புதுடில்லி, செப்.14- ``ஊழலுக்கு எதிராக நடத்தப்போவதாக கூறி யுள்ள அத்வானி யின் ரத யாத்திரை ஒரு அரசியல் நாடகம்'' என்று காங் கிரஸ் கட்சி வர்ணனை செய்துள்ளது.
இதுபற்றி அந்த கட் சியின் செய்தி தொடர் பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ரதயாத்திரை என்ற வெறும் பகட்டு வேலையால், ஏமாற்று தந்திரத்தால் மட்டும் ஊழலை ஒழித்து விட முடியாது. அத்வானி நடத்த உத்தேசித்துள்ள ரத யாத்திரை போன்ற நடவடிக்கைகளால் பா.ஜனதா, அரசியல் நாடகமாடுகிறது.
ரத யாத்திரை மூலம் எப்படி ஊழலை, லஞ் சத்தை ஒழிக்க முடியும் என்று அத்வானியும், பா.ஜனதா கட்சியும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த முறை இதே போல் அத்வானி ரத யாத்திரை நடத்தினார். அப்போது ஒரு வெறுப் பான சூழ்நிலையை அந்த ரத யாத்திரை மக் களிடம் உண்டாக்கியது. அதிலிருந்து நாம் இன் னமும் மீளவில்லை.
அதற்குள் இன்னொரு ரத யாத்திரையை நடத் தப் போவதாக அத் வானி அறிவித்துள்ளார். இந்த ரத யாத்திரையும் எதிர் மறையான விளைவுகளை உண் டாக்கி, அமைதிக்கு பங் கம் ஏற்படுத்த வேண் டாம் என்று அவரை கேட்டுக் கொள்கிறேன்.
பா.ஜனதா தலை மையிலான தேசிய ஜன நாயக கூட்டணி ஆட்சி யில் அத்வானி துணை பிரதமராக இருந்தாரே? அப்போது லஞ்சத்தை ஒழிக்க, ஊழலை அகற்ற அவர் என்ன நடவ டிக்கை எடுத்தார்? லோக்பால் மசோதா கொண்டு வருவது பற் றியோ, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட் டுள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வருவது பற் றியோ அவர் எப்போ தாவது பேசினாரா? அல் லது லோக்பால் மசோதா கொண்டு வரவோ, கறுப்பு பணத்தை கொண்டுவரவோ அவ ரது அரசு ஏதாவது நட வடிக்கை எடுத்ததா?
ஊழலைச் சொல்லி அரசியல் நாடகம் ஆடா மல், அரசியலில் உள்ள ஊழலை ஒழிக்கப் பாருங்கள் என்று பா.ஜனதா கட்சியை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அபிஷேக் சிங்வி தெரிவித்தார். முன்னதாக, அத் வானியின் ரத யாத்திரை குறித்து அவரது வீட் டில் பா.ஜனதா தலை வர்கள் ஆலோசனை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரம் இந்த ஆலோசனை நீடித் தது. கட்சி தலைவர் நிதின் கட்காரி, நாடாளு மன்ற எதிர்க்கட்சி தலை வர் சுஷ்மாசுவராஜ், மேலவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, அனந்த் குமார் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment