முதல் அமைச்சர் கலைஞரின் பகுத்தறிவு - இனமான உரை
தமிழர்களுக்குரிய ஆண்டு தை முதல் நாள் தொடங்குகிறது. பிரபல, விபவ, சுக்ல என்று கூறும் வடமொழி சமஸ்கிருதப் பெயர்கள் நமக்கு வேண் டாம் என்றார் முதல மைச்சர் கலைஞர்.
சென்னை பல்லா வரத்தில் நேற்று தமிழர் திருநாளான சர்க்கரைப் பொங்களுக்கான பொருள்கள் மற்றும் இலவச வேட்டி, சேலை கள் வழங்கும் விழாவில் பங்கேற்று முதல் அமைச்சர் கலைஞர் இனமான - பகுத்தறிவுப் பேருரையை நிகழ்த்தி னார். உரை வருமாறு: இன்றையதினம் இனிய நாள்; இனிப்பான நாள். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக் கான பொருள்களை இலவசமாக வழங்கும் விழா. தமிழர்கள் தங்க ளுடைய மொழியை, கலையை, நாகரிகத்தை, இனச் செழுமையை எண்ணிப் பார்த்து பூரிப் படைகிற நாள்; பொங் கல் திருநாள். இந்தப் பொங்கல் திருநாளை தமிழர் திருநாள் என்று நாம் கொண் டாடுகின்றோம். நாம் என்றால் - இன்றைக்குக் கொண்டாடுகின்ற திரா விட முன்னேற்றக் கழ கத்தைச் சார்ந்த நாம் அல்ல. நமக்கு முன்பே, நம்முடைய இன உணர் வுக்கு மெருகேற்றிய, இன உணர்வுத் தீப்பந்தத்தை ஓங்கிப் பிடித்த மறை மலையடிகளார் போன் றவர்கள், திரு.வி.க. போன்றவர்கள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள், நமச்சி வாயனார் போன்றவர் கள் - இத்தகைய தமிழ்ப் பெரியோர்கள், சான் றோர்கள், ஆன்றோர் கள் எல்லாம் ஒன்று கூடி, எல்லா மொழிக் காரர்களுக்கும் ஒரு ஆண்டுக் கணக்கு இருக்கின்றது.
ஆனால் தமிழர் களாகிய நமக்கு அந்த ஆண்டுக் கணக்கில் லையே என்று வருந்தி, அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ள - உண்மையை அறிய - இதுதான் தமிழ் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு என் பதைக் கண்டுபிடிக்க 500 புலவர்கள் ஆய்வு நடத்தி அந்த 500 பேரும் எடுத்த முடிவு தான் தமி ழனுக்கு ஒரு ஆண்டுப் பிறப்பு நாள் என்று உண்டு, அதுதான் தைத் திங்கள் முதல் நாள் (கை தட்டல்) - அந்த தைத் திங்கள் முதல் நாளில் அவனுடைய ஆண்டு தொடங்குகிறது என்று நாம் முடிவு செய்வோ மென்று அறிவித்தார் கள். அனைத்துலகத்திலும் ஆங்கில மொழி ஆதிக் கத்தால் ஏற்றுக் கொள் ளப்பட்டு வழக்கத்திற்கு வந்து விட்ட ஆங்கில மொழிக் கணக்கு ஆண்டு முதல் நாள் என்று ஏற் றுக் கொள்ளப்பட்டிருந் தாலுங்கூட, இன்றள வும் தெலுங்கு வருடப் பிறப்பு, மலையாள வரு டப் பிறப்பு, இந்திக் காரர்களுக்கான வருடப் பிறப்பு, கன்னடியர்களுக் கான வருடப் பிறப்பு என்றிருப்பதைப் போல, தமிழர்களுக்கான வருடப் பிறப்பு என்பது சித்திரை, வைகாசி என்று தொடங்கினா லும் - அந்த வருடங் கள், எந்த வருடங்கள் என்று கணக்கிட முடி யாமல் ஒரு குழப்பத்தில் வந்து முடிகின்ற கணக் காகத்தான் தமிழர் களின் கணக்கு இருந்து வருகிறது.
தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத் தாண்டு என்று பெரிய ஆய்வு நடத்தி அறிவித்து அதனை தந்தை பெரி யாரும், பேரறிஞர் அண் ணாவும் பின்பற்றி, இன் றைக்கு தமிழர் திரு நாளை நாம் கொண் டாடுகிறோம். இந்தப் பொங்கல் திருநாளை நீங்கள் பஞ்சாங்கத்தில் எடுத்துப் பார்த்தால் என்ன குறிப்பிடப்பட் டிருக்கும் தெரியுமா? மகர சங்கராந்தி என்று குறிப்பிட்டிருப் பார்கள். நம்முடைய ஜெகத்ரட்சகனைக் கேட் டால் தெரியும். பஞ்சாங் கத்தைப் பார்க்கக் கூடிய வர் அவர். ஒரு மஞ்சள் தாள் அட்டையுடன் பஞ்சாங்கம் இருக்கும். அதில் ஒரு பாம்பு படம் இருக்கும். அந்தப் பக் கத்தில் மகர சங்கராந்தி என்றிருக்கும். அதைப் படித்துப் பார்த்தால் மகர சங்கராந்தி - ஸ்ரீ புருட உருவத்தோடு கைகளிலே வேல் ஏந்தி, சூலம் ஏந்தி - எருமை வாகனத்தில் ஏறிக் கொண்டு இந்த ஆண்டு வருகிறாள் - என்று போட்டிருக்கும்.
ஒவ் வொரு வருடமும் ஒவ் வொரு வாகனத்திலே வருவாள். ஒரு வருடம் எருமை யில் வருவாள், ஒரு வருடம் சிங்கத்திலே வருவாள், ஒரு வருடம் புலி மேலே ஏறி வரு வாள், மகர சங்கராந்தி இஷ்டப்பட்ட வாகனத் திலே ஏறி வருவாள். எப்படி நாம் பியட் கார், மோட்டார் சைக்கிள், சைக்கிள் என்றெல்லாம் வாகனங் களை மாற்றுகிறோமோ, அதைப் போல அவர்கள் வாகனத்தை மாற்றிக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் வருவார்கள். அப்படி வருகின்ற அந்த மகர சங்கராந்தியின் பலன்களை அந்தப் பஞ்சாங்கத்திலேயே போட்டிருப்பார்கள். நமக்கு இந்த வம்பு எல்லாம் வேண்டாம் என்பதற்காகத்தான் எப் படி தை மாதம் முதல் நாள் ஆண்டுக் கணக்கு தொடங்குகிறதோ, அப்படி தொடங்குவதை நம்பி, அப்படியே ஏற்றுக் கொண்டு தமிழர்களு டைய ஆண்டுக் கணக்கு வரிசைப்படி இருக்க வேண்டுமே தவிர, இடையிடையே மாறி மாறி தொல்லை கொடுக் கக் கூடாது, குழப்பத்தை விளைவிக்கக் கூடாது என்ற அளவில் அதை யேற்றுக் கொண்டிருக் கின்றோம்.
