உலகம் ஒப்புக் கொண்ட ஒப்பற்ற சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்கள் ஒருமுறை சொன்னார்:
மக்களில் பலர் சூழ்நிலைகள் தங்களுக்கு வாய்ப்பாக அமையவில்லை என்றே குறைபட்டுக் கொள்கின்றார்கள். எனக்கு அப்படிப்பட்ட எண்ணம் - அதாவது சூழ்நிலைகள் சரிவர அமைய வில்லை என்ற எண்ணம் எப்போதும் ஏற்பட்டதே இல்லை.
இந்த உலகில் வாழ்க்கையில் வெற்றி பெற்று பெரும் சாதனையாளர்களாகத் திகழும் பலரும் அந்த சூழ்நிலையைப் பற்றிக் கவலைப் படாது, தங்களது அரிய திடசித்தத் தாலேயே முன்னேறிச் செல்பவர்களாக, வீறுகொண்டு எழுந்து நிற்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களே அச்சந்தர்ப்ப சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு உயருபவர்களாக இருக்கிறார்கள்.
வாய்ப்பான சூழ்நிலைக்காக ஏங்கித் தவம் கிடக்காமல் அவர்களே அத் தகைய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலாளர்களாக இருக் கிறார்கள்
- இதைவிட அருமையான அறிவுரை வாழ்வியலில் முன்னேற விரும்பும் எவருக்காவது கிடைக்குமா?
பல்வகை ஆற்றல், திறமைகள் நம்மில் பலருக்குள்ளும் ஒளிந்து கொண்டு இருக்கவே செய்கின்றன. ஆனால் தயக் கம், கூச்சம், அச்சம் கலந்த வெட்கம்!
இவை குறுக்கே வந்து நின்று நம் உயர்வைத் தடுக்கும் முட்டுக்கட்டை களாகி விடுகின்றன!
தாமஸ் ஆல்வா எடிசன் பரிசோ தனைக் கூடத்தில் சுமார் 1800 முறை தோல்விகளைத் தழுவி இருக்கிறார் என்ற போதிலும், அவர் ஒருபோதும் மனம் உடைந்ததுமில்லை; தன் ஆராய்ச்சி இலக்கு நோக்கிய பயணத்தில் அயர்ந்தது மில்லை. ஒவ்வொரு தோல்வியையும் அவர் ஒருவகை அனுபவமாகக் கருதினார்; பிறகு உலகம் வியந்து பாராட்டும் விஞ்ஞான வித்தகராகி, சாதனைச் சரித்திரத்தை உருவாக்கி விட்டார்!
ஏன் வெளிநாட்டிற்கே பறந்து சென்று மேதைகளை - உழைப்பால் உயர்ந்து வெற்றி பெற்று உத்தமர்களைத் தேடிட வேண்டும். இதோ நம் மண்ணிலேயே, நம் கண்ணுக்கு எதிராகவே, ஏன் - நம்மால் உருவாகியவர்கள் ஏராளம் உண்டு.
அத்தகைய தொழில் வணிகர்களில், ஒருவரான செவாலியே, கலைமாமணி வி.ஜி.பி. தொழில் குழுமத்தின் முக்கிய தலைவரான டாக்டர் வி.ஜி. சந்தோஷம் அவர்களையே ஒரு நல்ல எடுத்துக் காட்டாகச் சுட்டிக் காட்டலாமே!
15.8.2011 அன்று சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலேயே அமைந்துள்ள தங்கக் கடற்கரையாகிய அவர்கள் விசாலமான திடலில், நீலத் திரைக் கடல் ஓரத்தில் அமைந்திருந்த அருமையான பந்தல் மேடை - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பல தரப்பட்ட சமூகங்களின் சங்கமமாக நடைபெற்ற அவரது 75ஆம் ஆண்டு பிறந்த நாள் பவள விழாவின் போது, இறுதியில் பாராட்டுகளுக்குப் பதிலுரைகூறிய டாக்டர் வி.ஜி. சந்தோஷத் தின் உரை உருக்கத்தோடு அமைந்த உரை முத்தாய்ப்பானது!
தென் கோடியில் ஒரு சிற்றூரிலிருந்து படிக்க வேண்டுமென்ற கொள்ளை ஆசை இருந்தும் - மலேசியாவிலிருந்து - 2ஆம் உலகப் போரின் விளைவாக ஏதோ பிழைத்தோம் வந்தோம் என்று எளிய நிலையில் சொந்த மண்ணுக்கு வந்த குடும்பத்தின் பிள்ளைகளான வி.ஜி. பன்னீர் தாஸ், அண்ணாச்சி அவர்களும் வி.ஜி. சந்தோஷம் அவர்களும் (பிறகு இளையவர் வி.ஜி. செல்வராஜ் அவர்களும்), அவரது சகோதரிகளும் வந்து ஜீவனம் நடத்துகையில்,
அவர்களது அருமைத் தாயார், சந்தனமேரி அம்மாள் எல்லாம் சேர்ந்து எப்படி அவருக்கு ஒரு சிறு முதலீடு தந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் என்பதைக் கேட்ட போதும், கடனைத் தந்துவிட்டு எஞ்சியதைத் தந்து ஆசி வழங்கி அனுப்பினார் என்பது பற்றியும் அவர் கூறியதைக் கேட்டு கூடியிருந்தவர்கள் கண்கள் பனித்தன. அதே கண்ணீர்த் துளிகள் பின்னாளில் வியர்வைத் துளிகளாகி, அதன் வெளிச் சத்தில் வெற்றி தெரிந்து கண்ணீர்த் துளிகளாக மீண்டும் வழிந்தன - ஆனால் இப்போது அந்த கண்ணீர்த் துளிகள் மகிழ்ச்சி - சந்தோஷ அருவிகளாகிக் கொட்டின!
அவர் கூறியதன் ஒரு சிறு பகுதி இதோ:
ஊரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு செலவாகும் பேருந்துக் கட்டணம் ரூ.4.50 கூட அப்போது எங்களிடம் இல்லை. வீட்டை ரூ.800-க்கு விற்று, கடன் தொகை ரூ.500அய் செலுத்திவிட்டு இங்கு வி.ஜி.பன்னீர்தாசுடன் வந்தோம். தினத்தந்தி பேப்பரை வீடுவீடாகப் போட்டேன். சுலபத் தவணையில் பொருள்கள் வாங்குவது பற்றிய போஸ்டர் களை இரவு நேரத்தில் ஆங்காங்கு ஒட்டிவிட்டு வருவேன்.
இன்று எனக்கே நீண்ட தூரத் துக்கு சாலை ஓரங்களில் எனது பிள்ளைகள் வைத்திருக்கும் போஸ் டரை வியந்து பார்த்தேன். புழுதியில் கிடந்த எங்களை இந்த அளவுக்கு உயர்த்தியது உழைப்புதான்.
ஆண் பிள்ளைகள் அனைவரும் ஒரே குடும்பத்தில்தான் வசிக்க வேண்டும் என்ற தாயின் கட்ட ளையை ஏற்று இன்னும் நாங்கள் கடைபிடித்து வருவது, நாங்கள் பெற்ற வெற்றிக்கு மற்றொரு காரணம்.
இளைஞர்களே இத்தகையவர் களையே நீங்கள் பின்பற்றும் (ரோல் மாடல்களாக) முன் உதாரணங்களாக - உழைக்கச் சலிக்காதவர்களாக - நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை மறக்காதவர்களாகவே வாழுங்கள் - வளம் உங்கள் வசமாவது உறுதி!

No comments:
Post a Comment