Monday, September 26, 2011

காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டம்


காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டம்



காந்தியை கொன்ற, மத்திய அரசாலே 3 முறை தடை செய்யப்பட்ட
காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டம்
ஜாதி ஒழிய சமத்துவ சமுதாயம் மலர பாடுபடுகின்ற எங்கள்மீது
கற்களை, டியூப்லைட்டுகளை வீசி தாக்குவதா?
தமிழர் தலைவர் கண்ணியத்துடன் எழுப்பிய கேள்வி
கூட்டத்தினர் மீது கல்வீச்சு நடந்தபோது பரபரப்பு... (விருகம்பாக்கம், 24.9.2011)
தமிழர் தலைவர் உரையைக் கேட்க திரண்டிருந்தோர் (விருகம்பாக்கம், 24.9.2011)
விருகம்பாக்கம், செப். 25- காந்தியைக் கொன்ற, 3 முறை மத்திய அரசாலே தடை செய்யப்பட்ட, காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்றக் கூட்டம் மக்கள் அறிவு பெற, நாட்டில் மனிதநேயம் மலர்ந்தோங்கிட ஜாதியை ஒழித்து சமத்துவ சமுதாயம் மலர பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற எங்கள் கூட்டத்தில் கல்வீசி தாக்குவதா? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விளக்கவுரை யாற்றினார்.
சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ்.காலிதத்தனம்
எப்படியாவது திராவிடர் கழக பொதுக் கூட்டத்தை நிறுத்த வேண்டும். திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி பேசுவதை தடுத்து நிறுத்தி முறியடிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி அமைப்பினர் பா.ஜ.க.வினர் ஆகியோர் திட்டமிட்டு வன்முறை கலவரத்தில் கூட்டம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை தொடர்ந்து ஈடுபட்டனர். கூட்டத்தில் கற்களை வெளியில் இருந்து பல முறை வீசினர்.
கல்வீச்சு, டியூப்லைட் தாக்குதல்
பொதுக்கூட்டத்திற்கு போடப்பட்டிருந்த  டியூப்லைட்டுகள் சுமார் 5க்கும் மேற்பட்டவை களை உடைத்தெறிந்தனர். இப்படிப்பட்ட பதற்ற மான சூழ்நிலையில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சுமார் முக்கால் மணிநேரத்திற்கு மேல் மனிதநேயத்துடன் அதே நேரத்தில் ஆவேசமாகவும் பேசினார்.
தமிழர் தலைவர் உரை
திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரையில் கூறியதாவது:
இன்றைக்கு இந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய 133ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காவல்துறையினருடைய அனு மதியோடு ஏற்பாடு செய்து நடைபெற்றுக்கொண் டிருக்கின்ற இந்த கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பொதுக்கூட்டம் நடைபெறக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள், பி.ஜே.பி.யினர் திட்டமிட்டு பொதுக்கூட்டத்தில் கற்களை வீசியிருக்கிறார்கள்.
எனக்கு கறுப்புக்கொடியா?
அது மட்டுமல்ல. நான் இந்த பொதுக்கூட்டத் திற்கு வரும் பொழுதே எனக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்கள் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித் திருக்கிறார்கள். திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கூட என்னிடம் கேட்டார். நீங்கள் வரும்பொழுது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் உங்களுக்கு கறுப்புக்கொடி காட்டினார்களா? என்று கேட்டார்கள். நான் அப்படிப் பார்க்கவில்லை என்று சொன்னேன்.
இன்று ஒரு நாளில் மட்டும் பல நிகழ்ச்சிகள்
நான் காலையில் வேலூருக்குச் சென்று அங்கு அய்யா அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் வேலூர் வி.அய்.டி பல்கலைக் கழக வேந்தர் விசுவநாதன் அவர்களுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிவிட்டு மாலை சென்னைக்கு வந்து பெரியார் திடலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு அவசரமாகப் புறப்பட்டு இந்த மேடைக்கு வந்து சேர்ந்தேன் என்பதை நண்பர் சுப.வீரபாண்டியனிடம் கூறினேன்.
