Friday, December 23, 2011

சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் வரை நீங்கள் என்ன செய்யக்கூடாது?


சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் வரை நீங்கள் நீந்தக் கூடாது என்று உங்கள் பெற்றோர் உங்களிடம் கூறியிருக்கலாம். ஆனால் சாதாரணமாக உணவு அருந்திய பிறகு சாதாரணமாக நீந்துவது ஆபத்தானது என்று கூறப்படுவதற்கு  எந்த ஆதாரமும் இல்லை. நீச்சல் குளங்கள் பொது வாகவே ஆபத்து நிறைந்த இடங்கள் அல்ல. இறுக்கமான ஆடை அணிந்து கொள்வது, காய்கறிகள் நறுக்குவது, நாயை நடக்க வைத்து அழைத்துச் செல்வது, ஒரு செடியை வெட்டுவது ஆகியவைகளால் உங்களை நீங்கள் அதிகமாகக் காயப்படுத்திக் கொள்ளக்கூடும் என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சால் ஆன காது குடைப்பான், கார்ட்போர்ட் பெட்டிகள், காய்கறிகள், வேது பிடித்தல், காய்ந்த தாவர பஞ்சு போன்ற உடம்பு தேய்க்கும் ஸ்பான்ச் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.  இவை அனைத்தும் ஆபத்து மிகுந் தவையாக ஆகி வருகின்றன. உணவருந்திய பிறகு, ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்கு அதிகமாக செல்லும் என்ற காரணத்தால்தான் பொதுவாக உணவருந்திய பிறகு  நீந்தக்கூடாது என்று கூறப்பட்டது. அவ்வாறு நீந்தினால் கால்களுக்கு அதிக ரத்தம் செல்லாமல் தசைப் பிடிப்பு ஏற்படலாம் என்று கருதப்பட்டது.

(உன் வயிற்றில் உள்ள உணவு உன்னை நீரில் மூழ்கடித்து விடும் என்றும் சிலர் கூறுவதுண்டு),  நீந்துவதற்கு முன்பாக உணவருந்தினால் கூட, அதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பெல்லாம், வயிற்றின் பக்கத்தில் சிறிது வலியும், வாந்தி வருவது போன்ற குமட்டலும் மட்டும்தான்.

உணவருந்திய பிறகு நீந்துவதால் பெரிதாக எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாது. மிகவும் ஆபத்தானது எதுவென்றால், நீர் அருந்தாமல் இருப்பதாலோ அல்லது பட்டினி கிடப்பதால் ஏற்படும் பலவீனத்தாலோ உடலில் ஏற்படும் நீரிழப்புதான் (Dehydration) உணவு உண்டபின் நீந்துவதால் வயிற்றில் இருந்து உணவு வாய்க்குத் திரும்ப வரும் வாய்ப்பு இருப்பதால், அவ்வாறு வரும்போது தரையில் இல்லாமல் நீரில் இருந்தால் ஆபத்து அதிகமாக இருக்கும் என்பதை பொது அறிவுடன் சிந்திக்கவேண்டும் என்று  ஆபத்துகளைத் தடுத்து நிறுத்தும் ராயல் சங்கம்   (Royal Society for the Prevention of Accidents)  தெரிவிக்கிறது.

2002 ஆம் ஆண்டுக்கான இந்த சங்கத்தின் அறிக்கையில், இங்கிலாந்தில் ஓராண்டு காலத்தில் ஏற்பட்ட விபத்துகளின் காரணங்களைக் கீழ்க்கண்டவாறு பட்டியல் இட்டுள்ளது.

பயிற்சியாளர்கள்                71,309
இறுக்கமான ஆடைகள்            12,003
கார்ட்போர்டு பெட்டிகள்            10,492
வீட்டிற்குள் இருக்கும் நீச்சல் குளம்   8,795
பஞ்சு காதுகுடைப்பான் 8,751
கால்சட்டைகள் 8,455
மரக்குச்சிகள் 8,193
வேதுபிடித்தல் 1,301
பஞ்சுதேய்ப்பான்     942

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

3 comments:

Chandru said...

why should we take rest after a lunch.http://chandroosblog.blogspot.com/2010/08/blog-post.html

rajamelaiyur said...

பயனள்ள தகவல் நன்றி

ravikumar said...

good

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...