Sunday, August 28, 2011

ஆன்மீகமே ஆபாசமே!


தன் மனைவியின் முகத்தை எவனாவது ஒருவன் தவறான எண்ணத்தோடு நோக்கினாலே அவனது கன்னத்தில் பளீரென அறை வான், இது மனித இயல்பு, மான உணர்வு.

பலகாலம் தன்னோடு அன்புடன் இல்லறம் நடத்தி வாழ்ந்துவரும் மனைவியை, வந்து கேட்டால் ஒரு வேதியன் கேட்டால் கையில் பிடித்துக் கொடுப்பவனை எந்த ரகத்தில் சேர்ப்பது? இந்த ஈனச்செயலை பக்தி யின் பேரால் செய்தவன் இயற்பகை என்பவர்.இந்த சாமிக்குத்தான் கோயில்களில் நாள், நட்சத்திரம், திரு விழா, பூசை, புனஸ்காரம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது  என்றால் இந்தக் கோயில்களின் தத்துவம் தான் என்ன? நடத்துபவர்கள் இந்த ஒழுக்கக்கேட்டை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதா?

இயற்பகை, புகார்நகரில் சிறந்த வணிகர்.செல்வாக்கு உள்ளவன். சிவபக்தியிலே பழம்.உயர்ந்த மனைவி சிறப்பான இல்லறம்.இவர்களுக்கு ஒரு கொள்கை சிவனடியார் என்று யார் வந்தாலும், எதைக் கேட்டாலும் இல்லை என்னாவது போற்றி வழங்கும் இயற்பகை.காவி வேடத்திற்கு அந்த அளவு மரியாதை?

ஒருநாள் வேதியன் ஒருவன் வந்தான். நீ எது கேட்டாலும் மறுப்ப தில்லை யாமே என்றான். அதற்கு இயற்பகை. யாது ஒன்றும் என்பக்கல் உண்டாகில் அன்ன தெம்பிரான் அடியவர் உடைமைஎன்றான்.உன் மனைவி தான் எனக்கு வேண்டும் என்றான் வேதியன்.
அவ்வளவுதான் சொன்னசொல் தவறாத பக்திப்புயல். மறு பேச்சில்லை. மனைவியை கருத்துக் கேட்கவில்லை. மனைவியின் கையைப்பிடித்து வேதிய னிடம் ஒப்புவித்தான். மனம் தவித்த அந்தப் பெண், மதுமலர்க் குழலனையாள் கலங்கி மனம் தெளிந்து மற்றிது மொழி வாள். நீர் உரைத்த தொன்றை நான் செய்யும் அத்தனை அல்லால் உரிமை வேறுஉளதோ?எனக்கு என்று கணவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டாள்.பெண்ணுக்கு உரிமை இல்லையே மறுப்பதற்கு என்று சொல்லுகிறாள்.

திருக்குறள் ஒற்றாடல் அதிகாரத்தில் யாரும் அய்யுறாத வடிவானவர் பார்ப்பார் என்று பரிமேலழகர் பொருள் கூறுவார்.இதனால் காவி உடையிலே வேதிய பார்ப்பனர் மறைந்து வந்தால் அய்யப்படுவரோ?

வணிகன், வேதியனை நோக்கி வேறேன்ன செய்ய வேண்டும் என்றார். சாதி வேதியராகிய வந்த தலைவர் பெண்ணோடு தனியே சென்றால், உன் உறவினர் எதிர்ப்பார்கள். நீயும் துணைக்கு வா என்றார்.

உடனே வாளினை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் வணிகன். எதிர்த்தவர், தடுத்தவர், உறவினரை வெட்டிச் சாய்த்தான்.

சொரிந்தன குடல்கள் எங்கும். துணிந்தன உடல்கள் எங்கும். விரிந்தன தலைகள் எங்கும், மிடைந்தன சுமுகம் எங்கும், எரிந்தன வழிகள் எங்கும், எதிர்ப்பவர் ஒருவர்இன்றி திரிந்தனர் களனில் எங்கும்?

வேதியனையும் மனைவியையும் எல்லைதாண்டி விட்டுவிட்டு திரும்பி னான் வணிகன். சற்று நேரத்தில் வேதியன் அலறினான். பெண் திரும்பி வந்து கொண்டிருந்தாள்.என்ன நடந்ததோ? வேதியன் குடும்பம் நடத்தவா கூப்பிட்டுப் போனான்? இந்தப் பக்திக் கதை மக்களுக்கு என்ன ஒழுக்கத்தைச் சொல்கிறது? இப்படிப் பட்ட கதைகளைத்தான் புராணங்கள் பரப்புகின்றன.

பக்திவந்தால் புத்திபோகும் என்றார் அறிவுஆசான் தந்தை பெரியார் அவர்கள். புத்தி என்பது.பலபொருள் ஒருசொல்.அறிவு, மானம், ஈனம், வெட்கம், அவமானம், அசிங்கம், இப் படிச் சொல்லலாம். பக்தி தன்நம்பிக் கையை அழிக்கும். ஒரு போதை அது வந்தால் இவை எல்லாம் மறந்து, துறந்து, இழிந்து, இழந்து போவார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் புராணங்களை வெறுத்து ஒதுக்கியதற்கு காரணமே அவைகளால் சமூக ஒழுக்கக் கேடு நிலை நிறுத்தப்படுகிறது. சமூகத்தை சீரழிக்கும் மூடநம்பிக்கை கள், மனித வாழ்வை புற்றுநோயாய் அரித்து வருகிறது, தன்நம்பிக்கையை அழித்து பயத்தை ஊட்டுகிறது என்பதாலேயே.

பக்தி என்பதின் மயக்கத்தில் இருக் கும் ஆன்மீகத் திரையை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் அங்கே இருப்பது ஆபாசமே.ஆபாசமே ஆன்மீகம், ஆன்மீகமே ஆபாசம்.
சேக்கிழான் சென்னை - 81

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...