Tuesday, January 4, 2011

பெரியார் நூல்களை மற்றவர்கள் வெளியிடக்கூடாதா?

செய்தியாளர்: பெரியார் கருத்துகள் பரவிட பெரியார் நூல்களை மற்றவர்கள் வெளியிடக்கூடாதா?

பதில்: யாரும் வெளியிடக்கூடாது என்று நாங்கள் எப்பொழுதும் சொல்ல வில்லை. தவறாகப் பிரச்சாரம் செய்யக் கூடாது.

நூலை வெளியிடும் முன் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம். அதேபோல அனுமதி பெற்று வெளியிட்டுக் கொண்டு மிருக்கிறார்கள்.

ஏன் அனுமதி பெறவேண்டும் என்று சொல்லுகிறோம்? பெரியார் கருத்துகள் என்று அதில் திரிபு வாதம் வந்து விடக் கூடாதல்லவா?

புத்தருக்குப் பின்னாலே புத்தரின் பெயரைச் சொல்லி புத்த ஜாதகக் கதைகள் வந்துவிடவில்லையா?

யார் வெளியிடுவதாக இருந்தாலும் அதனை எங்களிடம் அனுப்பி வைக்கட்டும். அதனைச் சரி பார்த்து அனுமதி வழங்கப்படும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. இதற்கு மாறாகப் பிரச்சாரம் செய்வது தவறு.


- செய்தியாளர்கள் கூட்டத்தில்
திராவிடர் கழகத் தலைவர் (4.1.2011)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...