பகுத்தறிவாளர்கள் ஏற்பர்
அப்படி ஏற்றுக் கொண்ட நாள் தான் இந்த நாள். அதனால் தான் இதை தமிழர் திருநாள் என்று நாம் ஏற்கனவே அழைத்து - ஏறத்தாழ பகுத்தறிவா ளர்கள் அனைவராலும் இது ஒத்துக் கொள்ளப் பட்டு - பகுத்தறிவு பற்றிக் கவலைப்படாத வர்கள் சில பேரால் இன்றைக்கும் அது மறுக்கப்படலாம் - தமிழ்மொழியின் ஆர்வ லர்கள், தமிழ்மொழி வித்தகர்கள், தமிழ்ப் பெரும் புலவர்கள் அத் தனை பேராலும் ஏற்றுக் கொண்ட ஒன்றைத்தான் - நாமாக அல்ல - நம்முடைய மூதாதை யர், முன்னோர்கள், படித்த புலவர்கள், நம்மை ஆளாக்கிய வர்கள், நம்மை தமிழர் கள் என்று அடை யாளம் காட்டியவர்கள் - அவர்கள் அடை யாளம் காட்டியது தான் இந்த ஆண்டுக் கணக்கு. அந்த ஆண்டின் கணக் குப்படி தமிழர் திரு நாள் - தைத் திங்கள் முதல் நாள். ஆண்டுக் கணக்கிலே ஆங்கிலே யர்களுடைய முதல் நாளை அவர்கள் கொண் டாடுவது போல, ஆங் காங்கு விளக்குகளைத் தொங்க விட்டு - மின் மினி மின்னுவதைப் போல எல்லா மரங் களிலும் விளக்குகளைத் தொங்க விட்டு - கடை களின் முகப்புகளில் எல்லாம் அலங்காரம் செய்து, ஒவ்வொரு வீட் டிலும் எழில் குலுங்கச் சிங்காரித்து - இப்படி அவர்கள் செய்வதைப் போல நாமும் செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். ஏழையாக இருந்தால் செய்ய முடி யாது. ஏழையாக இருந் தால்கூட இரண்டு அகல் விளக்கையேற்றி வைக்க இயலாதவர் களாக இருக்க முடி யாது. எனவே அனை வரும் வரும் பொங்கல் திருநாளில் அவர்கள் வீட்டு முகப்புகளில் விளக்குகளையேற்றி வைக்க வேண்டும். அவர்களுக்கு வணிகத் தலங்கள் இருந்தால் அத்தனையிலும் சர விளக்குகளால் ஒளி உமிழச் செய்ய வேண் டும். அதைச் செய்தால் தான் நாம் தமிழர்கள் - தமிழ் நிலத்தை மதிப்ப வர்கள்- தமிழ்க் கலாச் சாரத்தைப் போற்றுப வர்கள் என்ற அடை யாளச் சின்னத்திற்கு உரியவர்களாவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலவசம்-கேலியா?
பொங்கலைக் கொண் டாடுகின்ற நாளில் ஒரு ஏழையினால் - நாம் கொண்டாடுகின்ற அளவிற்கு பொங்கல் விழா வையோ, தீபாவளி விழாவையோ, ஆயுத பூஜையையோ கொண் டாட முடியவில்லை என்பதை உணர்ந்த கார ணத்தால் தான் ஏழை களின் திருநாளாக இருக்கின்ற - நடுத்தர மக்களின் திருநாளாக இருக்கின்ற இந்த விழாவை அனைவரும் கொண்டாடுவோம் என்று பொங்கல் நாளில் நம்மால் இயன்ற அள விற்கு அனைவருக்கும் பொங்கலை வழங்கு வோம் என்று உறுதி யெடுத்துக் கொண்டு இந்த அரசு இரண்டு மூன்று ஆண்டுகளாக இந்தக் காரியத்தைச் செய்து வருகின்றது. அப்படிச் செய்கின்ற இந்தக் காரியத்திற்கு பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசிப் பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலக் காய் 20 கிராம் ஆகிய பொருள்களை இலவச மாக வழங்குகிறோம்.
இலவசம் என்பது ஒரு கேலிக்குரிய, இழி வான சொல்லாக இன் றைக்குச் சொல்லப்பட் டாலுங்கூட இதைச் சில பத்திரிகைக்காரர்கள் கருணாநிதி ஆட்சியில் எல்லாம் இலவசம், இல வசம், இலவசம் என் றெல்லாம் - இது என்ன பொருளாதாரம் - என்று கேலி செய்தாலுங்கூட - அவர்கள் பத்திரிகை களை எடுத்துப் பார்த் தால் - சில பத்திரிகை கள் சிறப்பு மலர் வெளி யிடும்போது - ஒரு இலவச இணைப்பு என்று வைக்கிறார்கள். (பலத்த கைதட்டல்) அந்த இலவச இணைப் பினால் கெடாத பொருளாதாரமா நாங்கள் இன உணர் வுக்காக வழங்குகின்ற இலவசத்தின் காரண மாக கெட்டு விடும் என்பதை தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டும்.
