Saturday, August 27, 2011

கலைத்துறையில் பார்ப்பனரல்லாதார் எவ்வளவு பேர் விற்பன்னர்களாக இருந்தார்கள்-பாரீர்!

பெரியார் கொடுத்த பட்டியலைக்காட்டி தமிழர் தலைவர் விளக்கம்


சென்னை, ஆக.27-கலைத்துறையில் பார்ப்பன ரல்லாத தமிழர்கள் எவ்வளவு விற்பன்னர்களாக இருந்தார்கள் பாருங்கள் என்று குடிஅரசில் பெரியார் தந்த பட்டியலைப் படித்துக் காட்டி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
 
தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் 10.8.2011 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய முதல் தொடர் சொற்பொழிவின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: அய்யா மேலும் சொல்லு கிறார்.

சங்கீத கலை அடியோடு அழிந்து போவதே மேல்!

இதை உத்தேசித்தே சில சங்கீத சம்பந்தமான சபைகளில் நாம் பேச நேர்ந்தபோது கூட சங்கீதத்தில் இச்சை வைத்திற்கு ஆகவும் சங்கீதத்தை தொழிலாகக் கொண்டதற்கு ஆகவும் பார்ப்ப னரல்லாதார் என்கின்ற காரணத்திற்காக இவ்வளவு கேவலமாயும் இழிவாயும் நடத்தப்படுவதாயிருந் தால் சங்கீதக் கலையே அடியோடு அழிந்து போவதே மேல் என்றும் அதனால் யாருக்காவது ஜீவனத்திற்கு கேடுவருமானால் அப்படிப்பட்ட வர்கள் இச்சங்கீதத்திற்கு கருமாதி செய்துவிட்டு ரோட்டில் கல் உடைத்து வயிறு வளர்ப்பதே மேல் என்றும் (சிரிப்பு கைதட்டல்). அய்யா அவர்கள் எவ்வளவு அழகாக சொல்லுகிறார்கள் பாருங்கள். தன்மானத்தைவிட்டுவிட்டு இப்படி இருக்கி றார்களே என்று அய்யா அவர்கள் ஆத்திரப்பட்டு வேகமாக சொல்லுகிறார் பாருங்கள்.
 
அத்தொழிலும், ஜீவனமும் சங்கீதத்தை விட கவுரவமும் மேன்மையுமான வேலை என்றும் சொல்லி வந்திருக்கிறோம்.

