சீதை நெருப்பில் இறங்கி வந்துகூட, ராம னுக்கு அவள்மீது உள்ள சந்தேகம் தீராமல் போய்விட்டது. கடைசியாக, கதையின் முடி வானது சீதை 5 மாத கர்ப்பத்துடன் தனியே காட்டிற்குக் கொண்டுபோய் விடப்பட்டாள் என்று முடிந்தது.
இந்தக் காரியம் எப்படி மன்னிக்கப்படக் கூடியது என்பது விளங்கவில்லை. உலக ஒப்புதலுக்காகச் செய்யப்பட்டது என்றாலும், இந்தச் சம்பவத்தால் மக்களுக்கு என்ன நீதி, படிப்பினை ஏற்பட்டு விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.
இதைப் பார்க்கின்றபோது அதாவது, தனது மனைவியை 5 மாத கர்ப்பத்துடன் துஷ்ட ஜந்துக்கள் வாழும் கானகத்தில் கொண்டுபோய் தனியே விட்டு வரும்படிச் செய்தவன், தாடகையைக் கொன்றதும், சூர்ப்பனகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படிச்செய்ததும் ஓர் ஆச்சரியமென்று சொல்லமுடியாது.
ஆகவே, ராமன் ஆண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு வாலி, ராவணன் வதையும், சுக்ரீவன், விபீசணன் நேசமும், ராமன் பெண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு தாடகை வதம், சூர்ப்பனகை பங்கம், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டது முதலியவையும் தக்க அத்தாட்சிகளாகும்.
No comments:
Post a Comment