ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: இந்தியாவில் விற்பனை செய்யப் படும் பாலில் 68 விழுக்காடு கலப்படம் என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய உணவு பாது காப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் கூறியுள்ளதே! - பா.சிவாஜி, கீரனூர்
பதில் : 1. இதுகுறித்து மிகவும் வேதனை யும், வெட்கமும் அடைய வேண்டும் ஒவ்வொரு குடிமகனும்.
2. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தக்க தடுப்பு நடவடிக்கைகளை துரிதகதியில் எடுக்க முன்வர வேண்டும்.
3. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நல்ல மனிதநேயத்துடன், கவலையுடன் சுட்டிக் காட்டியுள்ளதற்கு நன்றி.
2. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தக்க தடுப்பு நடவடிக்கைகளை துரிதகதியில் எடுக்க முன்வர வேண்டும்.
3. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நல்ல மனிதநேயத்துடன், கவலையுடன் சுட்டிக் காட்டியுள்ளதற்கு நன்றி.
கேள்வி: எவ்வளவோ வளர்ச்சி அடைந்திருந்தும் இன்னும் நரிக்குறவர் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் பல இடங்களிலும் கூடாரம் அமைத்துக்கொண்டு வாழ்வதும், ஊசி மணி, பாசி மணி விற்பதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது? -க.சாவித்திரி கணேசன், அச்சுதமங்கலம்
பதில் : ஜிப்சி என்ற நாடோடிகள் உலகத் தின் பிற நாடுகளிலும் இருக்கவே செய்கின்றனர்.
நரிக்குறவர்களுக்கு நல்வாழ்வுச் சங்கம் அமைத்த ரகுபதிகள் போன்றவர்கள் மேலும் பலர் தேவைப்படுகின்றனர். கல்வியை, உத்தியோகத்தை அவர்களுக்குத் தந்து விட்டால் நிலைமை மாறிவிடும்.
கேள்வி: பொதுப்பட்டியல் என்றால் என்ன? விளக்கம் கூறுங்கள். -இல.திருமுருகன், மாமண்டூர்
(மற்ற இரண்டும்கூட தனி உரிமைகள் அல்ல; மத்திய அரசு அதிகாரத்திற்குட்பட்டு அதிலும் தலையை நுழைக்கலாம். விடுபட்ட விஷயங்கள் ஏதேனும் இருந்தால் அதில் சட்டம் இயற்றும் உரிமையும் மத்திய அரசுக்கே!)
கேள்வி: அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்புப் பிரிவு இருக்கும்பொழுது பிரா மணாள் என்று போட்டுக்கொள்வது குற்றமல்ல என்று கூறுவது பற்றி... - வ.மீரா.திருவானைக்காவல்
பதில் : அரசியல் சட்டத்தில் அடிப்படைக் கடமைகளில் 51A(h) பிரிவில், அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்கும் உரிமை, சீர்திருத்தம் ஆகிய எல்லாம் வளர்க்கப் பட வேண்டியது என்று கூறப்பட்டுள்ளதே! மற்ற பெரும்பான்மை மக்களை தாழ்த்துவதற்கு - அவமானப்படுத்துவதற்கு இடமே இல்லை.
கேள்வி: ஊழல் - எங்கிருந்து தொடங்கப் படுகிறது? - ப.சாமுவேல், சுசீந்திரம்
பதில் : ஊழல் - பூஜை அறையிலிருந்து தொடக்கம். வேண்டுதல் - பிரார்த்தனை என்பதே லஞ்சம் தானே!
கேள்வி: மத்திய அரசைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனரே?
- நாக.சுந்தரமூர்த்தி, சேடர்பாளையம்
- நாக.சுந்தரமூர்த்தி, சேடர்பாளையம்
பதில் : மத்திய அரசைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்பது சரி. கடவுளை மனிதர்கள் தானே காப்பாற்ற வேண்டியிருக்கிறது! எனவே கடைகோடி மனிதன்தான் கடவுளைவிட சிறந்த சக்தி வாய்ந்தவன் - புரிகிறதா?
கேள்வி: சித்தர்கள் பார்ப்பனர் எதிர்ப்பாளர்களா? - க.செயராசு ஆயக்காரன்புலம்
பதில் : சித்தர்கள் - பார்ப்பனர், மத எதிர்ப்பாளர்களே! சுதந்திரமாகச் சிந்தித்தவர்கள் அவர்கள். எனவே சித்தர்கள் ஆனார்கள் என்றார் தந்தை பெரியார்!
கேள்வி: கல்விக் கூடங்கள் பெருகுகின்றன. ஆனால் தேவையான விளையாட்டு மைதானம் இருப்பதில்லையே. சட்டப்படி சரியானது தானா?
- வேண்மா சென்னை -12
- வேண்மா சென்னை -12
பதில் : மாணவர்களுக்குப் போதிய விளையாட்டு ஆர்வம் பெருக வேண்டும். வெறும் கிரிக்கெட் போதை விளையாட்டு ஆகாது. உடலைப் பக்குவப் படுத்தும் கால்பந்து, கைப்பந்து, கூடைப் பந்து, சடுகுடு போன்ற வைகளை கற்றுக் கொள்ள ஆர்வம் தேவை. அரசு வழி செய்ய வேண்டும்.
கேள்வி: பார்ப்பனப் புரோகிதர்களை வரவழைத்துக் கூட சில காவல்நிலையங்களில் ஆயுத பூஜை நடத்தப் பட்டுள்ளதே?
- சூளை திருமாறன், சென்னை
- சூளை திருமாறன், சென்னை
பதில் : ஆயுத பூஜைக்கு ஆட்சித் தலைமையே வாழ்த்துக் கூறினால் இவை தடபுடலாக நடக்கத்தானே செய்யும்? அந்தோ, மதச்சார்பின்மையே உன் கதி இப்படியா?
கேள்வி: திராவிடர் இயக்கத்தில் பார்ப்பனர்கள் நுழைவு பற்றி.... - அ.தாவூத் பொறையார்.
பதில் : கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம் போல!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
3 comments:
பார்ப்பனன் உங்க கொள்கையை ஏற்றுக் கொண்ட பின்னர் அவன் நுழைந்தால் தான் என்ன தவறு?
\\கேள்வி: பார்ப்பனப் புரோகிதர்களை வரவழைத்துக் கூட சில காவல்நிலையங்களில் ஆயுத பூஜை நடத்தப் பட்டுள்ளதே?
- சூளை திருமாறன், சென்னை
பதில் : ஆயுத பூஜைக்கு ஆட்சித் தலைமையே வாழ்த்துக் கூறினால் இவை தடபுடலாக நடக்கத்தானே செய்யும்? அந்தோ, மதச்சார்பின்மையே உன் கதி இப்படியா?\\ தலைவர்கள் கிருஸ்துமஸ் வாழ்த்து சொல்லலாம், மிலாடி நபி, ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் சொல்லலாம், ஆயுத பூஜைக்கு மட்டும் வாயைப் பூட்டு போட்டுக்கணும், நல்ல இருக்குய்யா உங்க நியாயம்..........
\\கேள்வி: திராவிடர் இயக்கத்தில் பார்ப்பனர்கள் நுழைவு பற்றி.... - அ.தாவூத் பொறையார்.
பதில் : கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம் போல!\\ ஒட்டகத்தை விட்டுட்டு நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்களாம்?
Post a Comment