சங்கீத மகாநாட்டில்

ஆகவே, சமீபத்தில் ஈரோட்டில் நடக்கும் சங்கீத மகாநாட்டில் மற்ற சங்கீத மகாநாடுகளைப் போல் சங்கீத சாஸ்திரம் என்பதைப் பற்றி பேசியே காலம் போக்காமல் சங்கீதத்தை கைக்கொண்ட பார்ப்ப னரல்லாத மக்களுடைய சுயமரியாதையை காப் பாற்றும் விஷயத்திலும் அதிகமான கவனம் செலுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
அநேக துறைகளில் அடக்கி வைக்கப்பட்டனர்
நிற்க! இன்றைய தினம் தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் வாய்ப்பாட்டு புல்லாங்குழல், பிடில், மிருதங்கம், கஞ்சிரா, ஜலதரங்கம், கடம், கொன்னக்கோல், நாதசுரம் முதலிய அநேக துறைகளில் நிகரில்லாதவர்களும் மிக்க விற்பன்னர் களுமாக சுமார் 400, 500 பேர்கள் வரையில்  பார்ப்பனரல்லாதார்களில் இருந்தும் அவர்களைப் பற்றிய பெயர்கள் கூட அனேகருக்குத் தெரிய முடியாமல் அடக்கி வைக்கப்பட்டி ருக்கின்றது.
ராமசுப்பிரமணியம் கொடுத்த பட்டியல்
அவர்களில் சிலரின் பெயர்களையும் திரு.ராம சுப்ரமணியம் அவர்கள் கொடுத்த பட்டியல்ப்படி மற்றொரு பக்கத்தில் காணலாம். மற்றப் பெயர் களும் பின்னால் வெளிவரும் என்று சொல்லு கின்றார்.
ஒரு ஆச்சரியம் பாருங்கள். பெரியார் எவ்வளவு பெரிய ஆக்கரீதியான பணியை செய்திருக்கிறார் என்பதை நாம் உணரலாம். கடவுளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் எவ்வளவு  பார்ப்பன ரல்லாத மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார் என்பது எத்தனை சமூகத்தார், பார்ப்பனரல்லாதாருக்குத் தெரியும்.
1930இல் குடிஅரசில் உள்ள செய்தி
இதோ பாருங்கள். 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி வந்த குடிஅரசில் வெளி வந்திருக்கின்ற ஓர் செய்தி. பிராமணரல்லாத சங்கீத வித்து வான்களின் பெயர் விலாசங்கள். திரு.இராமசுப்பிர மணியன் அவர்களால் கொடுக்கப்பட்ட பட்டி யல்கள் என்பதை குடிஅரசில் வெளியிட்டிருக் கின்றார். நீலாவதியை திருமணம் செய்து கொண்டவர். ராமசுப்பிரமணியம்-நீலாவதி ராமசுப்பிரமணியம் சுயமரியாதைக்காரர்கள். குடிஅரசில் வெளிவந்ததைப் படிக்கின்றேன்.
வாய்ப்பாட்டு
1. நாயனா பிள்ளை பெரிய காஞ்சீவரம் 2. பஞ்சாப கேசபிள்ளை மலைக்கோட்டை-திருச்சி 3. சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, மாம்பலம்-சென்னை 4. ராஜகோபால் பிள்ளை ராஜவீதி-மன்னார்குடி தஞ்சாவூர் ஜில்லா 5. செல்வரத்தினம் பிள்ளை விளங்கியம்மன் தெரு சிதம்பரம் எஸ்.அய்.ஆர். 6.பொன்னையாபிள்ளை அண்ணாமலை பல்கலைக் கழக சங்கீத உபாத்தியாயர் சிதம்பரம் எஸ்.அய்.ஆர். 7.கலியாணசுந்தரம் பிள்ளை, திருவீழிமிழலை-பூந்தோட்டம் எஸ்.அய்.ஆர். 8. ஸ்ரீமதி பெங்களூர் நாகரத்தினம்-சென்னை 9. திருமதி பெங்களூர் தாயி ராமகிருஷ்ணன் தெரு-சென்னை 10. ராதாகிருஷ்ண பிள்ளை காளையார் கோவில் தெரு, கும்பகோணம் 11.ஸ்ரீமதி கோமளம் சேகாதரிகள் சாரங்கபாணி சந்நிதி கும்பகோணம் 12.ஸ்ரீமதி மீனாட்சி சுந்தரம் சகோதரிகள் சட்டையப்பர் சந்நிதி நாகப்பட்டணம் 13. லஷ்மி ரத்தனம் சேகாதரிகள் 27 கிருஷ்ணன் தெரு, சென்னை 14. பிருந்தா சகோதரி, 8 பை ராகி மடத்தெரு, சென்னை 15. சின்ன பாப்பா மானோஜியப் பாவீதி, தஞ்சாவூர் 16. சௌந்தரம் கீவளூர் ளுஐசு 17. மோஹனாபாய் 42, வெங்கிடாஜல செட்டி தெரு திருவல்லிக்கணி, சென்னை 18. ஜகதாம்பாள் பெரியதெரு, கும்பகோணம் 19.டி.எஸ்.ரங்கம்மாள் திருநெல்வேலி ளுஐசு 20. சௌந்தரவல்லி தெற்கு வீதி, திருவாரூர் ளுஐசு 21. சாரதாம்பாள் சோமேசர் சன்னதி கும்பகோணம் 22.பத்மாவதி பெரிய குற்றாலம், குற்றாலம். 23.சந்தானம் டாட்டர் வடக்கு வீதி மாயவரம் 24.குப்பு அம்மாள் பெரிய காஞ்சிபுரம் 25.சீதாம்பாள் சின்னகடைத் தெரு, திருச்சி 26. ஜானகி அம்மாள் கன்சர் கோட்டை சந்து, தஞ்சாவூர் 27. அம்மாக்கண்ணு பாபநாசம் 28. லலிதாங்கி தங்கசாலைத் தெரு, சென்னை 29. ஐய்யம்மாள் 8 பைராகி மடத்தெரு, சென்னை 30. பவானியம்மாள், சகாநாயக்கன் தெரு, தஞ்சாவூர் 31. பவானியம்மாள் சௌனி செட்டித்தெரு, தஞ்சாவூர் 32. பத்மாவதி அம்மாள் முத்தோஜியப்பா சந்து தஞ்சாவூர்  33. மதுராந்தகம் கண்ணம்மாள் ஜி.டி. சென்னை 34. சௌடய்யா ஸிஸ்டர் ஜி.டி. சென்னை 35. அஞ்சுகத்தம்மாள் கீழவீதி பழனி 36. அம்மாக்கண்ணு கோவை.
புல்லாங்குழல்
திருவாளர்கள்: 1. சுவாமிநாத பிள்ளை தாஸ் தாமால் சந்து, தஞ்சாவூர் 2. ரங்கதாஸ் சேலம் 3. சுப்பையா பிள்ளை சோழபுரம், கும்பகோணம், தாலுகா 4. ராமசாமி பிள்ளை, உறையூர், திருச்சி ளுஐசு 5. டி.செல்வக்கணபதி பிள்ளை திருப்பாம்புரம் பேரளம் ளுஐசு 6. சில்கு பாப்பா கீரனூர், பேரளம் 7. ஸ்ரீமதி ருக்மணி அம்மாள் ஸ்ரீரங்கம், திருச்சி ளுஐசு 8. ராஜமாணிக்கம், டாட்டர் வடக்கு வீதி திருவிடைமருதூர் 9. கோவிந்தசாமி பிள்ளை ஆயி குளத்துமேல் கரை கும்பகோணம் 10. சிவராம பிள்ளை டாட்டர், திருக்கோ கர்னம், புதுக் கோட்டை.
பிடில்
திருவாளர்கள்: 1.கோவிந்தசாமி பிள்ளை கும்பகோணம் ளுஐசு 2.ராஜமாணிக்கம் பிள்ளை, நாகேஸ்வரர் வடக்கு வீதி, கும்பகோணம். 3.மகாதேவ பிள்ளை, சித்தாய் ஆலத்தம்பாடி, ஆத்தம்பாடி 4. சிவவடிவேல் பிள்ளை, சாரங்கபாணி சந்நிதி, கும்பகோணம் 5. சுப்பிரமணிய பிள்ளை, திருவீழிழலை, பூந்தோட்டம் ளுஐசு 6. கிருஷ்ணசுவாமி பிள்ளை, மலைக்கோட்டை, திருச்சி 7. ரத்தின சுவாமி பிள்ளை, தொப்பிள் பிள்ளையார் சந்து தஞ்சாவூர் 8.ராஜகோபால் நாயுடு மதுரை 9.ராமச்சந்திரம் பிள்ளை மேல 2ஆம் வீதி, புதுக்கோட்டை 10. சுப்பிரமணிய பிள்ளை வரதா முத்தையப்பன் தெரு, சென்னை  11. சௌடய்யா மைசூர் 12. தாயப்பா பெங்களூர் 13. வெங்கிட கிருஷ்ண நாயுடு விஜய நகரம் (விசாகபட்டினம்) 44, பரமசிவம் பிள்ளை திருச்சி 15. கோவிந்தசாமி பிள்ளை, ராஜமன்னார்குடி 16. ராதாகிருஷ்ண பிள்ளை ஆலங்குடி நீடாமங்கலம் 17. பாலு பிள்ளை வடக்கு வீதி, மாயவரம்  18. வெங்கடாசலம் பிள்ளை, தெற்கு வீதி தஞ்சாவூர் 19. டி.சுப்பரமணியபிள்ளை பாரிஸ் வெங்கிடாசல அய்யர் தெருவு.
மிருதங்கம்
திருவாளர்கள்: 1. அழகநம்பி பிள்ளை, கும்ப கோணம் 2. குப்புசாமி பிள்ளை, குற்றாலம் 3. தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, புதுக்கோட்டை 4. வேணுநாயக்கர் திருவல்லிக்கேணி, சென்னை

