Friday, August 5, 2011

வடகிழக்கு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே கிடையாதாம்!



மத்திய மனிதவள அமைச்சகமான கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மசோதாவில், வடகிழக்கு மாகாணங்களில் OBC என்ற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நீக்கப் பட்டுள்ளது. அங்கே OBC பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றால், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் பிரிந்து சென்று விட்டதாக, மத்திய கல்வி அமைச்சகம் கருதுகிறதா?
இது சரியான தகவலாக இருப்பின் இது வன்மையான கண்டனத்திற்குரியதே!
சமூக நீதி, இட ஒதுக்கீடு இந்தியா முழுவதற்கும்தான். இந்திய அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் இப்படி ஒரு நிலைப்பாடு எடுப்பது தவறான சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?
வடகிழக்கு மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டுவதால், அதனைச் சரி செய்ய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அறவே நீக்கி விடுகிறார்களாம். இது ஓர் ஆபத்தான ஆரம்பமாகும்; முளையிலேயே இது கிள்ளி எறியப்படவேண்டும்.
உடனடியாக சமூக நீதிக்கான அனைத்து அமைப்புகளும், இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன் வரிசையில் நின்று இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...