வெளியே கிளம்பும்போதே செலவு கணக்குதான்
ஒன்றைத் தெளிவாக இந்தக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கின்றேன். நாங்கள் கறுப்புச்சட்டை அணிந்துகொண்டு வெளியே வரும்பொழுதே உயிரை துச்சமென மதித்து வந்துதான் நாள்தோறும் மக்களைத் திருத்த அவர்களை அறிவாளிகளாக்க அவர்களுடைய வாழ்வு முன்னேற பாடுபட்டுக்கொண்டு வருகின் றோம்.
நாங்கள் வீட்டை விட்டு வரும்பொழுதே திரும்பி வரமாட்டோம். சென்றால் செலவு கணக்கு திரும்ப வீட்டிற்கு வந்தால்தான் வரவுக்கணக்கு என்று தான் எங்களுடைய பொதுத்தொண்டை நாள்தோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
உயிரை துச்சமென கருதக்கூடியவர்கள்
இங்கே என்னை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இங்கே அமர்ந்திருக்கின்ற தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆனாலும், எங்கள் கழக பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆனாலும், அல்லது எங்களுடைய தோழர்கள் எவராக இருந்தாலும் உயிரை துச்சமாக கருதக் கூடியவர்கள்.
இந்த இயக்கமே எதிர் நீச்சலில் வளர்ந்த இயக்கம் . தந்தை பெரியார் அவர்களே எதிர் நீச்சலில் தனது வாழ்நாள் முழுக்க பிரச்சாரம் செய்து மக்களுக்காக பாடுபட்டார்.
பெரியார் அவர்கள் மறைந்து 38 ஆண்டுகள் ஆனாலும் இன்றைக்கு தந்தை பெரியாருடைய கொள்கைகள், இலட்சியங்கள் உலகம் முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கின்றன.

பெரியார் ஒரு சகாப்தம்
பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லும் பொழுது பெரியார் ஒரு சகாப்தம் அவர் ஒரு திருப்பம், அவர் ஒரு காலகட்டம் என்று சொன்னார்.
ஏதோ இங்கே கல்வீசி இந்த கூட்டத்தை கலைத்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். அய்யா அவர்கள் மீது கல்வீசி காலித்தனங்கள் செய்த எத்த னையோ சம்பவங்கள் உண்டு.
கற்காலத்தில்தான் வாழுகிறீர்களா?
நாம் கற்காலத்தில்தான் வாழுகி றோமா? அல்லது தற்காலத்தில் வாழுகி றோமா? உங்களை எல்லாம் கற்காலத்தி லிருந்து விடுவித்து பொற்காலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற் காக எங்களுடைய உயிரைக் கொடுத்து நாள்தோறும் அறிவுப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.
அழகிரியே உரத்துப் பேசு
பட்டுக்கோட்டை அழகிரி கூட்டத்தி லும் கற்கள் வந்து விழும். அப்பொழுது அவர் சொல்லுவார். கற்கள் வந்து விழவிழ அழகிரியே இன்னும் உரத்துப் பேசு, அழகிரியே இன்னும் நெஞ்சை நிமிர்ந்துப் பேசு என்ற எண்ணம் தான் வரும் என்று பேசுவார்.
உனக்குத் தெளிவிருந்தால் எங்களுடன் இதே இடத்திற்கு வந்து வாதம்செய். எங்களுடைய கருத்துகளை சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு. உனக்கு தைரியம் இருந்தால் தெளிவு இருந்தால் இதே இடத்தில் பொதுக்கூட்டம் போட்டு பதில் சொல்.
எனதருமை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சகோதரர்களே நீங்கள் அந்த அமைப்பு களில் புரியாமல் இருக்கிறீர்கள்.
பார்ப்பனர் ரத்தம் குடிக்கப் பார்க்கின்றனர்
பார்ப்பன நரிகள் நம்மை முட்டவிட்டு ஆரிய நரிகள் ரத்தம் குடிக்கப் பார்க் கின்றன. இது உங்களுக்கு புரியவில்லை. நீங்களும் ரத்தம் சிந்தக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் நாங்கள்.
ஏதோ எங்கள் மீது கற்கள் வந்து விழுந்தால் நாங்கள் ஓடிப்போய்விடு வோமா? அல்லது கூட்டத்தை நிறுத்தி விட்டு ஓடிப்போய்விடுவோமா?
எங்கள் மீது கற்கள் வீசினால் கூட்டம் நின்றுவிடுமா?