5. முத்தய்யா பிள்ளை, பழனி 6. மகாலிங்கம் பிள்ளை, பந்தமாணிக்கப்பா சந்து, தஞ்சாவூர் 7. சிவவடிவேல் பிள்ளை, குற்றாலம் 8. பீதாம்பர தேசாயி, திருவல்லிக்கேணி, சென்னை 9. சுப்பிரமணியபிள்ளை, பழனி,  10.ராமதாஸ் ராவ், பெத்தபெருமாள் சந்து தஞ்சாவூர், 11. கிருஷ்ணபிள்ளை தொப்பிள் பிள்ளையார் சந்து, தஞ்சாவூர் 12. பைரவம்பிள்ளை, தஞ்சாவூர் 13. வேணு செட்டியார் சக்கிரபாணி சந்நிதி, கும்பகோணம் 14. தக்ஷிணாமூர்த்தி ஆச்சாரி, இடைத்தெரு, திருச்சி 15. சாமிநாதபிள்ளை, வடக்கு 2ஆம் வீதி புதுக்கோட்டை 16. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் ஜில்லா 17. துரைசாமி பிள்ளை, பள்ளத்தெரு, மதுரை 18. திருவேங்கிட நாயுடு, மதுரை 19. ராஜு நாயுடு, மதுரை 20. பக்கிரியா பிள்ளை, சாரங்கபாணி நாயுடு வடக்கு மடவிளாகம், கும்பகோணம் 21. ஸ்ரீமதி ரெங்கநாயகி, திருக்கோகர்கனம், புதுக்கோட்டை 22. ராமய்யா பிள்ளை கட்டளைத் தெரு, திருநெல்வேலி 23. அப்பாயிநாயக்கர் மடப்புரம், திருவாரூர் 24. அப்பண்ணா ராவ் மடப்புரம், திருவாரூர் 25. கோவிந்தசாமி பிள்ளை, ராஜவீதி, ராஜமன்னார்குடி,  26. கோவிந்தசாமி பிள்ளை காளிபண்டாரத் தெரு, குறநாடு, மாயவரம் 27. நடேச பிள்ளை, கீழவீதி, மாயவரம் 28. நாகராஜ பிள்ளை மனோஜியப்பா வீதி, தஞ்சாவூர் 29. பாலுபிள்ளை, தெற்கு ராஜ வீதி, தஞ்சாவூர் 30. நடேச பிள்ளை விளங்கியம்மன் தெரு, சிதம்பரம் 31. மருதமுத்து பிள்ளை பைராகி கோவில் தெரு, சென்னை 32.சத்திவேலு பிள்ளை, திருவல்லிக்கேணி, சென்னை 33. நாகராஜ பிள்ளை முத்தோஜிய்ப்பா சந்து தஞ்சாவூர் 34. ரெங்கசாமி நாயுடு மடப்புரம் திருவாரூர்  35. நடேச பிள்ளை பள்ளித்தெரு, மதுரை 36.மீனாட்சிசுந்திரம் பிள்ளை, நீடாமங்கலம்,

