Sunday, April 1, 2012

முட்டாள்தி(த)னம்


ஏப்ரல் முதல் தேதி முட்டாள்தினம் - உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படுகிறது. ஏதோ இந்த ஒரு நாளில்தான் முட்டாள்தனம் முடி சூட்டி நிற்கிறதா?
மத நம்பிக்கையாளர்கள் கடவுள் காலைக் கட்டிப் பிடித்து உருளுபவர்கள், சாத்திரங்களின் பாதார விந்தங்களில் தங்கள் அறிவைப் புதைத்துக் கொள் பவர்கள் ஒவ்வொரு நாளில் மட்டுமல்ல; ஒவ்வொரு நொடி யிலும் முட்டாள்தனத்தின் முழுப் பங்கையும் சுளையாக விழுங்கக் கூடியவர்கள் தானே!
உலகில் ஏப்ரல் முதல் தேதி முட்டாள்தனமாக வந்தது எப்படி?
ஏப்ரல் முதல் நாள்தான் ரோமானியர்களுக்குப் புத்தாண்டு பிறந்த நாள். அய்ரோப்பிய நாடுகளிலும் இது நடைமுறையாகவும் இருந்தது.
இது சனவரி முதல் தேதிக்கு எப்படி மாற்றப் பட்டது? 1562இல் உலகக் கத்தோலிக்கர்களின் தலைவ ரான போப் கிரகோரி, ஜார்ஜியன் எனும் புதிய நாள்காட்டி (காலண்டர்)யை அறிவித்தார். அதன்படிதான் சனவரி ஒன்று ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால் இங்கிலாந்து போன்ற நாடுகள் அதனை ஏற்கவில்லை; ஏப்ரல் முதல் தேதியைத்தான் புத்தாண்டுப் பிறப்பாகக் கடைப்பிடித்தனர்.
வேறு சில நாடுகளுக்குப் புதிய மாற்றம் பற்றிய தகவலே இல்லாததால் ஏப்ரல் முதல் தேதியையே கட்டிக் கொண்டு அழுதனர்.
சனவரி முதல் தேதியை கடைப்பிடித்தவர்கள் ஏப்ரல் முதல் தேதியைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கடைப்பிடித்த வர்களை ஏப்ரல் முட் டாள்கள் என்று கேலி செய் தனர். நாளடைவில் இந்த ஏப்ரல் முதல் தேதி என்பதை முட்டாள்தனம் (April Fool) என்று ஒரு நாளையே நிலை நிறுத்தினர். இந்நாளில் விதம் விதமான யூகங்களைப் புனைந்து ஏப்ரல்ஃபூல் என்று மற்றவர்களை ஏமாறச் செய்வதில் தனி ஆனந்தம்! சரி, நம் தமிழ்நாட்டுக்கு வருவோம்.
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகள் தமிழாண்டுகள் என்று கூறப்பட்டன. என்னடா விளக்கம் என்றால் நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன்  என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் இந்த 60 ஆண்டுகள் என்று கூறினர். அப்படிக் கூறப்பட்ட பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடியும் அத்தனைப் பேர்களில் ஒன்றுகூட தமிழ்ப் பெயர் கிடையாது. இதற்குப் பெயர்தான் தமிழ் ஆண்டு களாம். (நன்றாகச் சிரித்துத் தொலையுங்கள்).
இந்த நிலையில் தமிழ் அறிஞர்களின் கருத்துக் களை ஏற்றும், திராவிடர் கழகத்தின் தொடர் வற் புறுத்தலை மதித்தும், தமக்கே உரிய தமிழ் உணர்வோடும் கலைஞர் அவர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து சட்டமும் செய்தார். ஆனால் செல்வி ஜெயலலிதா தலை மையில் அ.இ.அ.தி.மு.க. அரசு அந்தச் சட்டத்தை மாற்றி சித்திரை ஒன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று (ஆபாச பிறப்பை அடிப்படையாகக் கொண்டது) புதிய சட்டம் பிறப்பித்து விட்டது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் முட்டாள் தினம் இப்பொழுது யாருக்குச் சொந்தம்? - மயிலாடன்


.
 

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...