தோழர்களே! நான் கூறுகிறேன்! சாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும், பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்தத் தமிழனும் போகக் கூடாது.
சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக் கின்றது. எப்படி நாம் பார்ப்பானை தொடக்கூடாதோ அதுபோல சாமியையும் தொடக் கூடாது. எப்படி பார்ப்பான் சாதியில் உயர்ந்தவனோ அது போல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கின்றான். கடவுளும் போட்டிருக்கிறது. பார்ப்பானுக்கும் உச்சிக்குடுமி. கடவுளுக்கும் உச்சிக்குடுமி. பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ணமாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்பது கிடையாது. பார்ப்பானும் நம் கண்முன் உண்ணாமல் மறைவாக உண்பான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும் பஞ்சகச்சம். பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள், கடவுளச்சியும் அப்படியே கட்டுகின்றாள். பார்ப்பான் வீட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதுபோல் கடவுள் கோயிலுக்குள் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள் , கடவுளும் பார்ப்பானும் அழிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களை கேட்கின்றேன்; பக்திமான்களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்; அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாக கூறி பெண்டாட்டியும், பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக் கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள் ளைக்காரனும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவதுபோல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது?
எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும், மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப்படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது? இவற்றிலிருந்து கடவுளோ, கடவுள் தன்மையோ இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்பதுவும் அத்தனையும் பித்த லாட்டமென்பதுவும் புலனாகவில்லையா?
No comments:
Post a Comment