கஞ்சிரா

1. தெட்சிணாமூர்த்தி பிள்ளை, புதுக்கோட்டை 2. பஞ்சாப்பகேச பிள்ளை, மலைக்கோட்டை, திருச்சி 3. முத்தையா பிள்ளை பழனி, 4. வேணு நாயக்கர், திருவல்லிக்கேணி, சென்னை
5. பார்த்தசாரதி, திருவல்லிக்கேணி சென்னை 6. வேதாசலம் பிள்ளை, காஞ்சிபுரம், 7. குருசாமி பிள்ளை, கீழவீதி, மாயவரம் 8. வைத்தினாத பிள்ளை, விளங்கியம்மன் தெரு, சிதம்பரம். 9.ராமய்யா பிள்ளை, கட்டளைத் தெரு, திருநெல்வேலி 10. செல்வரத்தினம் பிள்ளை விளங்கியம்மன் தெரு, சிதம்பரம்.

ஜலதரங்கம்

திருவாளர்கள்: 1. ரமணீய செட்டியார் 17, தாதா முத்தையப்பன் தெரு, சென்னை 2. நாராயணசாமி பிள்ளை, உறையூர் திருச்சி 3. கண்ணுச்சாமி பிள்ளை திருவழுந்தூர், மாயவரம் 4. ராஜாயி அம்மாள், இளமையாக்கினார் வீதி, சிதம்பரம்.