நீங்கள் எங்கள் மீது கற்களை வீசினால் அதனால் கூட்டம் நின்றுவிடும் என்று மட்டும் கருதாதீர்கள். ஆர்.எஸ்.எஸ். நண்பர்களே, உங்களுக்குத் தவறான வழிகளை காட்டிக்கொண்டிருக்கிறார் கள். நீங்கள் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
நாங்கள் எதையும் அறிவுப் பூர்வமாக அணுகுகிறவர்களே தவிர, உணர்ச்சிப் பூர்வமாக அணுகக் கூடியவர்கள் அல்ல
கருத்தை கருத்தாலே சந்திக்கக் கூடியவர்கள்
நாங்கள் கருத்தை கருத்தாலே சந் திக்கக் கூடியவர்கள். வன்முறையிலே நம்பிக்கை இல்லாதவர்கள். உங்களுக்கு அறிவு நாணயம் இருந்தால் நாங்கள் பேசிய இன்ன கருத்து தவறு என்று சொல்லுங்கள். எங்களைப் பொறுத்த வரை இனம் இனத்தோடு மோதக் கூடாது என்று கருதக்கூடியவர்கள். நாளையே ஆர்.எஸ்.எஸ். காரர்கள் கூட திருந்தக் கூடும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள்.
திருந்து அல்லது திருத்து
தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவமே திருந்து அல்லது திருத்து என்பதுதான். நாங்கள் தவறான கருத்து களைச் சொன்னால் எங்களைத் திருத் துங்கள். எங்கள் கருத்து சரியானது என்று புரிந்துகொண்டால் நீங்கள் திருந்தி விடுங்கள். எந்த கேள்விகளுக்கும் என்றைக்கும் பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக் கின்றவர்கள். நீங்கள் சிந்திக்க மறுக்கி றீர்கள். கடைசி மூடநம்பிக்கையாளர் இருக்கிற வரை, கடைசி பார்ப்பனர் ஆதிக்கம் இருக்கிறவரை, தந்தை பெரியார் கொள்கைக்கு வேலை உண்டு. அண்ணா சொல்லுவார். பெரியாரின் போர் முறை எப்படிப்பட்டது என்று சொல்லும்பொழுது சொல்லுவார். கண்ணுக்குத் தெரியாத மூலபலத்தை முறியடிப்பது தான் பெரியாரின் போர் முறை என்று சொல்லுவார். உலகத்தி லேயே வேறு எந்த நாட்டில் இங்குள்ளது போல் வர்ணாஸ்ரம தர்மம்-குலதர்மம் இருக்கிறது? எந்த நாட்டில் ஜாதி உண்டு?
எந்த நாட்டிலாவது ஜாதி உண்டா? பிறக்கும் பொழுதே ஒருவன் பார்ப் பானாகப் பிறக்கின்றான். பிறக்கும் பொழுதே இன்னொருவன் பறையனாகப் பிறக்கின்றானா? இல்லையே.
ஜாதி ஒழிந்த சமுதாயம் மலரவேண்டும். சமத்துவ சமுதாயம் பூத்துக் குலுங்க வேண்டும். என்பதற்காகத்தான் நாங்கள் வாழ்நாள் முழுக்க பாடுபட்டுக்கொண்டு வருகின்றோம்.
இந்து மதத்தை மட்டும்தானே நீங்கள் பேசுகிறீர்கள்? ஏன் இஸ்லாம் மதத்தைப் பற்றி பேச வில்லை? ஏன் கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றிப் பேசவில்லை என்று எண்ணலாம்.  அழுக்கு எங்கே இருக் கிறதோ அங்கு சோப்பு போட்டு தேய்த்துக்குளிக்கின்றோம்.
நீங்கள் கூட்டுங்களேன் அந்த குப்பையை!
எங்கே குப்பை இருக்கிறதோ அந்த இடத்தை கூட்டுகின்றோம். அடுத்த வீட்டில் குப்பை இருக்கிறதே என்று சொன்னால் அந்த குப்பையை நீங்கள் போய் கூட்டுங்கள்.
உங்களுடைய இந்து என்ற சொல் என்ன தமிழ் மொழிச்சொல்லா? இந்த நாட்டுக்கே சம்பந்தமில்லாத சொல். கைபர் போலன் கணவாய் வழி வந்த வர்கள் இந்து மதம் என்று பெயர் வைத்தார்கள். இந்து மதம் என்றால் அது வேதமதம். பார்ப்பன மதம், சனாதன மதம் என்றுதான் பெயர்.