அரசியலாக்க வேண்டாம்!
இலவச இணைப்பை அவர்கள் வெளியிடு வார்களாம், நாம் இலவசமாக எதையும் தரக் கூடாதாம். இதிலே அவர்கள் இல வசத்தைக் கேலி செய்ய வில்லை. இந்த இயக் கத்தைக் கேலி செய் கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள். ஆனால் இந்த இயக்கம் ஏழை கள் உள்ள வரை - தமிழகத்திலே ஏழை கள் நடமாடுகின்ற வரை - அந்த ஏழை களுக்காக இலவசமாக எதையும் வழங்கும் என்பதை மாத்திரம் நான் சொல்லிக் கொள் கிறேன். அதைத்தான் நம்முடைய சகோதரி யசோதா அம்மையார் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் - என் னுடைய தலைமையில் நடைபெறுகின்ற இந்த ஆட்சியில் - ஒரு நாளைக்கு எத்தகைய நன்மைகளை ஏழை யெளிய மக்கள், சாதா ரண சாமான்ய மக்கள், பாட்டாளி மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை வரிசையாகச் சொன்னார்கள். பெண்களுக்குக் கர்ப்ப முற்றாலே 6 ஆயிரம் ரூபாய். அவர்கள் குழந் தைகளை வளர்க்க, அதற்கு ஆகும் செலவு - இவைகளையெல்லாம் இந்த அரசு தாயாக இருந்து கொடுத்து, அவர்களைப் பாதுகாக் கிறது என்பதை யெல் லாம் எடுத்துச் சொன் னார்கள். அவர் அப் படிப்பேசும் போது நான் தம்பி துரைமுரு கனைத் தான் எண்ணிக் கொண் டேன். தம்பிதுரை முருகன் பல கூட் டங் களில் - கழக ஆட் சியில் - ஏழையெளிய மக்க ளுடைய வீடுகளில் - காலையிலிருந்து, மாலை வரையில்-அவர்க ளுடைய வீட்டிற்குத் தேவையான - பொங் கலோ, சேலை யோ இவையெல்லாம் எப்படிக் கிடைக்கிறது என்பதை அவர் எடுத்துக் காட்டி, ஒரு குடும்பத் திலே வாழ் கின்ற அல்லது வாழ முடியாத - வாழ்க் கையை சலிப்பாகக் கருது கின்றவர்களுக் குக்கூட, அவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆட்சி யிலே நடைபெறுகின்ற நன்மைகளையெல்லாம் அவர் கூட்டங்களிலே தொகுத்துச் சொல்வார் என்று கேள்விப்பட் டேன்; அதை நாளிதழ் களில் படித்தும் இருக் கிறேன். இப்போது இங்கே துரைமுருகனே சேலை கட்டிக்கொண்டு, மேடையிலே அமர்ந்து பேசியதைப் போல, (சிரிப்பு) யசோதா அம்மையார் அவர்கள் நம்முடைய கழக ஆட்சியினுடைய திட்டங்களையெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அதை மிக அருமையாக வும் சொன்னார்கள் - சொல்வார்கள் - எதிர் காலத்திலும் அதைச் சொல்வார்கள். (சிரிப்பு) (பலத்த கைதட்டல்) ஏனென்றால், இன்று சொன்னதை நாளை மறந்து விடுவது சிலரு டைய பழக்கம் - குறிப்பா கப் பெண்களுக்கு அந்த மறதி இல்லை. அப்படி அதை மறந்து பேசினால், அவர்கள் பெண்களே அல்ல (கைதட்டல்). ஆகவே, இன்றைக்கு தாய் உள்ளத் தோடு இந்த அரசு செயல் படுகிறது என்று அவர் சொன்னதை, நாளைக்கும் சொல்வார் என்ற நம்பிக்கை எனக் கிருக்கிறது. இதை யாரும் அரசிய லாக்கி விடாதீர்கள் என்று பத்திரிகைகாரர் களை நான் கேட்டுக் கொள் கிறேன் (கைதட்டல்)