கதை

திருவாளர்கள்: 1. ஸ்ரீமதி எம்.கனகாம்புஜம், திருக்கோகர்னம், புதுக்கோட்டை 2. மாணிக்கம் க்ஷ க்ஷ 3. விஷ்ணுபுரம் பாப்பா, விஷ்ணுபுரம், இரவாஞ்சேரி, போஸ்டு, பூந்தோட்டம் 4. பத்மாசானிபாய் சென்னை, 5. துரைக்கண்ணுபாய், கீழ வீதி, மாயவரம் 6. ஸ்ரீமதி பன்னிபாய் சென்னை, 7. ஸ்ரீமதி பத்மாவதி பாய், முத்தோஜியப்பா சந்து, தஞ்சாவூர் 8. வாலாம்பாள் எல்லையம்மன் கோவில் தெரு, தஞ்சாவூர் 9. தனம் தெற்கு வீதி, தஞ்சை 10. ஞானாம்மாள் விளங்கியம்மன் தெரு, சிதம்பரம் 11. பஞ்கஜத்தம்மாள் சகோதரி விளங்கியம்மான் தெரு சிதம்பரம் 12. சுந்திரமூர்த்தி ஓதுவர் கட்டளைத் தெரு, திருநெல்வேலி 13. லட்சுமி காந்தா ஜி.டி.சென்னை 14. சித்திரகவி சிவராம பாகவதர், சாமநாத குளக்கரை, தஞ்சாவூர் 15. பட்டணம் அம்மாள் டாட்டர் தெற்கு வீதி தஞ்சாவூர் கடம்திருநாராயண பிள்ளை சிக்கல்.

டோலக்

திரு. வேணுசெட்டியார், சக்கிதரபாணி சந்நிதி கும்பகோணம்.

நாதசுரம்

1. ராஜரெத்தினம் பிள்ளை, திருவாவடுதுறை, 2.வீறாசாமி பிள்ளை, திருவிடைமருதூர், 3.சின்னதம்பி பிள்ளை சகோதரர்கள், கீரனூர் 4.சுப்பிரமணியம் சகோதரர்கள், திருவீழிமழலை, புந்தோட்டம் 5. அங்கப்ப பிள்ளை, பெரம்பலூர் 6.சுப்பிரமணிய பிள்ளை, திருவெண்காடு 7.சே.கோவிந்தசாமி பிள்ளை சகோதரர்கள், மாயவரம் 8. வைத்தியநாத பிள்ளை, சிதம்பரம் 9. நடேச பிள்ளை, திருச்சி 10. பழனிசாமி பிள்ளை, புதுக்கோட்டை 11.பஞ்சாபகேச பிள்ளை 12.சுந்தரேச பிள்ளை, லால்குடி, (ஞ.டீ), திருச்சி 13.வேலுபிள்ளை ஐயம்பேட்டை, தஞ்சாவூர் 14. சுப்பையா பிள்ளை, பெருமாள் சந்நிதி, ஸ்ரீரங்கம் 16. முத்துக்குமாரசாமி பிரதர்ஸ், திருக்குவளை.
கொன்னக்கோல்
திரு.பக்கிரியா பிள்ளை, ராஜவீதி, மன்னார்குடி.

வீணை

1. ஸ்ரீமதி சரஸ்வதி அம்மாள் மேலைக்கோபுரவாசல்-மதுரை, 2. ஸ்ரீமதி தனம்மாள், 27. ராமகிருஷ்ணன் தெரு, சென்னை 3. திரு.டி.லெஷ்மண் பிள்ளை, திருவனந்தபுரம். என்று இப்படி யார் யார் எதில் வித்வான்களோ பார்ப்பனரல்லாதார் அவ்வளவு பேரையும் ஒரு கேட் லாக் மாதிரி அய்யா அவர்கள் போட்டி ருக்கின்றார்.

சுயமரியாதை இயக்கம் இதைத்தான் செய்தது

சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்களே இதைத்தான் சுயமரியாதை இயக்கம் செய்தது. பார்ப்பனரல்லாத மக்களுக்கு நல்வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தது. இன்றைய இளைய தலைமுறையினர் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
ஏனென்றால் இன்றைய தலைமுறையினர் என்ன நினைக்கிறார்கள் என்றால் பார்ப்பனர்களைப் பற்றிப் பேச இப்பொழுது என்ன இருக்கிறது? இன்றைக்கு யார் இருக்கிறார்கள் பார்ப்பனரல்லா தார் வந்துவிட்டார்களே என்று சொல்லு கின்றார்கள்.

