Thursday, August 18, 2011

விடுதலை செய்திகள் 18-08-2011

அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்! கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப் போராடுவோம்!


இந்தியா முழுமையும் ஒரே பாடத் திட்டமா?
பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் உள்ள இந்தியாவில் ஒரே மாதிரியான கல்வி என்பது கூடாத ஒன்று!
வடமொழி -இந்தியக் கலாச்சாரத்தைத் திணிக்கும் சூழ்ச்சி?

தமிழர் தலைவர் கி.வீரமணி மிக முக்கிய அறிக்கை


அகில இந்திய ரீதியில் ஒரே மாதிரியான பாடத் திட்டம் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்பு - ஆபத்தானது, வடமொழி, இந்திக் கலாச்சாரத்தைத் திணிக்கக் கூடியதாகும். மாநில உரிமைகளிலும் தலையிடுவதாகும். இதனை எதிர்க்க அனைத்து மாநில முதலமைச்சர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஒன்று திரண்டு எழவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாரு, பாரு, லீலா வினோதம் பாரு!


சென்னையில் ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் இரண்டாவது ஜெயந்தி வெற்றி விழா இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவைத் தொடங்கி வைத்து தினமலர் வெளி யீட்டாளர் திருவாளர் ஆர். லட்சுமிபதி பேசியுள் ளார்.

வரும் 5 ஆண்டுகளில் 23,140 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும்
சட்டமன்றத்தில் மின்சாரத் துறை அமைச்சர் அறிவிப்பு




சென்னை, ஆக. 18- ஒட்டுமொத்தமாக வரும் 5 ஆண்டுகளில் 23,140 மெகா வாட் மின்சாரம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் என சட்ட மன்றத்தில் இன்று (18.8.2011) மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் அறி வித்தார்.
அறிவாயுதம் ஏந்தும் ஆயிரம் பேர் கொண்ட பகுத்தறிவுப் பாசறை உருவாக்கப்படும்!


நாகை திராவிடர் மாணவர் கழக இன எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு

நாகை, ஆக. 18- அறிவாயுதம் ஏந்தும் ஆயிரம் பேர் கொண்ட பகுத்தறிவு பாசறை உருவாக்கப்படும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நாகையில் 13.8.2011 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக இனஎழுச்சி மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
திருவனந்தபுரம், ஆக. 18- திருவனந்தபுரம் பத்ம நாப சாமி கோவிலில் அதி நவீன பாதுகாப்பு ஏற்படுத்துவது பற்றிய திட்டத்துக்கு அடுத்த வாரத்தில் இறுதி வடி வம் கொடுத்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

பிரசித்திபெற்ற திரு வனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகள் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி திறந்து பார்க்கப்பட் டது. அப்போது அந்த அறைகளுக்குள் ரூ. ஒன் றரை லட்சம் கோடிக்கு அதிகமான அரிய பொற் குவியல் இருப்பது தெரிய வந்தது.

தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடி கழகம் நடத்திய 19ஆம் ஆண்டு மாநில கபாடி போட்டி ஒட்டன்சத்திரம் பெண்கள் அணியினர் முதலிடம்


ஒக்கநாடு மேலையூர், ஆக. 18- உரத்தநாடு ஒன்றி யம், ஒக்கநாடு மேலையூரில் பெரியார் வீர விளை யாட்டுக் கழகம் சார்பில் கோவி. ரங்கேஷ்குமார் நினைவாக தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடி கழகம் நடத்திய 19ஆம் ஆண்டு மாநில கபாடி போட்டி இரண்டு நாள்கள் நடைபெற்றது.

கூத்தங்குடி அழகு இராமானுஜனும் அண்ணா தின்ற அப்பளமும்!


கடந்த 13ஆம் தேதி (ஆகஸ்ட் 2011) காலை நான் மறைந்து விட்ட பல பொது நலத் தோழர்கள், பிரமுகர்கள், கழக வீரர்கள் இல்லத்திற்குச் சென்று அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, நானும் வாழ்விணையரும், தோழர் களும் திரும்பினோம்.

இந்தியாவின் ராஜபக்சே நரேந்திரமோடி சிக்குவாரா?

2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நர வேட்டை நரேந்திரமோடி - தனது ஆட்சி அதிகாரத் தின் முழுபலம் கொண்டு சிறுபான்மை மக்களைக் கொத்துக் கொத்தாக வேட்டையாடித் தாகம் தீர்த்தார். புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் ராஜபக்சே என்றே வைத்துக் கொள்ளலாம்.

சிறுபான்மை மக்களின் வணிக நிறுவனங்கள் எல்லாம் கொடிய தீயின் நாக்குக்கு ருசியாகின.

கர்ப்பிணிப் பெண்கள்கூட இந்தக் காட்டு மிராண்டிகளின் கத்திக் குத்துகளுக்குத் தப்பவில்லை.

ஒன்பதாண்டுகள் உருண்டோடி ஓய்ந்து விட்டன. இன்னும் இந்தப் படுகொலைபற்றி விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

இலங்கையில் துறைமுகம் அமைக்கிறது சீனா

கொழும்பு, ஆக.18- ரூ.2,270 கோடி செலவில் இலங்கையில் பெரிய அளவி லான துறைமு கத்தை சீனா அமைக்க வுள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை இலங்கை நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் சீனாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சென்று வந்தார். அப்போது இது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையொப்ப மானதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளது: இலங்கையில், சீனா சமீபத்தில் செய்துள்ள மிகப் பெரிய முதலீடாகும் இது.





No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...