அவரைப் போன்று, இந்த அளவிற்கு அடுக் கடுக்காக இந்த ஆட்சியி னுடைய சாதனைகளை எடுத்துச் சொல்ல, திரா விட முன்னேற்றக் கழக மேடையிலேகூட அவ்வ ளவு தகுதி வாய்ந்த வர்கள் யாரும் இருப்ப தாக எனக் குத் தெரிய வில்லை. அம் மையார் அவர்கள் அந்த அள விற்கு இந்த ஆட்சி யினுடைய சாதனை களை எல்லாம் எடுத்துச் சொன் னார்கள். என்ன சாதனை? வேறு யாருக்கோ செய்கிற சாத னையா? அல்ல. அடித் தட்டு மக்கள், ஏழை யெளிய மக்கள், சாதா ரண மக்கள், சாமான்ய மக்கள் - அந்த மக்க ளுக்கு செய்கின்ற சாத னைகளைத்தான் இங்கே அவர் அடுக்கடுக் காகச் சொன்னார். அந்தச் சாதனைகளைச் செய் கின்ற இந்த அரசு - அந்தச் சாதனைகளிலே ஒன் றாகத்தான் பொங் கல் திருநாளை முன் னிட்டு, இல வச வேட்டி-சேலைகளை வழங்கு கிறது. வறுமைக் கோட் டிற்குக் கீழே இருப் பவர்களுக்கு, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, கிராமப்புறத்துக் கைவி னைஞர்களுக்கு, இலங் கைத் தமிழ் அகதி களுக்கு, முதியோர் உதவித் தொகை பெறு பவர்களுக்கு என்று அனைவருக்கும் இலவச வேட்டி-சேலைகள் வழங்கப் படுகின்றன. 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட திட்டம். அப்போ தும் கழக ஆட்சிதான். கழக ஆட்சியில்தான் இந்தத் திட்டம் தொடங் கப்பட்டது. இடையி டையே சிலர் இதை நிறுத்தி விட்டாலும் கூட, கழக ஆட்சி அதை மீண்டும் மீண்டும் தொடர்ந்த காரணத் தால்தான், இன்றைக்குத் இந்தத் திட்டம் தொடரு கிறது. இந்தத் திட்டம் இனியும் தொடர வேண்டுமேயானால், கழக ஆட்சி தொடர வேண்டும் என்பதை (கை தட்டல்) உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்த ஆண்டு மாத்திரம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 59 இலட் சத்து 4 ஆயிரம் சேலை களும், 1 கோடியே 58 இலட்சத்து 19 ஆயிரம் வேட்டிகளும், ஆக மொத்தம் 3 கோடியே 17 இலட்சத்து 23 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவ சமாக வழங்கப்படு கின்றன. இதற்கு ஆகும் செலவு 256 கோடி ரூபாய் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். வேட்டி-சேலை பெற்றுப்பயன்படுத்து கின்றவர்கள் மாத்திரம் இந்தத் திட் டத்தால் பயன் அடை வதில்லை. இதை நெய்து கொடுக் கின்றார்களே நெசவா ளர்கள், அவர்க ளுக்கும் இது பயன் படக்கூடிய ஒன்று. நெச வாளர் களுடைய துயர் துடைக்க - செந்தமிழ் நாட்டு வேட்டி-சேலை வாங்குவீர் என்று உடுமலை நாராயணகவி எழுதி, அதை ஊரெல் லாம் பாடி, அறிஞர் அண்ணா அவர்களும், நானும், கழகத்தினு டைய காவலர்களும், தோள்களிலே கைத்தறி மூட்டைகளைச் சுமந்து விற்ற அந்தக் காலத்தை எண்ணிப் பார்க்கிறேன்.