கொஞ்சம் அசந்தால் நொடிப் பொழுதில் மாறிவிடும்

இந்த நிலை ஒரு நொடிப்பொழுதில் மாறிவிடும். இப்பொழுது சமச்சீர் கல்வியிலிருந்து எல்லா வற்றையும்பார்த்தோம் அல்லவா? கொஞ்சம் அசதியாக இருந்தால் மறுபடியும் குலக்கல்வித் திட்டம் வந்துவிடும்.

இவை அத்தனையும் கண்மூடி கண் திறப் பதற்குள் பழைய நிலைக்கு வந்துவிடு. அதற்கு ஆதிக்க சக்திகள், ஊடகங்கள் தயாராக இருக் கின்றன. அதற்காக அவர்கள் இஷ்டத்திற்கு அறிவியல் விஞ்ஞானத்தையே பயன்படுத்து கின்றார்கள். நம்மாட்களும் அதற்கு பலிகடாவாக ஆகிறார்கள். தமிழர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள்.

கம்பனுக்கு விழாவா?

கம்பன் விழாவை யார் நடத்துகிறார்கள்? பார்ப்பனர்கள் நடத்துவதில்லையே. கம்பன் கழகத்தை யார் நடத்துகிறார்கள்? எத்தனை பேர் புலவர் குழந்தையைப் பாராட்டுகிறார்கள்.

இராவண காவியத்தை அல்லவா பாராட்ட வேண்டும்

இலக்கியத்திற்காக ஒருவன் பாராட்ட வேண்டும் என்றால் இவர்கள் கம்பனை எவ்வளவு பாராட்டு கிறார்களோ அதற்குமேல் புலவர் குழந்தையையும் அவரது இராவணகாவியத்தையும் பாராட்ட வேண்டுமா இல்லையா? (கைதட்டல்). நம் எதிரே பேசட்டுமே. நமது புலவர்களை விட்டு வாதிடுவோம். கம்பராமாயணத்தைவிட புலவர் குழந;தை அற்புதமாகப் பாடியிருக் கின்றாரே. அவர் தன்மானத்தை உண்டாக்கப் பாடியிருக்கின்றார்.

ஆகவே, நண்பர்களே இந்த செய்திகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நாம் சொன்னோம். ஒன்று தெரிகிறது. இந்த சொற் பொழிவுகள் மூன்று நாளைக்குள் முடியுமா என்பது சந்தேகம். அங்கங்கே தொட்டுக்காட்டியிருக் கின்றோம்.
 
மற்றவர்களை பெரியார் எப்படி பாராட்டியிருக்கிறார்

அண்ணா அவர்கள் எவ்வளவு பெரிய புரட்சியை உண்டாக்கினார். நடிகவேள் ராதா எவ்வளவு பெரிய புரட்சியை உருவாக்கியிருக்கிறார் என்பதைச் சொல்லுவோம். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி ஆகியோ ருக்கு இந்த இயக்கம் எவ்வளவு ஆதரவு காட்டியது. இசை அரசு, தண்டபாணி தேசிகர், இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் இவர்களை எல்லாம் பெரியார் பாராட்டியிருக்கின்றார். ஆச்சரியமாக இருக்கும்.

வைதீகப் பாட்டைத் தானே பாடினார்கள் என்பதற்காக பெரியார் யாரையும் வெறுத்ததில்லை. மதுரை சோமசுந்தரம் போன்றவர்களைப் பாராட்டியிருக்கின்றார்.

நம் மக்களைத் தூக்கி நிறுத்த ஆசைப்பட்டார்

அய்யா அவர்களுக்கு என்ன கவலை? பார்ப் பனரல்லாத மக்கள், திராவிடர்கள், தமிழர்கள் எல்லா துறைகளிலும் தன்மானம் பெற்று உரிமை பெற வேண்டும் என்று விரும்பினார். தகுதி இருந்து, திறமை இருந்து ஆற்றல் இருந்து தன்மானத்தை இழந்திருக்கிறார்களே இவர்களை எல்லாம் தன்மானத்தோடு தூக்கி நிறுத்த வேண்டும் என்று அய்யா அவர்கள் நினைத்தார்கள்.
 
ஆகவே பெரியாருடைய கண்ணோட்டம் சுயமரியாதைக்கண்ணோட்டம்தான் என்பதை எடுத்துச் சொல்லி நாளை உரை தொடரும், இன்றைக்கு மழையையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு பேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்தமைக்காக நன்றியைக் கூறி விடைபெறுகிறேன்.
 
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...