எங்களைப் பற்றி எழுதுவார்கள். ஜெயிலுக்கும், பெயிலுக்கும் புதுச்சேரியில் அலைந்து கொண்டிருக்கின்ற சங்கராச் சாரியாரைப் பற்றி எழுத மாட்டார்கள்.
சூத்திரன் என்ன பாரத ரத்னா பட்டமா?
உன்னுடைய மனுதர்மத்தில்தானே உன்னை சூத்திரன் என்று சொல்லப் பட்டிருக்கிறது. சூத்திரன் என்றால் தாசி மகன் என்று பொருள். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வில் இருக்கின்ற தோழர்களே சூத்திரன் என்றால் அது பாரத ரத்னா பட்டம் என்று கருதுகிறீர்களா?
ஆதாரத்துடன் சொல்லுகின்றோம். உன்னுடைய மனுதர்மத்தில் 412 ஆவது சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதே. இதைப் பார்த்து எங்களுக்கு ரத்தம் கொதிக்கிறது. உங்களுக்கு அறிவையும், மான உணர்வையும் ஊட்ட நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
பெரியாரால் படித்தோம்
தந்தை பெரியார் வகுப்புவாரி உரிமை இடஒதுக்கீட்டால்தான் இன்று பல வெளிநாடுகளில் கம்ப்யூட்டர் எஞ்சினி யர்களாக நம்மவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பெரியாருடைய உழைப்பு அல்லவா காரணம். உலகில் அடிமையாக வாழ்ந்த நீக்ரோக்களுக்குக் கூட சூத்திரன் என்ற இப்படிப்பட்ட ஒரு அவமரியாதை ஏற்பட்டதில்லையே!
உன்னுடைய குலதர்மம் இருந்திருந் தால் உன்னுடைய பிள்ளை படிப்பதற்கு வாய்ப்பும், வெளிநாட்டில் கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆவதற்குரிய வாய்ப்பும் கிடைத்திருக்குமா? குலதர்மக் கல்வியை ஒழித்தவர் தந்தை பெரியார் அல்லவா?
எதிர்ப்பு-சலசலப்பு எல்லாம் எங்களிடம் நடக்காது
உங்களுடைய எதிர்ப்பு சலசலப்பு என்பதெல்லாம் கருப்புச்சட்டைக்காரர் களிடம் நடக்காது. நாங்கள் காவல் துறையை மதிக்கிறவர்கள். நாங்கள் சட்டத்தை மதிக்கிறவர்கள். நீங்கள் வன்முறையிலே ஈடுபட்டுக்கொண்டிருக் கின்றீர்கள்.
கொத்து கொத்தாக கற்களைவீசி, டியூப்லைட்டுகளை உடைத்து இந்தக் கூட்டத்தை கலைத்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது நடக்காது. நாங்கள் மதவெறியை ஒழித்து மனித நேயத்தைப் பரப்புகிறவர்கள்.
3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம்
உங்களுடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்த நாட்டிலே மூன்று முறை தடைசெய்யப்பட்ட இயக்கம். காந்தியை கொன்ற கோட்சே யார்? ஆர்.எஸ்.எஸ். காரன் அல்லவா? நான் கீதையைப் படித் தேன். வன்முறைக்கு ஆயத்தமாக வேண் டும் என்று சொல்லப்பட்டிருக் கின்றது.
எனவே காந்தியை கொன்றது தவறு அல்ல என்று  நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவன் கோட்சே. டில்லியில் காம ராஜரை உயிரோடு எரிக்க முயன்ற கூட்டத்தினர்தானே ஆர்.எஸ்.எஸ் சங்பரி வார் கூட்டம்.
அம்பேத்கர் விசன் வடநாட்டிலிருந்து அம்பேத்கர் விசன் என்ற பத்திரிக்கையில் 30 பக்கங்களுக்கு மேல் இந்தியில் பாராட்டி அவருடைய கருத்துகளை எழுதியிருக்கின்றார்கள். பெரியாருடைய படத்தை அட்டையிலே போட்டிருக்கின்றார்கள்.
பெரியார் அவருடைய இளமைக் காலத்தில் காசிக்கு சந்நியாசியாகச் சென்றார். ஆனால் இன்றைக்கு அதே காசியில் பெரியார் ஒரு தத்துவ கர்த்தா வாக வரவேற்கப்படுகின்றார்.
