளிவிளக்க கருவிகளோடு அருமையான உரையாற்றினார்.
பவர் (Power) அமைப்பின் இயக்குநர் முனைவர் பர்வீன் அவர்கள் பெண் ணியம் பற்றி சிற்றுரையாற்றினார்.
சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழா நிகழ்வில் தமிழர் தலைவருடன், திருமதி மோகனா வீரமணி அவர்களும் கலந்துகொண்டார். இருவரும் இணைந்து தொடக்க விழா மேடையில் அமர வேண்டும் என விழா ஏற்பாட்டாளர்கள் வற்புறுத்திக் வேண்டி கொண்டனர்.
திருமதி மோகனா வீரமணி அவர்கள் தமிழர் தலைவருடன் சிறப்புச் செய்யப் பட்டார். இருவரும் வருகை தந்த மற்ற விருந்தினர்களுக்குச் சிறப்புச் செய் தனர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா.நல்.இராமச் சந்தி ரன், பவர் அமைப்பின் இயக்குநர் பேரா. பர்வீன் ஆகியோருக்கு, தொடக்க விழா மேடையில் சிறப்பு செய்யப்பட்டது.
நூற்றாண்டு விழா நிகழ்வில் தமிழர் தலைவருடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச்செயலாளர் வீ.குமசேரன், ஒளிப்படக் கலைஞர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண் டனர்.

விழா மேடையில் திறக்கப்பட்ட நாத்திகப் போராளி-சரஸ்வதி கோராவின் படத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மரியாதை
No comments:
Post a Comment