பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவராக பங்காரு லட்சுமணன் 2001 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இருந்தார்.
அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயுத நிறுவனம் ஒன்றின் பெயரால் இராணுவத் துக்கு எதிராகப் போலி ஆயுதப் பேர ஒத்திகை ஒன்றினை தெகல்கா இணையதளம் நடத்தியது.
தெர்மல் பைனாக்குலர் என்ற பொருளை இந்திய இராணுவத்துக்கு வாங்கிட சம்பந்தப்பட்ட பிஜேபி தலைவர் பங்காரு லட்சுமணன் பரிந்துரை செய்ய வேண்டும் - அதற்காக இலஞ்சமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தைக் கையில் வாங்கி மேசையின் அறையில் வைக்கப்பட்டது இரகசியமாகப் படம் பிடிக்கப்பட்டது (5.1.2001).
பிறகு தெகல்கா அதனை ஒளியும் பரப்பியது. மற்ற மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் அதனை சாங்கோ பாங்கமாக வெளியிட்டு, பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதன் காரணமாக பங்காரு லட்சுமணன் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும்படி நேர்ந்தது. இலஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவு 9இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது பதினொரு ஆண்டு காலமாக இந்த வழக்கு சி.பி.அய். நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பி.ஜே.பி. தலைவர் பங்காரு லட்சுமணன் செய்த குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்பட்டது என்று கூறி நீதிபதி கன்வல் ஜீத் அரோரா பங்காரு லட்சுமண னுக்கு 4 ஆண்டு சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். இப்பொழுது திகார் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளார்.
இதன் மூலம் பி.ஜே.பி. என்பது நேர்மையான அரசியல் கட்சி; தார்மீகப் பண்பாடுகளைக் கொண்டது என்று பறைசாற்றப்பட்டதெல்லாம் அக்மார்க் பொய் என்பது அம்பலமாகி விட்டது.
இந்தத் தீர்ப்புக் குறித்து பிஜேபியின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டு இருப்பது மிகப் பெரிய நகைச்சுவையே. அது தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று; பி.ஜே.பி.க்கும் அந்த இலஞ்சத்துக்கும் சம்பந்தமில்லை என்று மிக சாமர்த்தியமாகச் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் ஒன்றை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். 11 ஆண்டுகளுக்கு முன் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் என்ன கூறினார்? கட்சிக்காக நன்கொடையாக அந்தப் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டது என்று கூற வில்லையா?
ஆக கட்சிக்காக ஆயுத பேர ஊழல் நடந்தது என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடவில்லையா?
உண்மை இவ்வாறு இருக்க பங்காரு லட்சுமணன் இலஞ்சம் பெற்றதை கட்சியைச் சம்பந்தப்படுத்திப் பார்க்கக் கூடாது என்பது - பங்காரு லட்சுமணன் பெற்ற இலஞ்சத்தைவிட மிக மோசமான ஒழுக்கமற்ற கருத்தாகும். இதன் மூலம் பி.ஜே.பி. என்பது, அவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்தைப் போல ஒழுக்கமற்றது ஆபாசமானது என்பது விளங்கவில்லையா?
நமக்குள்ள வருத்தம் என்ன என்றால், பிஜேபியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந் தவர் பலி கொடுக்கப்பட்டுள்ளாரே என்பதுதான்; வெறும் ஒரு லட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்றதற் காக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் 4 ஆண்டுத் தண்டனை பெற்றுள்ளார்.
இதைவிட பிஜேபியில் பெருங் கொள்ளை அடித்தவர்கள், பெருங்குற்றங்கள் செய்தவர்கள் எல்லாம் எந்தவிதத் தண்டனைக்கும் ஆட்படாமல் சுதந்திரமாக ராஜ நடைபோட்டுத் திரிந்து கொண்டுள்ளார்களே - என்பதுதான் நமது வேதனை.
குற்றங்களை யார் செய்தாலும் அது தவறுதான் - தண்டனை அளிக்கப்பட வேண்டும்தான். அதே நேரத்தில் பெரிய பெரிய குற்றங்களைச் செய்த வர்கள் தப்பித்துக் கொள்கிறார்களே. அது ஏன் என்பதுதான் நமது நியாயமான கேள்வியாகும்.
குற்றங்களை யார் செய்தாலும் அது தவறுதான் - தண்டனை அளிக்கப்பட வேண்டும்தான். அதே நேரத்தில் பெரிய பெரிய குற்றங்களைச் செய்த வர்கள் தப்பித்துக் கொள்கிறார்களே. அது ஏன் என்பதுதான் நமது நியாயமான கேள்வியாகும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மோடியின் முகவரி
- வெள்ளுடைவேந்தர்
- புரட்சிப் பெண்ணாக உருவாகுங்கள்!
- கட்சிக் குரலில் பேசுகிறார்கள்
- ராஜபக்சேவின் வாலை நிமிர்த்த முடியாது
1 comment:
sariyaa ketteenga...!
Post a Comment