பெரியார் மூச்சுக்காற்று
எனவே ஆர்.எஸ்.எஸ். நண்பர்களே, பி.ஜே.பி., நண்பர்களே நீங்கள் இருட்டில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு அறிவு வெளிச்சத்தைக் கொடுப்பவர் பெரியார்.
பெரியார் என்பவர் மூச்சுக் காற்று போன்றவர் அந்த மூச்சுக் காற்றை நீங்கள் மறுக்க முடியாது. கலைஞர் அவர்கள் ஆட்சியில் அறிவித்த தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதனைக் கொண் டாடக்கூடாது என்று ஒரு பண்பாட்டு படை எடுப்பு இப்பொழுது உள்ளே புகுந்திருக்கிறது. மனிதநேய அடிப்படையில் சொல்லு கின்றோம். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் உயிர் ஊசலாடுகிறது. இப்பொழுது உலக அளவில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு வருகிறது.
அவர்களை மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். அவர்களது தூக்குத்தண்டனை ரத்து செய்யப்படவேண்டும். 30 கல் தொலைவிலே தமிழினம் அழிக்கப் பட்டதே அவர்கள்இந்துக்கள் இல் லையா? கலைஞர் ஆட்சி
தமிழின உணர்வைப் பற்றி சகோதரர் பழ.நெடுமாறன் அவர்களும், சுப. வீர பாண்டியன் அவர்களும் பேசினார் கள். அதற்காக அவர்கள் சிறை வைக்கப்பட் டார்கள்.
அடுத்து கலைஞர் ஆட்சி வந்தது. நாங்கள்தான் பொதுக்கூட்டத்திலே சொன்னோம். கோயில் பூட்டுக் கதவையே (அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்) திறந்த வர் முதல்வர் கலைஞர். இவர்களுடைய பூட்டையும் திறக்க வேண்டும். என்று கேட்டோம். அதற்குப் பிறகு வெளியே வந்தார்கள். அவர்களுக்கும் போடப் பட்டிருந்த வாய்ப்பூட்டும் அகற்றப்பட் டது.
இனிமேல் அடிக்கடி இந்த பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவோம். இத்தோடு நின்றுவிடமாட்டோம்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி  அவர்கள் தமது உரையில் பேசினார்.
பொதுக்கூட்டம்
சென்னை விருகம்பாக்கம் காளியம் மாள் கோயில் தெருவில் 23.9.2011 அன்று இரவு 7மணிக்கு தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது.
முதலில் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தினர். (தமிழர் தலைவர் கூட்டத்தில் சால்வை அணிவித்தார்.)
அடுத்து குடந்தை நாதன் பெரியார், தமிழர் தலைவரைப் போற்றிப் பாடல் களைப் பாடினார். மாவட்ட ப.க. செய லாளர் சி.செங்குட்டுவன் அனைவரையும் வரவேற்று பேசினார். தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர் இரா.வில்வநாதன், பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார். தென்சென்னை மாவட்ட தி.க. செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, கோ.வீர. ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். சென்னை மண்டல தி.க. செயலாளர் நெய்வேலி வெ.ஞானசேகரன், தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், சென்னை மண்டல தி.க. தலைவர் தி.இரா.இத்தினசாமி, கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன்,திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரை யாற்றினர்.
நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக பழனிச் செல்வம் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், தாம்பரம் மாவட்ட தி.க. தலைவர் ப.முத்தையன், தமிழ்ச் சாக்ரடீஸ், கனகா, பெரியார் மாணாக்கன், ஆவடி மாவட்ட தி.க. தலைவர் மா.ஆ.கந்தசாமி, மாவட்ட செயலாளர் பா.தென்னரசு, காஞ்சிபுரம் முத்தரசன், கொடுங்கையூர் தங்கமணி-தனலெட்சுமி, அடையாறு கோ.அரங்கநாதன், கூடுவாஞ் சேரி மா.இராசு, இராமேசுவரம் சிகாமணி, கீழ்வேளூர் இரா.மாதவன் ஆகிய முக்கிய தோழர்களும் மற்றும் திரளான தோழியர்களும், பல்வேறு கட்சியினரும் இனஉணர்வாளர்களும் பங்கேற்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...