தமிழர் இனம் வாழ, திராவிட இனம் செழித்திட வாழ்த்துகள்!
இன்றைக்கு அந்தக் கைத்தறிக்குக் கிடைத் திருக்கின்ற மதிப்பு, மரி யாதை, கிராக்கி - இவை களையும் நான் எண்ணிப் பார்க்கிறேன். ஆகவே, இந்த 1 கோடியே 59 லட்சத்து 4 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் வேட்டிகளும், ஆக மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 23 ஆயிரம் பயனாளிக ளுக்கு இலவசமாக வழங் கப்படுகின்றன என்றால், இது ஒரு சாதாரண காரியம் அல்ல. இது ஒரு ஆழ்ந்த பொரு ளாதாரத் தத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறது. நெசவாளர்களுடைய குடும்பங்களுடைய கண்ணீரை இது துடைக் கின்றது. ஒரு காலத்திலே நெசவாளர்கள் இல்லங் களிலே தற்கொலைகள் நிகழ்ந்தன. அப்படிப் பட்ட அளவிற்கு அவர் களுடைய வாழ்விலே தரித்திரம் தாண்டவ மாடியது. நெசவாளி தன்னுடைய இயந்தி ரத்தை முடுக்கிவிட முடி யாமல், எத்தனையோ நெசவாளர்களுடைய வீடுகளிலே நெசவு செய் கின்ற தறிகள் தூங்கிக் கொண்டிருந்தன. அந் தத் தூக்கத்தைத் தட்டி யெழுப்பி, இன்றைக்கு அவனும் சீமான் ஆக லாம் - அவனும் பொரு ளாதாரத்திலே உயர லாம் - அவனும் மற்றவர் களோடு போட்டி போட்டுக்கொண்டு வாழலாம் என்ற அள விற்கு- ஒரு பொருளா தார வளர்ச்சியைத் தமிழ கத்திலே இந்த அரசு உருவாக்கியிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இந்தத் திட்டத்தின்மூலம், 217 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களி லுள்ள 11 ஆயிரம் கைத் தறி நெசவாளர்களும், 121 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களி லுள்ள 40 ஆயிரம் விசைத்தறி நெசவாளர் களும் இதன் காரண மாக வேலைவாய்ப்பு பெற்றுப் பயனடைந் திருக்கிறார்கள் என்ப தையும் மறந்து விடக் கூடாது. எல்லோர்க் கும் எல்லாமென்றி ருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்த வையம் என்ற புரட் சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலுக்கேற்ப, எல் லோர்க்கும் எல்லாம் என்று இருப்பதான உல கத்தை நோக்கி நடக் கின்ற இந்த வையத்திற்கு உறுதுணையாக இருப்பதுதான் கழக அரசு. கழக அரசினு டைய சாதனைகளிலே ஒன்றுதான், இங்கே நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச் சியிலே மகிழ்ச்சியோடு வந்து கலந்து கொண் டிருக்கின்ற உங்களுக் கெல்லாம் நான் முன் னதாகவே தமிழர் திரு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து - ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து களையும் தெரிவித்து - பொங்கல் நாள் வாழ்த் துகளைத் தெரிவித்து - பொங்கல் வாழ்க - தமிழர் திருநாள் வாழ்க என்று - தமிழர் இனம் வாழ, திராவிட இனம் செழித்திட உங்க ளோடு சேர்ந்து நானும் வாழ்த்துரை வழங்கி, விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதல மைச்சர் கலைஞர் உரையாற்றினார்.
வடமொழி ஆண்டுகளால் ஏற்படும் குழப்பம்!
நீ எந்த வருடம் பிறந்தாய்? என்று கேட்டால், அவன் தமிழ் வருடப் பிறப்பை எண்ணி, ஒரு வருடத்தின் பெயரைச் சொன்னால், அந்த வருடத்திலிருந்து இது வரை எண்ணிப் பார்த்தால் 60 வயதான ஒரு கிழவனுக்கு 17 வயதுதான் ஆகியிருக்கும் - நம்முடைய தமிழ் வருடக் கணக்கின்படி! உதாரணமாக நான் ரக்தாச்சி வருடத்தில் பிறந்ததாக எனக்குச் சொல்வார்கள் - பஞ்சாங்கத்தில் அப்படித்தான் எழுதியிருக்கிறார்கள். எனக்கு பிறந்த நாள் எழுதியவர்கள், அப்படித்தான் எழுதினார்கள். ரக்தாச்சி, குரோதன, அட்சய - என்ற இந்த மூன்று ஆண்டுகளைக் கடந்தால், பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதுத, பிரஜோபத்தி, ஆங்கிரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய (கைதட்டல்) என்று நீளும். அப்படி எண்ணிப் பார்த்தால் 38 வருடம் வரும். ஆக என்னுடைய வயது முப்பத்தி எட்டா? (கைதட்டல்) காரணம், நம்முடைய வருடக் கணக்கு வடமொழிக் கணக்கு. பிரபவ என்று ஆரம்பித்து அட்சய என்று முடிகின்ற அறுபது வருடங்களைத்தான் நாம் கணக்கிலே வைத்துக் கொள்கிறோம். இதைச் சொல்கின்ற காரணத்தால் ஆஸ்திகவாதிகள், ஆண்டவன் பக்தர்கள், சமஸ்கிருத மொழியிலே பாண்டித்யம் பெற்றோர், அந்த மொழியின் ஆர்வலர்கள் யாரும் என்னைத் தவறாகக் கருதக் கூடாது. நான் சொல்வது அவர்கள் படித்துப் பார்த்து புரிந்துகொள்ளக் கூடிய உண்மை. நமக்கு அறுபது வருடங்கள்தான் கணக்கு. ஒரு அறுபது வருடம் முடிந்ததும், மறுபடியும் சுழன்று சுழன்று வரும், அடுத்தடுத்த வருடங்களாக! அக்சய முடிந்ததும், பிரபவ தொடங்கும். பிரபவ வருடத்தில் தொடங்கி அக்சய வருடத்தில் முடியும். மீண்டும் பிரபவ தொடங்கும். இப்படிப் பார்த்தால் அக்சய வருடத்தில் ஒருவன் பிறந்திருந்தால் அவனுக்கு 50 வயதானாலும் கூட - அவனுடைய வயதை அடுத்த பிரபவ வருடத் திலே பார்த்தால், ஒரு வயது என்று தான் கணக்கிட முடியும். அப்படிச் சுழலுவதால் அந்தக் கணக்கு தமிழர்களுடைய ஆண்டுக் கணக்கை ஒழுங்குபடுத்தக் கூடிய திட்ட வட்டமாகச் சொல்லக் கூடிய கணக்காக அல்ல என்ற காரணத்தினாலே தான் 500 பெரும் புலவர்கள் ஆய்ந்தறிந்து, மாநாடு கூட்டி, - இன்றைக்கு நாம் பல்லவ புரத்திலே கூடியிருக் கிறோம் என்றால் - அன்றைக்கு அதே பல்லவ புரத்தில் வாழ்ந்த பெரும் புலவர் மறைமலை யடிகள் தலைமையில் எடுத்த முடிவு தான் தமிழர்களுக்கு தை மாதம் முதல் நாள் தான் புத்தாண்டு பிறந்த நாள் என்று (கைதட்டல்) உறுதி செய்தார்கள். அதனால் தான் போலும் - இந்த விழா கூட இன்றையதினம் அதே பல்லவபுரத்தில் நடக்கிறது - நான் கலந்து கொள்கிறேன்.
பல்லாவரத்தில் முதல் அமைச்சர் கலைஞர் (1.1.2011)
No comments:
Post a Comment